ILT20 தொடரில் விளையாடுவதற்கு ஆப்கானிஸ்தான் வீரருக்கு தடை

ILT20 2024

152

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் ILT20 தொடரில் விளையாட ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ILT20 தொடரில் ஷார்ஜா வொரியர்ஸ் அணிக்காக நவீன் உல் ஹக் விளையாடியிருந்தார். இவர் ஷார்ஜா வொரியர்ஸ் அணியின் ஒப்பந்த விதிமுறையை மீறிய குற்றச்சாட்டுக்காக 20 மாதங்கள் அவருக்கு ILT20 தொடரில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

>> டெஸ்ட் தொடரின் நடுவே பயிற்சிப் போட்டியில் ஆடவுள்ள பாகிஸ்தான

ஷார்ஜா வொரியர்ஸ் அணி இந்த ஆண்டுக்கான வீரர்கள் தக்கவைப்புக்கான ஒப்பந்தத்தை நவீன் உல் ஹக்கிற்கு அனுப்பியிருந்த நிலையில், குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு நவீன் உல் ஹக் மறுத்துள்ளார்.

குறித்த இந்த விடயம் தொடர்பில் ILT20 தொடரின் ஒழுக்காற்றுக் குழு விசாரணை மேற்கொண்டதில் நவீன் உல் ஹக் ஒப்பந்த விதிமுறையை மீறியுள்ளமை கண்டறியப்பட்டதால், அவருக்கு 20 மாதத்திற்கு ILT20 தொடரில் விளையாட தடை விதித்துள்ளது. இதன்காரணமாக நவீன் உல் ஹக் 2024 மற்றும் 2025ம் ஆண்டு பருவகாலங்களில் ILT20 தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.

எவ்வாறாயினும் ILT20 தொடர் நடைபெறும் அதே காலக்கட்டத்தில் (ஜனவரி – பெப்ரவரி) தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள SAT20 தொடரில் விளையாடுவதற்கு நவீன் உல் ஹக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். IPL தொடரின் லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணிக்கு சொந்தமான டர்பன் சுபர் ஜயண்ட்ஸ் அணிக்காக இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<