லக்ஷான், கமிந்துவின் அபார ஆட்டத்தால் இலங்கைக்கு முதல் வெற்றி

1240

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டியில் தனஞ்சய லக்ஷான் மற்றும் கமிந்து மெண்டிஸின் அபார துடுப்பாட்டத்தால் அயர்லாந்து அணியுடனான முதல் லீக் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்களால் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.

இளையோர் உலகக் கிண்ணத்தில் அசத்தவுள்ள இளம் நட்சத்திரங்கள்

2018ஆம் ஆண்டில் நடைபெறுகின்ற முதலாவது சர்வதேசப் போட்டித் தொடராக 19…

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் 12ஆவது தடவையாக நடாத்தப்படுகின்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நேற்று(13) ஆரம்பமாகியது. இதில் இன்றைய தினம் நடைபெற்றடிபிரிவிற்கான 2ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கைஅயர்லாந்து அணிகள் மோதின.

நியூசிலாந்தின் வாங்கராய் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. எனினும், மழை காரணமாக போட்டி 48 ஓவர்கள் கொண்டதாக மட்டுப்படுத்தப்பட்டது.

இதன்படி, களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு ஜெம்மி கிராஸி மற்றும் மார்க் டொனிகன் ஜோடி சிறப்பான ஆரம்பத்தை கொடுத்திருந்தனர். இவ்விருவரும் முதல் விக்கெட்டுக்காக 73 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். எனினும், கமிந்து மெண்டிஸ் வீசிய 2ஆவது ஓவரில் மார்க் டொனிகன் 36 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த மோர்கன் டொப்பிங் 8 ஓட்டங்களுடனும், ஹெர்ரி டெக்டர் 6 ஓட்டங்களுடனும் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர். இருந்தாலும் ஆரம்பம் முதல் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஜெம்மி கிராஸி 75 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஜெஹான் டேனியலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் இந்த ஓட்டங்களைப் பெற 117 பந்துகளுக்கு முகங்கொடுத்து ஒரு சிக்ஸர் மற்றும் 7 பௌண்டரிகளை விளாசித் தள்ளினார்.

இதனையடுத்து வந்த பின்வரிசை வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்து தடுமாற, 48 ஓவர்கள் நிறைவில் அவ்வணி, 8 விக்கெட்டுக்களை இழந்து 207 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.  

கட்புலனற்றோர் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி புதிய உலக சாதனை

கட்புலனற்றோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில், அணியொன்றினால்…

பந்து வீச்சில் இலங்கை இளையோர் அணி சார்பாக அணித் தலைவர் கமிந்து மெண்டிஸ் 10 ஓவர்களுக்கு 35 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நிபுன் மாலிங்க மற்றும் ஜெஹான் டேனியல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் 208 என்ற இலகுவான ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாட களமிறங்கிய இலங்கை இளையோர் அணி ஆரம்பத்திலேயே தடுமாற்றம் கண்டது.

இதில் ஹசித போயகொட, தனஞ்சய லக்ஷான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹசித போயகொட ஓட்டம் ஏதும் எடுக்காமல் 2ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிபுன் தனஞ்சய ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். இவ்விரு விக்கெட்டுக்களையும் ஆரோன் கொவ்லி கைப்பற்றியிருந்தார்.

பின்னர் களமிறங்கிய கிறிஷான் ஆரச்சிகே 17 ஓட்டங்களைப் பெற்றநிலையில், மெக்ஸ் நெவில்லேயின் பந்தில் ஆட்டமிழக்க, இலங்கை அணி தமது 3ஆவது விக்கெட்டையும் இழந்து தடுமாறியது.

எனினும் 4ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தனஞ்சய லக்ஷான் மற்றும் அணித் தலைவர் கமிந்து மெண்டிஸ் இருவரும் சிறப்பாக விளையாடி நம்பிக்கை தந்தனர். இருவரும் இணைந்து 157 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் இணைப்பாட்டமாகப் பெற இலங்கை அணி 63 பந்துகள் மீதமிருக்க வெற்றியிலக்கை அடைந்தது.

இதில், இலங்கை அணியின் வெற்றிக்காக அபாரமாக விளையாடியிருந்த ஆரம்ப வீரர் தனஞ்சய லக்ஷான், 120 பந்துகளுக்கு முகங்கொடுத்து ஒரு சிக்ஸர் மற்றும் 8 பௌண்டரிகள் உள்ளடங்கலாக 101 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள, மறுபுறத்தில் சிறப்பாக ஆடி வந்த கமிந்து மெண்டிஸ், 73 பந்துகளுக்கு முகங்கொடுத்து 6 பௌண்டரிகள் உள்ளடங்கலாக 74 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

ஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்க 39 இலங்கை வீரர்கள் விண்ணப்பம்

11ஆவது ஐ.பி.எல் தொடர் எதிர்வரும் ஏப்ரல் – மே மாதங்களில் இந்தியாவில்…

 இதன்படி, 37.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 208 ஓட்டங்களை எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. பந்து வீச்சில் அயர்லாந்து இளையோர் அணி சார்பாக, ஆரோன் கொவ்லி 2 விக்கெட்டுக்களையும், மெக்ஸ் நெவில்லே ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இலங்கை அணிக்காக துடுப்பாட்டத்தில் வானவேடிக்கை நிகழ்த்தி தனது முதல் உலகக் கிண்ண சதத்தைப் பெற்றுக்கொண்ட தனஞ்சய லக்ஷான் ஆட்டநாயகன் விருதைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கை இளையோர் அணி தனது இரண்டாவது லீக் போட்டியில் எதிர்வரும் புதன்கிழமை (17) ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.   

ஆட்டநாயகன் விருது – தனஞ்சய லக்ஷான்

போட்டியின் சுருக்கம்

அயர்லாந்து இளையோர் அணி – 207/8 (48) –  ஜெம்மி கிராஸி 75,  மார்க் டொனிகன் 36,  ஜோசுஆ லிட்ல் 25,  கமிந்து மெண்டிஸ் 3/35,  நிபுன் மாலிங்க 1/39, ஜெஹான் டேனியல் 1/38,

இலங்கை இளையோர் அணி – 208/3 (37.3) –   தனஞ்சய லக்ஷான் 101*,  கமிந்து மெண்டிஸ் 74*,  கிறிஷான் ஆரச்சிகே 17,  ஆரோன் கொவ்லி 2/26,  மெக்ஸ் நெவில்லே 1/51

முடிவுஇலங்கை இளையோர் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி