குமார் சங்கக்காரவிற்கு ஐ.சி.சி. இன் தலைவர் பதவியா?

76
MCC
 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான குமார் சங்கக்காரவினை, இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஐ.சி.சி. இன் முக்கிய பதவி ஒன்றுக்கு பரிந்துரை செய்ய விருப்பம் கொண்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்திருக்கின்றார்.

சங்கக்காரவின் தலைமைப் பதவியை நீடிக்கவுள்ள MCC

கிரிக்கெட்டின் சட்டவிதிகளை உருவாக்கும் இங்கிலாந்தின் மெர்லிபோன் கிரிக்கெட் …

அதன்படி, தற்போது கிரிக்கெட் விதிகளை தீர்மானிக்கும் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் (MCC) தலைவராக செயற்பட்டு வரும் குமார் சங்கக்கார, தனது பதவிக்காலத்தினை ஒக்டோபர் மாதத்துடன் நிறைவு செய்யவிருக்கின்றார். சங்கக்காரவின் இந்த பதவிக்காலம் நிறைவடைந்த  பின்னரே இலங்கை கிரிக்கெட் சபையின் பரிந்துரை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

“நாம் MCC உடனான சங்கக்காரவின் பதவிக்காலம் நிறைவுக்கு வரும் வரை காத்திருக்கின்றோம். அங்கே, அவரின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், நாம் அவரது அறிவினை இலங்கையின் கிரிக்கெட்டுக்காக பயன்படுத்த திட்டம் ஒன்றை வைத்திருக்கின்றோம். அதோடு, நாம் அவரை ஐ.சி.சி. இன் பெரிய பதவி ஒன்றுக்காகவும் பரிந்துரை செய்யவிருக்கின்றோம்.” என மொஹான் டி சில்வா குறிப்பிட்டார். 

அதேநேரம் குமார் சங்கக்காரவினை எப்படியான பதவி ஒன்றுக்கு இலங்கை கிரிக்கெட் சபை பரிந்துரை செய்யவுள்ளது என்பது தொடர்பிலும் கருத்து வெளியிட்ட மொஹான் டி சில்வா, சங்கக்காரவினை ஐ.சி.சி. இன் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்க எண்ணம் கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.

“அதுதான் (ஐ.சி.சி. தலைவர் பதவியே) அதிக சாத்தியம் கொண்டதாக இருக்கின்றது. கடந்த வருடங்களில் ஐ.சி.சி. இன் தலைவராக எந்த இலங்கையரும் இருந்ததில்லை. எனவே, சங்கக்கார இந்தப் பதவிக்கு பொருத்தமான ஒருவர். அவரினை நாம் பரிந்துரை செய்த பின்னர், (ஐ.சி.சி. இன்) அங்கத்தவர்களிடம் இருந்து நாம் ஆதரவினைப் பெற எதிர்பார்த்துள்ளோம்.” 

பொதுவாக ஐ.சி.சி. இன் தலைவராக குறிப்பிட்ட நாட்டு கிரிக்கெட் சபை ஒன்றின் தலைவராக செயற்பட்ட ஒருவருக்கே, வாய்ப்பு வழங்கப்படும். ஆனால், தற்போது இந்த விதி தளர்த்தப்பட்டிருக்கின்றது. இந்த விதி தளர்த்தப்பட்ட நிலையிலையே இலங்கை கிரிக்கெட் சபை, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் பதவியினை இதுவரை பெறாத குமார் சங்கக்காரவினை ஐ.சி.சி. இன் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கவுள்ளது.

ஆனால், இலங்கை கிரிக்கெட் சபை மேற்கொள்ளவுள்ள இந்த பரிந்துரைக்கு தனது டுவிட்டர் கணக்கு மூலம் பதில் தந்த சங்கக்கார தனக்கு பரிந்துரைகள் தொடர்பில் ஆர்வம் இல்லை எனக் குறிப்பிட்டு, பரிந்துரை செய்தமைக்கு நன்றியையும் தெரிவித்திருந்தார்.

Island Cricket on Twitter

SriLanka Cricket (SLC) is keen on seeing former captain Kumar Sangakkara vie …

Kumar Sangakkara on Twitter

@IslandCricket The problem is that I’m not keen nor do I have any interest in being promoted.

சங்கக்கார வழங்கியிருக்கும் இந்த பதில் ஐ.சி.சி. இன் பதவி ஒன்றை பெறுவதற்கு அவருக்கு ஆர்வம் இல்லை என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

இதேநேரம், சங்கக்கார தற்போது தலைவராக செயற்படும் மெர்லிபோன் கிரிக்கெட் கழகம், சங்கக்காரவின் பதவிக் காலத்தினை இன்னும் ஒரு வருட காலத்திற்கு நீடிக்க விருப்பம் கொண்டிருப்பதாக அண்மையில் தெரிவித்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…