இந்திய ஒருநாள் அணியில் சூர்யகுமார் யாதவ், குருணால், பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு

239
Team India squad for the ODI

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா, குர்னால் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகிய மூவரும் முதல்தடவையாக இடம்பிடித்துள்ளனர்.

இதனிடையே, தோள்பட்டை உபாதைக்குள்ளாகி பூரண குணமடைந்துள்ள தமிழக வீரரான தங்கராசு நடராஜனுக்கும் இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு போட்டிகள் நிறைவடைந்து இரு அணிகளும் 2-2 என சமநிலையில் உள்ளன. கடைசி டி-20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.

>> T20I துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முன்னேறிய விராட் கோஹ்லி

இதனைத் தொடர்ந்து இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 23ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளது. இதற்கான வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இதில் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, சூர்யகுமார் யாதவ் மற்றும் குர்ணால் பாண்டியா ஆகியோர் முதல்தடவையாக இந்திய ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளனர்

இதில் கர்நாடகாவைச் சேர்ந்த 25 வயதான வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஒருநாள் தொடருக்கு அறிமுகமாக உள்ளார். 2015ஆம் ஆண்டு முதல்தரப் போட்டியில் விளையாடத் தொடங்கிய பிரசித் கிருஷ்ணா, List A போட்டிகளில் 81 விக்கெட்டுக்களையும், 40 டி-20 போட்டிகளில் 33 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்.

>> இந்திய – இங்கிலாந்து T20 தொடர்; பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள அவர், இதுவரை 24 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

இதுஇவ்வாறிருக்க, தமிழக வீரர்களான தங்கராசு நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய தமிழக வீரர்களுக்கு ஒருநாள் குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விராத் கோஹ்லி தலைமையில் 18 பேர் கொண்ட அணியில், இறுதியாக நடைபெற்ற அவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடரில், இடம்பெற்றிருந்த மணீஷ் பாண்டே, மயங்க் அகர்வால், சஞ்சு சம்சன், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் மொஹமட் ஷமி ஆகியோர் ஒருநாள் குழாத்தில் இடம்பெறவில்லை.

இதனிடையே, இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள அணியில் ரிஷாப் பாண்ட், குர்னால் பாண்டியா, புவனேஸ்வர் குமார், மொஹமட் சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய ஒருநாள் அணி விபரம்: 

விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், சுப்மான் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, ரிஷாப் பாண்ட், கே.எல்.ராகுல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், குர்ணால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், டி நடராஜன், புவனேஸ்வர் குமார், மொஹமட் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர்

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<