ஆஸி. ஒருநாள் தொடரில் பும்ராவிற்கு ஓய்வு: சிராஜிற்கு அழைப்பு

196

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரிலிருந்தும், நியூசிலாந்தில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரிலிருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.  

இதன்படி, பும்ராவின் இடத்தை நிரப்புவதற்கு அவுஸ்திரேலிய தொடருக்கு மொஹமட் சிராஜும், நியூஸிசிலாந்து தொடருக்கு சித்தார்த் கவுலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.   

மீண்டும் திசர அதிரடி; இலங்கைக்கு மற்றுமொரு ஏமாற்ற

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் திசர….

இந்திய அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி கொண்ட இந்திய அணி புதிய சாதனையும் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் பெருமளவு பங்குள்ளது. குறிப்பாக, இந்தத் தொடரில் பும்ரா மொத்தம் 4 டெஸ்ட் போட்டிகளில் 157 ஓவர்கள் வீசி 21 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

பும்ராவுக்கு அதிக பணிச்சுமை இருப்பதால், இந்தியாவில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய தொடரை மனதில் வைத்து அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்த நிலையில், வேகப்பந்து வீச்சாளர் சிராஜ், தனது கடைசி ரஞ்சி கிண்ணப் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக 7 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளிலும் அவர் சிறப்பாக விளையாடியுள்ளார். அத்துடன், சித்தார்த் கவுல் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருக்கிறார்.  

இதுஇவ்வாறிருக்க, டெஸ்ட் போட்டியில் இடம்பெறாத சில வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளனர். டெஸ்ட் அணியில் இடம்பிடித்த ரோஹித் சர்மா தனது குழந்தையை பார்ப்பதற்காக இந்தியா வந்தார்.

டோனி, கேதர் ஜாதவ், கலீல் அஹமட் ஆகியோர் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பிடித்தவர்கள். இவர்கள் நேற்று (07) அவுஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றுள்ளனர்.  

வரலாற்று சாதனையுடன் ஆஸி டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா

அவுஸ்திரேலியாவுக்கு கிரிகெட் …

ஜனவரி 12ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதனையடுத்து இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்த அணியுடன் 5 ஒருநாள் போட்டிகளிலும், மூன்று டி20 போட்டிகளிலும் விளையாடுகிறது.

இதன்பின், அவுஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய குழாம்

விராட் கோஹ்லி (தலைவர்), ரோஹித் சர்மா (உப தலைவர்), கேல் எல் ராகுல், ஷிகர் தவான், அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், டோனி (விக்கெட் காப்பாளர்), ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ரவிந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், மொஹமட் சிராஜ் கலீல் அஹமட், மொஹமட் ஷமி.

நியூசிலாந்து அணிக்கெதிரான இந்திய டி-20 குழாம்

விராட் கோஹ்லி (தலைவர்), ரோஹித் சர்மா, கேல் எல் ராகுல், ஷpகர் தவான், ரிஷப் பாண்ட், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், டோனி (விக்கெட் காப்பாளர்), ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், குர்ணால் பாண்டியா, புவனேஸ்வர் குமார், சித்தார்த் கவுல், கலீல் அஹமட்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<