டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான மோதலில் இலங்கை – இந்தியா!

ICC World Test Championship 2022-23

801
ICC World Test Championship final qualification scenario - Tamil

இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதன் மூலம் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

அவுஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், மிஞ்சியுள்ள ஒரு இடத்துக்கான போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் போட்டியிடுகின்றன.

இதில் இலங்கை அணியானது நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதுடன், இந்திய அணி அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது.

>> அபிஷேக், மினோத் அரைச் சதமடிக்க; 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் துனித்

குறிப்பிட்ட இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் 3-1 என தொடரை கைப்பற்ற முடியும். இவ்வாறு தொடரை வெற்றிக்கொண்டால் 62.5 என்ற வெற்றி சராசரியைக் கொண்டு இந்திய அணி இறுதிப்போட்டிக்கு இலகுவாக தகுதிபெறும்.

இந்திய அணி அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தாலோ அல்லது போட்டி சமனிலையில் முடிந்தாலோ இலங்கை அணியின் முடிவுகளின் அடிப்படையில் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இந்திய அணி பெற்றுக்கொள்ளும்.

குறிப்பாக இலங்கை அணியானது ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற வேண்டுமானால், நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெறவேண்டும். அவ்வாறு வெற்றிபெற்றால் 61 என்ற வெற்றி சராசரியுடன் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலோ அல்லது போட்டி சமனிலையடைந்தாலோ இந்திய அணிக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கு முடியும்.

எனவே இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியையடுத்து, டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு எந்தளவில் உள்ளது என்பதை அறிந்துக்கொள்ள முடியும்.

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மற்றும் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி என்பவை இம்மாதம் 9ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<