ஐ.சி.சியின் மகளிருக்கான உலகக் கிண்ண தகுதிச்சுற்றுப் போட்டி ஒத்திவைப்பு

86

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் ஜுலை மாதம் இலங்கையில் நடைபெறவிருந்த ஐ.சி.சியின் மகளிருக்கான ஒருநாள் உலகக் கிண்ண தகுதிச்சுற்று போட்டித் தொடரை ஒத்திவைப்பதாக ஐ.சி.சி அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மே மாதம் வரை நடைபெற இருந்த கிரிக்கெட் தொடர்கள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஜூன் மாதத்திற்குப் பிறகு கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போதைய சூழலில் ஜூன், ஜூலை மாதங்களில் கூட சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது சந்தேகம்தான் எனக் கருதப்படுகிறது

குமார் சங்கக்காரவிற்கு ஐ.சி.சி. இன் தலைவர் பதவியா?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான குமார் சங்கக்காரவினை…….

இந்த நிலையில், 2021 மகளிருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டித் தொடர், அடுத்த வருடம் பெப்ரவரி 6 ஆம் திகதி முதல் மார்ச் 7ஆம் திகதி வரை நியூஸிலாந்தில் நடைபெறவுள்ளது

இந்த தொடரில் பங்கேற்கவுள்ள இறுதி 3 அணிகளைத் தெரிவு செய்வதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் எதிர்வரும் ஜூலை 3ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெற இருந்தது

இதில் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், நெதர்லாந்து, அயர்லாந்து, பபுவா நியூகினியா, தாய்லாந்து, மேற்கிந்திய தீவுகள், ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஜிம்பாப்வே உள்ளிட்ட 10 அணிகள் கலந்துகொள்ளவிருந்தன.

இதுகுறித்து .சி.சியின் போட்டிகள் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் கிறிஸ் டெட்லி கூறுகையில்

தொடர்ச்சியான பயணக் கட்டுப்பாடுகள், உலகளாவிய நிலவும் சுகாதார கவலைகள் மற்றும் அரசு மற்றும் பொது சுகாதார அதிகார ஆலோசனையின் அறிவுறுத்தலின்படி, கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக .சி.சியின் இரண்டு தகுதிச் சுற்று போட்டிகளை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம்

இதன்படி, அடுத்த வருடம் நடைபெறவுள்ள மகளிருக்கான ஒருநாள் கிரிக்கெட் உலக கிண்ணத்துக்கான தகுதி சுற்று தொடர் மற்றும் 2022இல் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத் தொடருக்கான ஐரோப்பிய மண்டலத்திற்கான தகுதிச் சுற்றுப் போட்டித் தொடர்களை ஒத்திவைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

IPL போட்டிகளை நடத்த ஐக்கிய அரபு இராட்சியம் கோரிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள ……

இந்த கடினமான காலகட்டத்தில் எங்கள் முன்னுரிமை வீரர்கள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள், ரசிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த கிரிக்கெட் சமூகத்தின் நல்வாழ்வைப் பாதுகாப்பதாகும்.

மேலும் ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டை மீண்டும் தொடங்குவது தொடர்பாக விரைவில் முடிவுகளை எடுப்போம். உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மற்றும் தொடர்ச்சியான ஆதரவுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன் என அவர் கூறினார்.

இதேவேளை, 2021 மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து ஆகிய அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றிருந்தன. இதில் ஐந்தாவது அணியாக இந்தியா அண்மையில் தகுதிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<