Home Tamil ஆறுதல் வெற்றியுடன் T20 உலகக் கிண்ணத்தினை நிறைவு செய்த இந்தியா

ஆறுதல் வெற்றியுடன் T20 உலகக் கிண்ணத்தினை நிறைவு செய்த இந்தியா

281
ICC via Getty Images

இந்தியா மற்றும் நமீபிய அணிகள் T20 உலகக் கிண்ணத்தின் சுபர் 12 சுற்றுக்காக ஆடியிருந்த போட்டியில் இந்தியா 9 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

இவ்வெற்றியுடன் இந்திய அணி T20 உலகக் கிண்ணத்தொடரினை ஆறுதல் வெற்றியுடன் நிறைவு செய்ய, நமீபியா அணிக்கு இப்போட்டி சுபர் 12 சுற்றில் நான்காவது தோல்வியாக மாறுகின்றது.

>>இங்கிலாந்து அணியில் இணையும் ஜேம்ஸ் வின்ஸ்

சுபர் 12 சுற்றின் குழு 2 இல் காணப்படும் நமீபியா மற்றும் இந்திய அணிகள் T20 உலகக் கிண்ணத்தின் அரையிறுதி வாய்ப்பினை ஏற்கனவே இழந்த நிலையில், சுபர் 12 சுற்றின் கடைசி குழுநிலைப் போட்டியாக அமைந்த இந்த மோதல் துபாய் நகரில் ஆரம்பமாகியிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் விராட் கோலி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை நமீபிய வீரர்களுக்கு வழங்கினார்.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய நமீபிய கிரிக்கெட் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

நமீபிய அணியின் துடுப்பாட்டம் சார்பில் டேவிட் வியேஸே 26 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்கள் பெற்ற வீரராக மாற, இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர். இதோடு, ஜஸ்பிரிட் பும்ராவும் இந்திய அணிக்காக 2 விக்கெட்டுக்களை சுருட்டினார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 135 ஓட்டங்களை பதிலுக்கு அடைய துடுப்பாடிய இந்திய கிரிக்கெட் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 15.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 136 ஓட்டங்களுடன் அடைந்தது.

>>மேற்கிந்திய தீவுகள் அணியில் இணையும் ஜேசன் ஹோல்டர்

இந்திய அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் வெற்றியினை உறுதி செய்த ரோஹித் சர்மா அரைச்சதம் விளாசி 37 பந்துகளுக்கு 7 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 56 ஓட்டங்கள் பெற, ஆட்டமிழக்காமல் இருந்த KL ராகுல் உம் அரைச்சதம் ஒன்றுடன் 36 பந்துகளுக்கு 4 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 56 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

>>23 வருடங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் செல்லும் அவுஸ்திரேலியா!

நமீபிய அணியின் பந்துவீச்சில் ஜேன் பிரைலிங் ஒரு விக்கெட்டினை மாத்திரம் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்திய – நமீபிய அணிகள் இடையிலான போட்டியுடன் T20 உலகக் கிண்ணத்தின் அனைத்து குழுநிலைப் போட்டிகளும் நிறைவடைந்திருக்க, இந்த தொடரின் முதல் அரையிறுதியில் நாளை (10) இங்கிலாந்து அணி நியூசிலாந்தினை எதிர்கொள்ள இரண்டாவது அரையிறுதியில், பாகிஸ்தான் அவுஸ்திரேலிய அணியினை எதிர்வரும் வியாழக்கிழமை (11) எதிர்கொள்கின்றது.

போட்டியின் சுருக்கம்


Result


India
136/1 (15.2)

Namibia
132/8 (20)

Batsmen R B 4s 6s SR
Stephan Baard lbw b Ravindra Jadedja 21 21 1 1 100.00
Michael van Lingen c Mohammed Shami b Jasprit Bumrah 14 15 2 0 93.33
Craig Williams st Rishabh Pant b Ravindra Jadedja 0 4 0 0 0.00
Gerhard Erasmus c Rishabh Pant b Ravichandran Ashwin 12 20 1 0 60.00
Jan Nicol Loftie-Eaton c Rohit Sharma b Ravichandran Ashwin 5 5 0 0 100.00
David Wiese c Rohit Sharma b Jasprit Bumrah 26 25 2 0 104.00
JJ Smit c Rohit Sharma b Ravindra Jadedja 9 9 1 0 100.00
Zane Green b Ravichandran Ashwin 0 1 0 0 0.00
Jan Frylinck b 15 15 0 0 100.00
Ruben Trumpelmann b 13 6 1 0 216.67


Extras 17 (b 0 , lb 8 , nb 1, w 8, pen 0)
Total 132/8 (20 Overs, RR: 6.6)
Fall of Wickets 1-33 (4.4) Michael van Lingen, 2-34 (5.3) Craig Williams, 3-39 (7.4) Stephan Baard, 4-47 (9.1) Jan Nicol Loftie-Eaton, 5-72 (12.3) Gerhard Erasmus, 6-93 (14.6) JJ Smit, 7-94 (15.4) Zane Green, 8-117 (18.5) David Wiese,

Bowling O M R W Econ
Mohammed Shami 4 0 39 0 9.75
Jasprit Bumrah 4 0 19 2 4.75
Ravichandran Ashwin 4 0 20 3 5.00
Ravindra Jadedja 4 0 16 3 4.00
Rahul Chahar 4 0 30 0 7.50


Batsmen R B 4s 6s SR
KL Rahul b 54 36 4 2 150.00
Rohit Sharma c Zane Green b Jan Frylinck 56 37 7 2 151.35
Suryakumar Yadav b 25 19 4 0 131.58


Extras 1 (b 0 , lb 1 , nb 0, w 0, pen 0)
Total 136/1 (15.2 Overs, RR: 8.87)
Fall of Wickets 1-86 (9.5) Rohit Sharma,

Bowling O M R W Econ
Ruben Trumpelmann 3 0 26 0 8.67
David Wiese 2 0 18 0 9.00
Bernard Scholtz 1 0 11 0 11.00
JJ Smit 2 0 17 0 8.50
Jan Frylinck 2 0 19 1 9.50
Jan Nicol Loftie-Eaton 4 0 31 0 7.75
Michael van Lingen 1.2 0 13 0 10.83



முடிவு – இந்திய அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<