ஆறாவது தடவையாகவும் குளோப் விருதை வென்றார் ரொனால்டோ

163

சிறந்த கால்பந்து வீரருக்கான குளோப் விருதை போர்த்துக்கல் மற்றும் ஜுவண்டஸ் அணிகளின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றார்.

கடந்த மாதம் கால்பந்தின் மிக உயரிய விருதான பலோன்டீஓர் விருதை தவறவிட்ட ரொனால்டோ தொடர்ச்சியாக ஆறாவது முறையாக குளோப் விருதை வென்று சாதனை படைத்தார்.

பலோன் டீ ஓர் விருதை ஆறாவது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி

கால்பந்தின் மிக உயரிய விருதான பலோன்-டீ-ஓர் (Ballon d’or) விருது வழங்கும் நிகழ்ச்சி…

ஐரோப்பிய கழக கால்பந்து சங்கம் (.சி.) மற்றும் ஐரோப்பிய கால்பந்து வீரர்களின் முகவர்கள் சங்கம் (.எப்..) சார்பில் கழக மட்ட கால்பந்து போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு குளோபல் விருது வழங்கப்படும்.

அந்த வகையில் 2019ஆம் ஆண்டுக்கான குளோப் விருது வழங்கும் நிகழ்வு டுபாயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்றது. 

இதில் சிறந்த வீரருக்கான விருதை போர்த்துக்கல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ கைப்பற்றினார். இவர் ஆர்ஜென்டீனாவின் மெஸ்ஸி (பார்சிலோனா), நெதர்லாந்தின் வெர்ஜில் வான் டிஜிக் (லிவர்பூல்) ஆகியோரை பின்தள்ளி 6ஆவது முறையாக இந்த விருதைப் பெற்றுக் கொண்டார். இதற்குமுன் 2011, 2014, 2016, 2017, 2018 ஆகிய வருடங்களில் அவர் இந்த விருதை தனதாக்கினார்

தோல்வியுறாத அணியாக ஆண்டை பூர்த்தி செய்த லிவர்பூல்

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (29)…

இத்தாலிய சீரி தொடருக்கான 2018/19 பருவகாலத்தில் ஜுவண்டெஸ் அணி சம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்த ரொனால்டோ, நெஷனல் லீக் கால்பந்து தொடரில் போர்த்துக்கல் அணி சம்பியன் பட்டத்தை வெல்லக் காரணமாக இருந்தார்

மேலும் ஒரு முறை குளோப் கால்பந்து விருதை வெல்ல முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது. இந்த விருதை எனது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள கிடைத்தது உணர்ச்சிகரமான தருணமாக உள்ளது. அனைத்து விருந்தோம்பலுக்கும் நன்றி, விரைவில் உங்களை சந்திப்போம் துபாய்!” என்று ரொனால்டோ தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், சிறந்த வீராங்கனைக்கான குளோப் விருதை இங்கிலாந்தின் லூசி புரோன்ஸ் வென்றதுடன், சிறந்த பயிற்சியாளருக்கான விருதை லிவர்பூல் கழகத்தின் ஜெர்கன் க்ளொப் பெற்றுக் கொண்டார்.

அத்துடன், சிறந்த கழகத்துக்கான விருதை லிவர்பூல் கழகம் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<