புதிய மாற்றங்களுடன் இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு?

739
SLC

கிரஹம் லப்ரோய் தலைமையிலான தற்போதைய இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் குழுவின் பதவிக்காலம் இன்றுடன் (15) முடிவடைகின்றது. எனவே, இனி வரப்போகின்ற தேசிய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழாம் புதிய மாற்றங்களுக்கு உட்பட்ட ஒன்றாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.    

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளுக்கு அடுத்த மாதம் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் மூன்று

கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கை அணிக்கு கிடைத்த மோசமான தோல்விகளால் சனத் ஜயசூரிய தலைமையிலான இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் தேர்வுக் குழாம் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதனால், சனத் ஜயசூரிய தலைமையிலான அப்போதைய இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் தங்களது பதவிகளில் இருந்து விலகினர்.

அதனை அடுத்துகடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தேர்வாளர்களாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிரஹம் லப்ரோயின் தலைமையிலான புதிய குழு நியமிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வுக் குழுவில் லப்ரோயோடு சேர்த்து காமினி விக்ரமசிங்க, ஜெரைல் வூட்டேர்ஸ், சஜித் பெர்ணாந்து மற்றும் அசங்க குருசிங்க ஆகியோர் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.  

கிடைத்திருக்கும் தகவல்களின் படி, லப்ரோய் தலைமையிலான தேர்வுக் குழுவின் பதவிக்காலத்தினை இன்னும் ஒரு வருட காலத்திற்கு நீடிக்க இலங்கையின் விளையாட்டு அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்கள் விரும்புகின்ற போதிலும், இலங்கை கிரிக்கெட் சபை (SLC) தற்போதைய தேர்வாளர்களுக்கு இருக்கும் ஏனைய பணிகளை கருத்திற் கொண்டு தேர்வாளர்கள் குழுவில் மாற்றங்களை ஏற்படுத்த பரிந்துரை செய்திருக்கின்றது.

தற்போதைய தேர்வுக் குழுவின் தலைவரான கிரஹம் லப்ரோய், .சி.சி. இன் ஆசிய பிராந்தியத்திற்கான போட்டி மத்தியஸ்தராக இருக்கின்றார். அவருக்கு இது அதிக நேரத்தை செலவிடும் ஒரு பணியாக இருக்கின்றது. மறுமுனையில், தேர்வாளர்கள் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான அசங்க குருசிங்க அண்மையில் இலங்கை கிரிக்கெட்டின் செயற்பாடுகளுக்கான சிரேஷ்ட உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டிருந்ததோடு, அவருக்கு கெத்தாராமயில் இருக்கும் உயர் செயற்திறன் நிலையம் மற்றும் திறன்விருத்தி நிலையம் போன்றவற்றை கண்கானிக்கும் பொறுப்பும் இருக்கின்றது.

ஐக்கிய அரபு இராட்சிய மகளிர் கிரிக்கெட் அணியில் இலங்கை வீராங்கனை

நான்கு வருடங்களுக்கு முன்னர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வினை அறிவித்த இலங்கை மகளிர்

இதேவேளை, ஜெரைல் வூட்டேர்ஸ் இலங்கை கிரிக்கெட் அணியினதோ அல்லது இலங்கை “A” கிரிக்கெட் அணியினதோ முகாமையாளராக மாற திட்டம் வைத்திருக்கின்றார். அதோடு சஜித் பெர்ணாந்து மீண்டும் பயிற்றுவிப்பாளராக மாற எத்தனித்திருக்கின்றார்.  

எனவே, இவ்வாறு பதவிக்காலம் முடிகின்ற இலங்கை அணியின் தேர்வாளர்கள் வேறு பணிகளில் ஆர்வம் செலுத்தி இருப்பதனால் இலங்கை கிரிக்கெட் சபை அடுத்த தேர்வாளர்ளாக வரத் தகுதி உள்ள நபர்களினையும் விளையாட்டு அமைச்சருக்கு பரிந்துரை செய்திருக்கின்றது.

இதில், ப்ரென்டன் குரூப்பு, சமிந்த வாஸ், எரிக் உபசாந்த, இன்டிக்க டீ சேரம் மற்றும் ரஞ்சித் மதுருசிங்க ஆகியோர் இருக்கின்றனர். இவர்களில் ப்ரென்டன் குரூப்பு சிரேஷ்ட தேர்வாளராக இருப்பார் எனக் கூறப்படுகிறது.  

தற்போது பதவிக் காலத்தினை இழந்திருக்கும் தேர்வுக்குழு மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடருக்கான குழாத்தினை அறிவித்திருக்கின்ற நிலையில், புதிதாக வரவிருக்கும் தேர்வுக்குழுவுக்கு ஜூலை மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள தென்னாபிரிக்க அணியுடனான தொடருக்கான இலங்கை அணியினை தெரிவு செய்வது தமது முதல் வேலையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க