ஜோன் டார்பட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியனாக  புனித பேதுரு, லைசியம் கல்லூரிகள்

90

இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெற்றுவருகின்ற 49ஆவது ரிட்ஸ்பறி சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் வருடத்தின் அதி சிறந்த கனிஷ்ட மெய்வல்லுனர் வீரராக சிலாபம் புனித ரோகுஸ் கல்லூரியைச் சேர்ந்த ஆர். பி நிபுன் ரனிஷ்க தெரிவானார்.

இம்முறை ஜோன் டார்பட் கனிஷ்ட மெய்வல்லுனரில் 15 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் கலந்துகொண்ட அவர், 6.23 மீற்றர் தூரம் பாய்ந்து, 759 புள்ளிகளுடன் வருடத்தின் அதி சிறந்த கனிஷ்ட மெய்வல்லுனர் வீரருக்கான விருதை தட்டிச் சென்றார்.

கடற்கரையில் ஓடி விளையாடி இளையோர் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பாரமி

சிலாபத்திலிருந்து ஆசியாவை வெல்ல தாய்லாந்துக்குச் சென்று, அங்கு இருந்து…

ஆர்ஜென்டீனாவில் அண்மையில் நிறைவுக்கு வந்த இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா, தனது ஆரம்ப கல்வியைப் பெற்றுக்கொண்ட பாடசாலை இதுவென்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த நிலையில், வருடத்தின் அதி சிறந்த கனிஷ்ட மெய்வல்லுனர் வீராங்கனையாக 15 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்ற ராஜகிரிய கேட்வே சர்வதேச கல்லூரியைச் சேர்ந்த தினாரா பண்டார தேல தெரிவானார்.

48ஆவது சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இறுதிக் கட்டம் கடந்த 17ஆம் திகதி அநுராதபுரம் பொது மைதானத்தில் ஆரம்பமாகியது.

12, 13, 14 மற்றும் 15 ஆகிய வயதுப்பிரிவுகளுக்காக 2000 இற்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் பங்குபற்றலுடன் நடைபெற்ற இம்முறை ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்கள் பிரிவில் 5 புதிய போட்டிச் சாதனைகளும், பெண்கள் பிரிவில் 2 போட்டிச் சாதனைகளும் நிலைநாட்டப்பட்டதுடன், பெண்கள் பிரிவில் ஒரு சாதனை சமப்படுத்தப்பட்டது.

போட்டிகளின் முதல் நாளில் 15 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் பங்குகொண்ட மருதானை புனித ஜோசப் கல்லூரி மாணவன் நவீன் மாரசிங்க புதிய போட்டிச் சாதனை நிகழ்த்தினார். குறித்த போட்டியில் 15.71 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த அவர், 2008ஆம் ஆண்டு கொழும்பு றோயல் சர்வதேசப் பாடசாலையைச் சேர்ந்த எஸ். சுமனவீர (14.87 மீற்றர்) நிகழ்த்திய சாதனையை சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு நவீன் மாரசிங்க முறியடித்தார்.

இதனையடுத்து போட்டியின் 2ஆவது நாளில் 3 போட்டி சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. இதில் 15 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 80 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் இரத்தினபுரி புனித அலோசியஸ் கல்லூரி மாணவன் வி. ஆரியவன்ச, 15 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் நீர்கொழும்பு ஆவே மரியாள் கன்னியாஸ்திரிகள் மடத்தைச் சேர்ந்த எல். செவ்மினி நதாலி மற்றும் 12 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தலில் பாணந்துறை புனித நல்லாயன் கன்னியாஸ்திரிகள் மடத்தைச் சேர்ந்த சிஹார சந்தமினி சில்வா ஆகியோர் புதிய போட்டிச் சாதனைகளை நிகழ்த்தியிருந்தனர்.

எனினும், போட்டித் தொடரின் இறுதி நளான கடந்த வெள்ளக்கிழமை (19) மேலும் 3 போட்டி சாதனைகள் முறியடிக்கப்பட்டன. இதில் 13 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 12.3 செக்கன்களில் நிறைவுசெய்த மாவனெல்ல ஸாஹிரா கல்லூரியைச் சேர்ந்த எம்.என்.என் ராஹிப், புதிய போட்டிச் சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

சுபர் சன் – நியு யங்ஸ் இடையிலான ஆரம்பப் போட்டி சமநிலையில் நிறைவு

யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கில் நியு யங்ஸ் மற்றும் சுபர் சன்…

 முன்னதாக, கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் 12 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய ராஹீப் தங்கப்பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேதுருவுக்கு ஹெட்ரிக் பட்டம்

49ஆவது சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 84 புள்ளிகளைக் பெற்றுக்கொண்ட பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி ஆண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சம்பியனாகவும், 45 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட வத்தளை லைசியம் கல்லூரி பெண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சம்பியனாகவும் தெரிவாகின.

இம்மாத முற்பகுதியில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா மற்றும் அதற்கு முன் நடைபெற்ற சிரேஷ்ட ஜோன் டார்பட் மெய்வல்லுனர் போட்டிகளில் பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி அணி சம்பியன் பட்டங்களை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

வடக்குக்கு 3 பதக்கங்கள்

இம்முறை சேர், ஜோன் டார்பட் கனிஷ்ட மெய்வல்லுனரில் வட மாகாண பாடசாலைகளுக்கு 3 பதக்கங்களை மாத்திரம் வெற்றி கொள்ள முடிந்தது.

12 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் 1.38 மீற்றர் உயரத்தை தாவிய முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஏ. அன்பழகன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

இதேவேளை, போட்டிகளின் முதல் நாளன்று நடைபெற்ற ஆண்களுக்கான 14 வயதுக்கு உட்பட்ட தட்டெறிதலில் யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ஆர். பிரவீன், 31.59 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும், குண்டு எறிதலில் போட்டியில் 12.86 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

தமிழ் பேசும் வீரர்கள் அபாரம்

15 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஒட்டப் போட்டியில் பங்குகொண்ட பதுளை மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஜெஹான் அஞ்செலோ வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டியை நிறைவுசெய்ய 2 நிமிடங்கள் 10.0 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.

இதேநேரம், ஆண்களுக்கான 14 வயதுக்கு உட்பட்ட உயரம் பாய்தலில் பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரியின் கிரிஷாந்தன் ஆனந்த பிரகாஷ் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். போட்டியில் அவர் 158 மீற்றர் உயரத்தைத் தாவினார்.

டிவிஷன் II சம்பியனாக முடிசூடிய பேருவளை கிரேட் ஸ்டார்

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்படும்…

பெண்கள் பிரிவில் 12 வயதுக்கு உட்பட்ட 80 மீற்றர் ஓட்டப் போட்டியில் வத்தளை லைசியம் சர்வதேச கல்லூரியின் ஷெனாலி பஸ்தியன், தங்கப் பதக்கம் வென்றார். போட்டியை நிறைவுசெய்ய 11.2 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.

இது இவ்வாறிருக்க, 12 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் பங்குகொண்ட அவர், போட்டியை 14.1 செக்கன்களில் நிறைவுசெய்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

அதே கல்லூரியைச் சேர்ந்த மற்றுமொரு வீராங்கனையாக அக்ஷதா பாலச்சந்திரன், பெண்களுக்கான உயரம் பாய்தலில் வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டியில் அவர் 1.22 மீற்றர் உயரத்தைப் பதிவுசெய்தார்.

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க