இந்தியா திரும்பிய ரோஹித் ; டெஸ்ட் தொடரில் விளையாடுவாரா?

India tour of Bangladesh 2022

141
Injured Rohit to consult expert in Mumbai

இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடமாட்டார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்டபோது, ரோஹித் சர்மாவின் பெருவிரலில் காயம் ஏற்பட்டது.

>> அடுத்தடுத்த வெற்றிகளுடன் முன்னேறும் கண்டி பல்கொன்ஸ் அணி

உடனடியாக மைதானாத்திலிருந்து வெளியேறிய ரோஹித் சர்மா, பங்களாதேஷ் இன்னிங்ஸ் முழுவதும் களமிறங்கவில்லை. குறித்த காலப்பகுதியில் வைத்தியசாலைக்கு இவர் சென்றிருந்ததுடன், பெருவிரலில் எழும்பு முறிவு ஏற்பட்டிருந்தமை ஸ்கேன் பரிசோதனையில் தெரியவந்தது.

அதன் பின்னர் எழும்பு முறிவுக்கான சிகிச்சையை பெற்றுக்கொண்டு திரும்பிய இவர், 8ம் இலக்க வீரராக களமிறங்கிய துடுப்பெடுத்தாடியிருந்தார். இதில் 28 பந்துகளுக்கு 51 ஓட்டங்களை விளாசி இந்திய அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச்சென்றிருந்தார். எனினும் துரதிஷ்டவசமாக இந்திய அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்திய அணி ஒருநாள் தொடரை 2-0 என இழந்துள்ள நிலையில், ரோஹித் சர்மா மும்பைக்கு புறப்பட்டுச் சென்று உபாதை குறித்து வைத்திய நிபுணர்களிடம் கலந்துரையாடவுள்ளார். எனவே அவர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடமாட்டார் என்பதுடன், டெஸ்ட் தொடருக்கு முன்னர் குணமடைவாரா? என்பது தொடர்பில் கேள்விக்குறியாகியுள்ளது.

ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் கலந்துக்கொள்வாரா? இல்லையா? என்பது தொடர்பில் உறுதியாக கூறமுடியாது என இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ராஹுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 14ம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<