இரண்டாவது டெஸ்ட்டில் இருந்தும் விலகும் ரோஹித் சர்மா

121

பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் தலைவரான ரோஹித் சர்மா விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தொடரிலிருந்து வெளியேறும் கேன் வில்லியம்சன்!

பங்களாதேஷிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கே ஒருநாள் தொடரை அடுத்து தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகின்றது.

ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக நடைபெறும் இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த வார இறுதியில் நிறைவடைந்திருந்தது.

இந்த நிலையில் ரோஹிட் சர்மா இந்திய – பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் ஏற்பட்ட விரல் உபாதை காரணமாக, சட்டோக்ரம் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காது போயிருந்தார்.

ரோஹிட்  சர்மாவிற்கு விரல் உபாதை இன்னும் பூரணமாக குணமடையாத நிலையிலையே அவரினால் இரண்டாவது டெஸ்டிலும் விளையாட முடியாமல் போயிருக்கின்றது.

ரோஹிட் சர்மா இல்லாத நிலையில் இந்திய டெஸ்ட் அணி முதல் டெஸ்ட் போட்டி போன்று இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் KL. ராகுல் மூலம் வழிநடாத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என ஏற்கனவே முன்னிலை பெற்றிருக்க, இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (22) டாக்காவில் ஆரம்பிக்கின்றது.

இலங்கை கிரிக்கெட் அணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?

இதேவேளை தற்போது இந்தியாவின் மும்பை நகரில் சிகிச்கைகளைப் பெற்று வரும் ரோஹித் சர்மா இலங்கை அணியுடன் ஜனவரி மாத ஆரம்பத்தில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20I தொடர்களுக்கு பூரண உடற்தகுதியுடன் இருப்பார் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

>> கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<