இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் புத்தாண்டின் முதல் நாளான நேற்று (01) முக்கிய சில போட்டிகள் நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு.
ஆர்சனல் எதிர் மன்செஸ்டர் யுனைடட்
மன்செஸ்டர் யுனைடட் அணியின் மந்தமான ஆட்டத்திற்கு மத்தியில் புதிய முகாமையாளர் மைக்கல் ஆர்டெடாவின் கீழ் ஆர்சனல் அணி 2-0 என வெற்றியீட்டியது.
தோல்வியுறாத அணியாக ஆண்டை பூர்த்தி செய்த லிவர்பூல்
இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (29)…
எமிரேட் அரங்கில் நடைபெற்ற போட்டியில் வருகை அணியான மன்செஸ்டர் யுனைடட், போல் பொக்பா காயம் காரணமாக விளையாடாத நிலையிலேயே களமிறங்கியது. எனினும், அந்த அணி அந்த போட்டியை சிறப்பாக ஆரம்பித்தது.
எனினும் சயெட் கொலசினாக் பரிமாற்றிய பந்தை எட்டாவது நிமிடத்தில் நிகொலஸ் பெபே கோலாக மாற்றி ஆர்சனலை முன்னிலை பெறச் செய்தார்.
இதனைத் தொடர்ந்து போட்டியை தன்வசமாக்கிய ஆர்சனல் சார்பில் 42 ஆவது நிமிடத்தில் ஸ்கரிஸ் பபஸ்டதோபோலஸ் நெருங்கிய தூரத்தில் இருந்து உதைத்த கோல் மூலம் வலுவான நிலையை பெற்றது.
இரண்டாவது பாதியில் கோல் எதுவும் விழாத நிலையில் ஆர்சனல் வெற்றியை உறுதி செய்துகொண்டது.
இந்த வெற்றியுடன் ஆர்சனல் ஏழு போட்டிகளின் பின் தனது சொந்த மைதானத்தில் முதல் வெற்றியை பெற்றுக்கொண்டது. அந்த அணி தற்போது புள்ளிப்பட்டியில் 10 ஆவது இடத்திற்கு முன்னேறியதோடு ஐந்தாவது இடத்தில் இருக்கும் மன்செஸ்டர் யுனைடட்டை விடவும் நான்கு புள்ளிகள் பின்தங்கியுள்ளது.
செல்சி எதிர் பிரைட்டன்
சீசர் அஸ்பிலிகியுடா ப்ரீமியர் லீக்கில் புத்தாண்டின் முதல் கோலை பெற்றபோதும் அலிரோச ஜஹன்பக்ஷ் கடைசி நிமிடங்களில் பெற்ற அபார ‘பைசிகள் கிக்’ கோலினால் செல்சி மற்றும் பிரைட்டனுக்கு எதிரான போட்டி 1-1 என சமநிலை பெற்றது.
அமெக்ஸ் அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முடிவின் மூலம் செல்சியிடம் தொடர்ச்சியாக ஒன்பது லீக் போட்டிகளில் சந்தித்த தோல்விக்கு பிரைட்டன் முடிவுகட்டியது.
இதில் செல்சி அணித்தலைவராக 100 ஆவது போட்டியில் களமிறங்கிய அஸ்பிலிகியுடா ஆரம்ப கோலை பெற்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் 84 ஆவது நிமிடத்தில் இடது பக்க மேல் மூலையில் இருந்து தலைக்கு மேலால் வந்த பந்தை தாவி உதைத்து ஜஹன்பக்ஷ் பிரைட்டன் சார்பில் பதில் கோல் திருப்பினார்.
செல்சி 36 புள்ளிகளுடன் தொடர்ந்து நான்காவது இடத்தை தக்கவைத்துக்கொண்டிருப்பதோடு பிரைட்டன் 14 ஆவது இடத்தில் நீடிக்கிறது.
மன்செஸ்டர் சிட்டி எதிர் எவர்டன்
எவர்டனுக்கு எதிராக புத்தாண்டின் முதல் போட்டியில் நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டி 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
ஆறாவது தடவையாகவும் குளோப் விருதை வென்றார் ரொனால்டோ
சிறந்த கால்பந்து வீரருக்கான குளோப் விருதை போர்த்துக்கல் மற்றும் ஜுவண்டஸ்…
ரஹீம் ஸ்டர்லிங், செர்கியோ அகுவேரா மற்றும் டேவிட் சில்வா இன்றியே சிட்டி அணி இந்தப் போட்டியில் களமிறங்கியது. போட்டியின் ஆரம்பத்தில் பிலிப் போடல் பந்தை வலைக்குள் செலுத்தியபோதும் அது ஓப் சைடாக இருந்தது.
இதனால் முதல்பாதி ஆட்டம் கோலின்றி முடிவடைந்த நிலையில் இரண்டாவது பாதியில் ஜோர்டன் பிக்போர்ட் தந்த பந்தைக் கொண்டு காப்ரியல் ஜேசுஸ் அபார கோல் ஒன்றை பெற்றார். ஏழு நிமிடங்களின் பின் ஜெசுஸ் இரண்டாவது கோலையும் பெற்று சிட்டியை 2-0 என முன்னிலை பெறச் செய்தார்.
இந்நிலையில் ரிச்சல்சன் 71 ஆவது நிமிடத்தில் பிரைட்டன் சார்பில் பெற்ற கோல் ஆறுதல் கோலாகவே இருந்தது.
இந்த வெற்றியுடன் மன்செஸ்டர் யுனைடட் இரண்டாவது இடத்தில் இருக்கும் லெஸ்டரை விடவும் ஒரு புள்ளி பின்தங்கி மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. எனினும் அந்த அணி ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூலை விடவும் 11 புள்ளிகள் பின்தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<