றக்பி லீக் சம்பியன் பட்டத்தை வென்ற CR & FC கழகம்

Nippon Paint Club Rugby League 2023/24

68
Nippon Paint Club Rugby League 2023/24

நாடளாவிய ரீதியில் இருந்து பலம் வாய்ந்த 8 விளையாட்டுக் கழகங்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற 2023-24க்கான முதல் தர கழகங்களுக்கு இடையிலான நிப்பொன் பெயின்ட் றக்பி லீக் போட்டியில் நடப்புச் சம்பியன் கண்டி கழகத்தை வீழ்த்தி சி.ஆர். அன்ட் எவ்.சி கழகம் (CR & FC)  சம்பியன் பட்டத்தை வென்றது.

இதன் மூலம் 26 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணி றக்பி லீக் சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இறுதியாக அந்த அணி 1998ஆம் ஆண்டு விராஜ் பிரசாந்த தலைமையில் றக்பி லீக் சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை றக்பி லீக் தொடரில் தோலிவி அடையாத ஒரே அணியாக வலம் வந்த CR & FC, லோங்டன் ப்ளேஸ் மைதானத்தில் நேற்று (18) நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் 33 – 25 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றியீட்டியதுடன், நிப்பான் பெயிண்ட் சேலஞ்ச் கிண்ணத்தை வென்று அசத்தியது.

போட்டியின் முதல் பாதி முடிவில் கண்டி அணி 13-06 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால், இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் இருந்து CR & FC அணி வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இறுதியில் 33 – 25 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று நிப்பொன் பெய்ன்ட் றக்பி லீக் கிண்ணத்தை CR & FC அணி சுவீகரித்தது.

CR & FC அணி ஒரு கோல் உட்பட 04 ட்ரைகள் மற்றும் 02 பெனல்டிகள் மூலம் 33 புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள, கண்டி அணியால் ஒரு ட்ரை மற்றும் 02 பெனால்டிகள் மூலம் 02 கோல்களை மாத்திரமே பெற முடிந்தது.

இம்முறை நடைபெற்ற முதல் தர கழகங்களுக்கு இடையிலான நிப்பொன் பெயின்ட் றக்பி லீக் போட்டியில் CR & FC அணி 11 போட்டிகளில் வெற்றி பெற்றது. கண்டி அணியால் 08 போட்டிகளில் மாத்திரமே வெற்றிகளைப் பதிவு செய்ய முடிந்தது.

முதல் சுற்றில் கண்டி கழகத்தை அதன் சொந்த மைதானமான நித்தவெல மைதானத்தில் வைத்து தோற்கடித்து வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த CR & FC அணி, லோங்டன் ப்ளேஸ் மைதானத்தில் சுப்பர் 4 சுற்றுக்காக நடைபெற்ற போட்டியிலும் தோற்கடித்திருந்தது. இதனால் அந்த அணி இம்முறை றக்பி லீக் சம்பியன் பட்டத்தை தவறவிட்டமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், 2023-24க்கான முதல் தர கழகங்களுக்கு இடையிலான நிப்பொன் பெயின்ட் றக்பி லீக்கில் மூன்றாவது இடத்துக்காக நடைபெற்ற போட்டியில் CH & FC அணி அணியை 28-11 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹெவலொக்ஸ் கழகம் அணி வெற்றியீட்டியது.

இதேவேளை, பெண்களுக்கான இறுதிப் போட்டியில் இராணுவ விளையாட்டுக் கழகம் 12-07 என்ற கோல் கணக்கில் கடற்படை விளையாட்டுக் கழகத்தை வீழ்த்திய போதிலும், இம்முறை போட்டித் தொடரில் அதிக போனஸ் புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட கடற்படை விளையாட்டுக் கழக் சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<