புத்தாண்டை ஹட்ரிக் கோலுடன் ஆரம்பித்த ரொனால்டோ

83

தனது கால்பந்து வாழ்வில் 36 ஆவது ஹட்ரிக் கோலை பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ, க்யாக்லியாரி அணிக்கு எதிராக இத்தாலி சிரீ A போட்டியில் ஜுவன்டஸ் அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.

இத்தாலி லீக் தொடரில் புத்தாண்டில் தனது சொந்த மைதானத்தில் முதல் போட்டியில் திங்கட்கிழமை (06) களமிறங்கிய ஜுவன்டஸ் முதல் பாதியில் கோல்பெற தடுமாறியபோதும் இரண்டாவது பாதியில் நட்சத்திர வீரர் ரொனால்டோ தனது சாகச ஆட்டத்தை காண்பித்தார். 

பார்சிலோனா, ரியல் மெட்ரிட் முதலிடத்திற்கு கடும் போட்டி

குளிர்கால இடைவெளிக்குப் பின்னர் ஆரம்பாகி இருக்கும் ………

இந்தப் போட்டியில் பெற்ற வெற்றியுடன் சீரி A புள்ளிப்பட்டியலில் ஜுவன்டஸ் முதலிடத்தில் இருக்கும் இன்டர் மிலானுடன் சரிசமமாக  45 புள்ளிகளை பெற்றபோதும் கோல் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. எனினும் ஜுவன்டஸ் தற்காலிகமாக முதலிடத்தை பெற்றபோதும் திங்களன்று நடந்த நெபோலி அணிக்கு எதிராான போட்டியில் இன்டர் மிலான் 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டி முதலிடத்திற்கு மீண்டும் முன்னேற்றம் கண்டது. 

எனினும் இந்தப் போட்டியின் முதல் பாதியில் தற்காப்பு ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்திய க்யாக்லியாரி, ஜுவன்டஸின் பல கோல் வாய்ப்புகளையும் தடுத்தது. பின்கள வீரர் மெரி டெமிரால் பந்தை தலையால் முட்டி கோலை நோக்கி செலுத்தியபோது ஜுவன்டஸ் அணிக்கு கோல்பெறும் பொன்னான வாய்ப்பு ஒன்று கிட்டியது. எனினும் அந்தப் பந்து பட்டும் படாமலும் வெளியேறியது.  

முதல் பாதி: ஜுவன்டஸ் 0 – 0 க்யாக்லியாரி

எனினும் தவறுகளை சரிசெய்து ஆடிய ஜுவன்டஸ் அணியை இரண்டாவது பாதியில் க்யாக்லியாரி வீரர்களால் தற்காத்துக் கொள்ள முடியவில்லை. குறிப்பாக, போர்த்துக்கல் நட்சத்திரம் ரொனால்டோ புத்தாண்டில் அதிரடி ஆரம்பத்தை வெளிப்படுத்தினார். 

இலங்கை கால்பந்துக்கு ஏமாற்றம் தந்த 2019

ஐரோப்பிய கழகங்களில் லிவர்பூல் அணியின் எழுச்சி……………

49 ஆவது நிமிடத்தில் ரக்னர் கிளவான் பந்தை க்யாக்லியாரி கோல் எல்லைக்குள் பரிமாற்ற அதனை பெற்ற ரொனால்டோ கோல் காப்பாளர் ரொபின் ஒஸ்லேனையும் முறியடித்து எதிர்ப்பு இன்றி கோல் பெற்றார். பின்னர் போல் டிபாலா மீது மார்கோ ரொக் செய்த தவறினால் பெற்ற பெனால்டி வாய்ப்பைக் கொண்டு ரொனால்டோ இரண்டாவது கோலை பெற்றார்.   

தொடர்ந்து 82 ஆவது நிமிடத்தில் எதிரணி பாதுகாப்பு அரணை முறியடித்து ரொனால்டோ தனது ஹட்ரிக் கோலை புகுத்தினார். ஒரு நிமிடத்திற்கு முன்னதாக கொன்சலோ ஹிகுவைன் மற்றொரு கோலை பெற்றிருந்தார். 

34 வயதான ரொனால்டோ பெறும் 36 ஆவது லீக் ஹட்ரிக் இதுவாகும். இது தனது போட்டியாளரான லியோனல் மெஸ்ஸியை விடவும் இரண்டு ஹட்ரிக் கோல்கள் அதிகமாகும். இந்தப் பருவத்தில் அவர் 13 சிரீ A கோல்களுடன் மொத்தம் 15 கோல்ளை பெற்றுள்ளார்.  

முழு நேரம்: ஜுவன்டஸ் 4 – 0 க்யாக்லியாரி

கோல் பெற்றவர்கள்

ஜுவன்டஸ் – ​ கிறிஸ்டியானோ ரொனால்டோ 49’, 67’ (பெனால்டி), 82’, கொன்சலோ ஹிகுவைன் 81’