இலங்கை கால்பந்துக்கு ஏமாற்றம் தந்த 2019

96

ஐரோப்பிய கழகங்களில் லிவர்பூல் அணியின் எழுச்சி, ஆசிய மட்டத்தில் கட்டாரின் சாகசங்கள், ரொனால்டோ, மெஸ்ஸியின் வழக்கமான திறமைகளுடனேயே 2019ஆம் ஆண்டு கால்பந்து உலகம் எம்மை கடந்து சென்றது. என்றாலும் தேசிய அளவில் இலங்கை கால்பந்து அணியினர் குறிப்பிடும்படி பெரிதாக எந்த சாதனையும் புரியாத, தோல்விகண்ட ஆண்டாகவே 2019 இருந்தது. 

ஆறாவது தடவையாகவும் குளோப் விருதை வென்றார் ரொனால்டோ

சிறந்த கால்பந்து வீரருக்கான குளோப் விருதை போர்த்துக்கல்…

17 ஆவது ஆசிய கிண்ண தொடருடனே 2019 ஆம் ஆண்டு ஆரம்பமானது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஜனவரி 5 தொடக்கம் பெப்ரவரி முதலாம் திகதி வரை நடைபெற்ற ஆசிய கிண்ணத்தில் அடுத்த பிஃபா உலகக் கிண்ணத்தை நடத்தப்போகும் கட்டார் அணி கிண்ணத்தை வென்றது. 

காலிறுதியில் தென் கொரியாவையும், அரையிறுதியில் ஐக்கிய அரபு இராச்சியத்தையும் வீழ்த்திய கட்டார் இறுதிப் போட்டியில் ஜப்பானை 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 

டயலொக் சம்பியன்ஸ் லீக்கில் சம்பியன் அணியை தீர்மானிக்கும் போட்டி பெப்ரவரி மாதம் நடைபெற்றது. தீர்மானமிக்க இந்த மோதலில் களுத்தறை ப்ளு ஸ்டாரை 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டிபெண்டர்ஸ் கால்பந்து கழகம் கிண்ணத்தை சுவீகரித்தது.  

தோல்வி மேல் தோல்வி

தேசிய மட்டத்தில் கொழும்பு கால்பந்து கழகம் 2019 AFC கிண்ண தகுதிகாண் போட்டியில் ஆடியது தான் இலங்கை ரசிகர்களின் புத்தாண்டின் முதல் எதிர்பார்ப்பாக இருந்தது. பூட்டானின் டிரான்ஸ்போட் யுனைடட் கழகத்தை முதல் தகுதிகாண் சுற்றில் எதிர்கொண்டது கொழும்பு கால்பந்து கழகம். 

இதில் பெப்ரவரி 20 ஆம் திகதி இலங்கையில் நடந்த முதல் போட்டியில் 7-1 என்ற கோல் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்ற கொழும்பு, பெப்ரவரி 27 ஆம் திகதி பூட்டானின் திம்புவில் நடைபெற்ற இரண்டாவது சுற்றில் 2-1 என வெற்றி பெற்று அடுத்த சுற்றில் சென்னையின் கால்பந்து கழகத்தை எதிர்கொள்ள தகுதி பெற்றது. 

எனினும், மார்ச் 6ஆம் திகதி சொந்த மண்ணில் நடந்த போட்டியை கொழும்பு கோலின்றி சமநிலை செய்தபோதும் மார்ச் 13 ஆம் திகதி இந்தியாவில் நடந்த போட்டியை 1-0 என போராடித் தோற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை. 

மறுபுறம் மார்ச் மாதம் நேபாளத்தில் நடைபெற்ற பெண்களுக்கான SAFF சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை மகளிர் அரையிறுதி வரை முன்னேறியபோதும் அரையிறுதியில் நேபாளத்திடம் 4-0 என மோசமான தோல்வி ஒன்றை சந்தித்தது.   

மார்ச் மாதமாகும்போது இலங்கை 23 வயதுக்கு உட்பட்ட அணி 23 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய சம்பியன்ஷிப் தகுதிகாண் போட்டிகளில் ஆடி ஏமாற்றத்தை சந்தித்தது. B குழுவில் ஆடிய இலங்கை பலஸ்தீனத்திடம் 9-0 என தோற்றதோடு பஹ்ரைனுக்கு எதிராகவும் 9-0 என தோல்வியை சந்தித்தது. ஒப்பீட்டளவில் பங்களாதேசுக்கு எதிராக 2-0 என கௌரவமான தோல்வி ஒன்றை சந்தித்தது. 

அடுத்து இலங்கை கால்பந்து தேசிய அணி உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் களமிறங்கியது. பெரும் ஏற்பாடுகளுடன் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் மக்காவு அணியை இலங்கை சந்தித்தது. 

Embed – https://www.thepapare.com/pcb-announces-2020-pakistan-super-league-schedule-tamil/ 

கடந்த ஜூன் 6ஆம் திகதி மக்காவுவில் நடைபெற்ற முதல் சுற்றில் மக்காவு அணி 1-0 என வெற்றி பெற்றது. 2022 பிஃபா உலகக் கிண்ண போட்டி மாத்திரமன்றி 2023 ஆசியக் கிண்ண ஆரம்பச் சுற்றுப் போட்டியாகவுமே இந்தத் தகுதிகாண் போட்டி நடைபெற்றது. 

எனினும், ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக மக்காவு அணி இலங்கை வர மறுத்ததால் அந்நாட்டு கால்பந்து சம்மேளத்திற்கு தடைவிதித்த பிஃபா ஒழுக்காற்றுக் குழு, அந்தப் போட்டியில் இலங்கைக்கு வெற்றியை வழங்கியது. 

இதனால், இந்த தகுதிகாண் போட்டிகளில் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்ற இலங்கை அணிக்கு வலுவாக H குழுவில் ஆட வேண்டி ஏற்பட்டது. இதில்  துர்க்மனிஸ்தான், தென் கொரியா, லெபனான், வட கொரியா ஆகிய நான்கு அணிகளுடனான இந்த போட்டிகளில் ஐந்தில் தோற்று வெளியேறியது.  

இதேவேளை, இந்தியாவில் ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற 15 வயதுக்கு உட்பட்ட SAFF சம்பியன்சிப் கால்பந்துப் போட்டியும் இலங்கைக்கு ஏமாற்றத்தையே தந்தது. இதில் இலங்கை ஆடிய நான்கு போட்டிகளில் மூன்றில் தோற்றதோடு பூட்டானுடனான போட்டியில் மாத்திரம் வெற்றியீட்டியது.  

நேபாளத்தில் செப்டெம்பர் மாதம் நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட SAFF சம்பியன்சிப் கால்பந்துப் போட்டியிலும் இலங்கைக்கு இதே நிலை தான். இலங்கை இளம் அணி முதல் சுற்றில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளை எதிர்கொண்டு தோல்வியை சந்தித்து வெளியேறியது. 

16 வயதுக்கு உட்பட்ட 2020 AFC சம்பியன்சிப் தகுதிகாண் போட்டியில் பங்கேற்ற இலங்கை அணியும் தோல்விகளையே சந்தித்தது. A குழுவில் இலங்கை அணி ஆடிய துர்க்மனிஸ்தான், ஜோர்தான், குவைட், நேபாளம் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அதிக கோல்களை விட்டுக்கொடுத்து தோல்வியை சந்தித்தது. 

மலேசியாவின் கோலாலம்பூரில் கடந்த ஒக்டோபர் ஆரம்பத்தில் அந்நாட்டு தேசிய அணியுடன் நட்புறவுப் போட்டி ஒன்றில் ஆடிய இலங்கை தேசிய அணி 6-0 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 

பின்னர் நவம்பர் மாதம் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட AFC சம்பியன்சிப் தகுதிகாண் போட்டியில் ஆடிய இலங்கை இளையோர் அணி கட்டார், யெமன் மற்றும் துர்க்மனிஸ்தான் அணிகளிடம் தோல்விகளை சந்தித்தது. 

கடைசியாக நேபாளத்தில் டிசம்பர் 1 முதல் 10 ஆம் திகதிவரை நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை கால்பந்து அணி இழுபறிக்குப் பின்னரே பங்கேற்றது. இதில் எந்த வெற்றியும் இன்றி பதக்கமும் இல்லாமல் நாடு திரும்பியது. 

இலங்கை கால்பந்தின் மறுசீரமைப்பு பற்றி அதிக விவாதங்களுடனேயே 2020ஆம் ஆண்டில் காலடி வைத்துள்ளோம்.           

லிவர்பூல் ஆதிக்கம்

Insert Image – Football World cup 

சர்தேச கால்பந்து போட்டியில் முக்கிய நிகழ்வாக இந்த ஆண்டு பெண்கள் உலகக் கிண்ண போட்டி பிரான்சில் ஜூன் 7 தொடக்கம் ஜூலை 7 வரை நடைபெற்றது. ஐக்கிய அமெரிக்க, ஆண்கள் கால்பந்து போட்டியில் சோபிக்காதபோதும் அமெரிக்கப் பெண்கள் உலகில் முதன்மையானவர்கள் என தம்மை நிரூபித்தனர். காலிறுதியில் பிரான்ஸை வீழ்த்திய அமெரிக்கா, அரையிறுதியில் இங்கிலாந்தை தோற்கடித்து இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை 2-0 என வென்று கிண்ணத்தை கைப்பற்றியது.  

கழக உலகக் கிண்ணம் லிவர்பூல் வசம்

ரொபார்டோ பர்மினோ மேலதிக நேரத்தில் பெற்ற கோல் மூலம்…

அமெரிக்க பெண்கள் தொடர்ச்சியாக உலகக் கிண்ணத்தை வெல்வது இரண்டாவது முறையாக இருந்ததோடு அதிகபட்சம் நான்கு உலகக் கிண்ணங்களை வென்றுள்ளது. 

எவ்வாறாயினும் 2019 ஆம் ஆண்டு எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த அணி என்றால் அது இங்கிலாந்தின் லிவர்பூல்தான். கடந்த ஜூன் முதலாம் திகதி மெட்ரிட் நகரில் நடந்த சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் அணியை  2-0 என வீழ்த்தி கிண்ணத்தை வென்ற லிவர்பூலுக்கு தொட்டதெல்லாம் வெற்றி தான்.

Insert Image – Liverpool 

கடந்த ஓகஸ்ட் 14ஆம் திகதி நடைபெற்ற ஐரோப்பிய சுப்பர் கிண்ணத்தில் செல்சியை எதிர்கொண்டது லிவர்பூல். போட்டியில் முழு நேரம் 2-2 என்ற கோல்களால் சமநிலை பெற 5-4 என்று பெனால்டியில் வெற்றி பெற்றது.   

கடைசியாக கடந்த டிசம்பர் 21 கட்டாரில் நடைபெற்ற கழக உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பிளமிங்கோ அணியை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்கடித்து உலக சம்பியனானது லிவர்பூல். 

இங்கிலாந்து ப்ரீமியர் லீக்கிலும் வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்த அந்த அணி 2019 ஆம் ஆண்டில் ஒரு தோல்வி கூட இல்லாமல் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. இப்படியே போனால் 30 ஆண்டுகளுக்குப் பின் ப்ரீமியர் லீக்கை வெல்ல அந்த அணிக்கு பிரகாசமான வாக்கு இருக்கிறது.      

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<