நேற்றைய இந்திய அணியின் தோல்விக்குக் காரணம் வெளியானது

323
MS Dhoni

சிம்பாப்வேக்கு எதிராக நேற்று ஹராரேயில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 171 ஓட்ட  இலக்கை நோக்கிப் பயணித்த இந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்கள்  மட்டுமே எடுக்க முடிந்தது.

டோனி கடைசி வரை நின்று 17 பந்துகளில் 19  ஓட்டங்களை  மட்டுமே எடுத்தார். கடைசிப் பந்தில் நான்கு  ஓட்டங்கள்  தேவைப்படும்போது டோனியால் ஒரு  ஓட்டம் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்தத் தோல்விக்கு இந்திய துடுப்பாட்ட வீரர்கள்  செய்த ஏராளமான தவறுகள்தான் காரணம் என்று டோனி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘நாங்கள் ஆக்கபூர்வமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. சரியான முறையில் அடித்து நாங்கள் ஏராளமான விக்கெட்டுகளை இழக்கவில்லை. வீரர்கள் கேட்ச் பயிற்சியில் விக்கெட்டை இழந்தது போல் இருந்தது. உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் சிறப்பாக விளையாடலாம். ஆனால் இந்தியாஏ” அணியில் இருந்து இந்திய அணிக்கு வரும் போது அதிக நெருக்கடி இருக்கும். அவர்களுக்கு இந்தத் தோல்வி நல்ல பாடம்.  துடுப்பாட்ட வீரர்கள் ஏராளமான தவறுகளை செய்தனர். பந்து வீச்சில் நாங்கள் முதல் தரப் பந்து வீச்சாளர்கள் இல்லாமல் விளையாடவில்லை. பந்து வீச்சாளர்களின் லென்த் சரியாக அமையவி்ல்லை” என்றார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்