தென்னாபிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிக்கு இலகு வெற்றி

46

சுற்றுலா இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி மற்றும் தென்னாபிரிக்க மகளிர் அணி ஆகியவை இடையே நடைபெற்று முடிந்த மகளிர் ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்கா 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.  

T20I உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான இலங்கை மகளிர் குழாம் அறிவிப்பு

தென்னாபிரிக்கா சென்றிருக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அங்கே T20I தொடரினை அடுத்து தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகின்றது. ஐ.சி.சி. சம்பியன்ஷிப்பிற்காக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி கைவிடப்பட இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று (13) கிம்பர்லி நகரில் ஆரம்பமாகியிருந்தது 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க மங்கைகள் முதலில் இலங்கை வீராங்கனைகளை துடுப்பாடப் பணித்தனர். அதன்படி போட்டியில் துடுப்பாடிய இலங்கை மகளிர் அணியானது 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 229 ஓட்டங்களை எடுத்தது. இலங்கை மகளிர் தரப்பில் அதிகபட்சமாக சாமரி அத்தபத்து 9 பௌண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்கள் எடுத்தார். அதேவேளை கவிஷா டில்ஹாரி 42 ஓட்டங்களைப் பெற்றிருந்தார் 

தென்னாபிரிக்க மகளிர் அணியின் பந்துவீச்சில் அயாபொன்கா கக்கா, நடீன் டி கிளார்க் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர் 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 230 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்க மகளிர் அணியானது போட்டியின் வெற்றி இலக்கை லோரா வோல்வார்டின் சதத்தோடு 47.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 233 ஓட்டங்களோடு அடைந்தது. தென்னாபிரிக்க மகளிர் அணியின் வெற்றியை உறுதி செய்த லோரா வோல்வார்ட் ஆட்டமிழக்காது 6 பௌண்டரிகள் அடங்கலாக 110 ஓட்டங்கள் எடுத்திருந்தார். அதேவேளை மேரிசேன் கேப் ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களைப் பெற்று தனது பங்களிப்பினை வழங்கியிருந்தார் 

இலங்கை பந்துவீச்சில் ஒசதி ரணசிங்க, அச்சினி குலசூரிய மற்றும் இனோக்கா ரணவீர ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியும் அவர்களது பந்துவீச்சு வீணாகியது.  

போட்டியின் சுருக்கம் 

 

இலங்கை – 229 (49.5) சாமரி அத்தபத்து 51, கவிஷா டில்ஹாரி 42, நடீன் டி கிளார்க் 23/3, அயபொன்கா கக்கா 28/3  

 

தென்னாபிரிக்கா –   233/3 (47.4) லோரா வோல்வார்ட் 110*, மேரிசேன் கேப் 80* 

 

முடிவு – தென்னாபிரிக்க மகளிர் 7 விக்கெட்டுக்களால் வெற்றி  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<