டக்வெத்-லூயிஸ் முறையை உருவாக்கியவர்களில் ஒருவர் மரணம்

157
GETTY IMAGES

மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளின் முடிவுகளை தீர்மானிக்க உதவும் டக்வெத்-லூயிஸ் முறையினை கண்டுபிடித்தவர்களில் ஒருவரான கணிதவியலாளர் டொனி லூயிஸ் தனது 78ஆவது வயதில் நேற்று (1) காலமானர்.  

டி20 உலகக் கிண்ணத்துடன் ஓய்வு பெறும் மொஹமட் ஹபீஸ்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அனுபவ வீரரான மொஹமட் ஹபீஸ்……..

டொனி லூயிஸ் மற்றுமொரு கணிதவியலாளரான பிரான்ங் டக்வெர்த் உடன் இணைந்து கண்டுபிடித்த டக்வெத்-லூயிஸ் முறை முதன்முறையாக 1996ஆம் ஆண்டு இங்கிலாந்து – ஜிம்பாப்வே அணிகள் இடையில் நடைபெற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பயன்படுத்தப்பட்டிருந்தது. பின்னர் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணம் மூலம் டக்வெத்-லூயிஸ் முறையினை சர்வதேச கிரிக்கெட் வாரியம், மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகளின் முடிவுகளை தீர்மானிக்கும்  விதிமுறையாக உத்தியோகபூர்வமாக அறிவித்தது. 

எனினும், தற்போது டக்வெத்-லூயிஸ் முறை ஸ்டீவ் ஸ்டேர்ன் என்னும் கணிதவியாலாளர் மூலம் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, 2015ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

டொனி லூயிஸ் மூலம் உருவாக்கப்பட்ட டக்வெத்-லூயிஸ் முறை, பயன்பாட்டிற்கு வர முன்னர் மழை விதி (Rain Rule) மூலம், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளின் முடிவுகள் தீர்மானிக்கப்பட்டிருந்தன. இந்த மழை விதியில், அணிகள் இழக்கும் விக்கெட்டுக்களின் எண்ணிக்கை கருத்திற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

டக்வெத்-லூயிஸ் முறையினை உருவாக்கியவர்களில் ஒருவரான டொனி லூயிஸ் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் என்பதால், அவரின் மரணத்திற்கு இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB) தனது இரங்கல் செய்தியில், லூயிஸின் மரணம் கவலை தருகின்றது எனக் குறிப்பிட்டு கிரிக்கெட் விளையாட்டிற்கு அவர் ஆற்றிய சேவை திருப்பித்தர முடியாத கடன் எனவும் குறிப்பிட்டிருக்கின்றது. 

இதேநேரம், டொனி லூயிஸின் மரணத்திற்கு உலகில் உள்ள கிரிக்கெட் வீரர்களும், இரசிகர்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றனர். 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<