பார்சிலோனா, ரியல் மெட்ரிட் முதலிடத்திற்கு கடும் போட்டி

58

குளிர்கால இடைவெளிக்குப் பின்னர் ஆரம்பாகி இருக்கும் ஸ்பெயின் லா லிகா தொடரின் முக்கிய இரு போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (05) அதிகாலை நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,

பார்சிலோனா எதிர் எஸ்பான்யோல்

சீன முன்கள வீரர் வூ லீ கடைசி நேரத்தில் போட்ட கோல் மூலம் ஸ்பெயின் லா லிகாவில் கடைசி இடத்தில் இருக்கும் எஸ்பான்யோல் அணி முதலிடத்தில் இருக்கும் பார்சிலோனாவுக்கு இடையிலான போட்டியை 2-2 என்ற கோல் வித்தியாசத்தில் சமநிலை செய்தது. 

தோல்வி இன்றி ஓர் ஆண்டை பூர்த்தி செய்தது லிவர்பூல்

அன்பீல்டில் நடைபெற்ற செபீல்ட் யுனைடட் அணிக்கு எதிரான ப்ரீமியர் லீக்…

தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டேவிட் லோபார்ஸ் தலையால் முட்டி பெற்ற கோலினால் எஸ்பான்யோல் முதல் பாதியில் 1-0 என முன்னிலை பெற்றது. 

எனினும், இரண்டாவது பாதியில் லுவிஸ் சுவாரஸ் 50ஆவது நிமிடத்திலும் ஆர்டுல் விடால் தலையால் முட்டி 59 ஆவது நிமிடத்திலும் பெற்ற கோல்கள் மூலம் பார்சிலோனா போட்டியின் ஆதிக்கத்தை தன்வசமாக்கியது.  

இந்நிலையில் மார்டியஸ் வார்கஸ் பரிமாற்றிய பந்தை பதில் வீரரான வூ 88 ஆவது நிமிடத்தில் கோலாக மாற்றி பார்சிலோனாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். பார்சிலோனாவுக்கு எதிராக கோல் பெற்ற முதல் சீன வீரராகவும் இதன்மூலம் அவர் பதிவானார். 

எனினும் 10 நிமிட இடைவெளிக்குள் இரட்டை மஞ்சள் அட்டைகளை பெற்ற பார்சிலோனா வீரர் பிரான்கி டி ஜொங் 75 ஆவது நிமிடத்தில் வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

எஸ்பான்யோல் அணி 2009 தொடக்கம் பார்சிலோனாவை தோற்கடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

பார்சிலோனா லா லிகா புள்ளிப்பட்டியலில் 40 புள்ளிகளை பெற்று கோல் வித்தியாசத்தில் அதே 40 புள்ளிகளை பெற்றிருக்கும் ரியல் மெட்ரிட்டை பின்தள்ளி முதலிடத்தில் உள்ளது. 

ரியல் மெட்ரிட் எதிர் கெடாபே

கெடாபே அணிக்கு எதிரான போட்டியில் ரியல் மெட்ரிட் 3-0 என நெருக்கடி இன்றி வெற்றியீட்டியது. 

குளிர்கால இடைவெளிக்குப் பின்னர் ஆரம்பமான முதல் போட்டியில் ரபேல் வரானே 34 ஆவது நிமிடத்தில் எதிரணி கோல் காப்பாளரை முறியடித்து முதல் கோலை பெற்றார்.  

மறுபுறம் மெட்ரிட் கோல்காப்பாளர் திபோட் கோர்டொயின் சிறப்பாக சில தடுப்புகளை செய்து முதல் பாதியில் தனது அணியை முன்னிலை பெறச் செய்தார். 

தொடர்ந்து டோனி க்ரூசின் ப்ரீ கிக்கை தலையால் முட்டி 53 ஆவது நிமிடத்தில் ரியல் மெட்ரிட்டுக்கு இரண்டாவது கோலை பெற்றுக்கொடுத்தார் ரபேல் வரானே. 

போட்டியின் மேலதிக நேரத்தில் ஆட்டத்தின் கடைசி உதையாக லூகா மொட்ரிக் கோல் பெற ரியல் மெட்ரிட் தனது இலகு வெற்றியை பூர்த்தி செய்தது.  

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<