ஐ.சி.சி. இன் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக கமிந்து மெண்டிஸ்

63

ஐ.சி.சி. இன் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட நம்பிக்கையாக வளர்ந்து வரும் கமிந்து மெண்டிஸ் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.

>>இலங்கை – நியூசிலாந்து தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது

ஏற்கனவே இந்த ஆண்டின் மார்ச் மாதத்திலும் ஐ.சி.சி. இன் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதினை வென்ற கமிந்து மெண்டிஸ், இந்த விருதினை 2024ஆம் ஆண்டில் இரண்டு தடவைகள் வென்ற முதல் வீரராகவும் மாறியிருக்கின்றார்.

மெண்டிஸ் செப்டம்பர் மாதம் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றிருந்ததோடு அவற்றில் மொத்தமாக 451 ஓட்டங்களை குவித்ததோடு அவரின் துடுப்பாட்ட சராசரி 90.20 ஆகவும் காணப்படுகின்றது. அத்துடன் கமிந்து மெண்டிஸின் சிறந்த ஆட்டத்தோடு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரினை இலங்கை 2-0 என கைப்பற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மெண்டிஸ் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதிற்காக ப்ரபாத் ஜயசூரிய மற்றும் அவுஸ்திரேலிய அணியின் ட்ராவிஸ் ஹெட் ஆகியோர் போட்டியிட்ட நிலையில், கமிந்து மெண்டிஸ் அவர்களை பின்தள்ளி சிறந்த வீரர் விருதினை வென்றமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் கமிந்து மெண்டிஸ் செப்டம்பர் மாதத்தில் டெஸ்ட் போட்டிகளில் 1000 ஓட்டங்கள் என்கிற மைல்கல்லினையும் கடந்திருந்ததோடு, இந்த சாதனைக்காக 13 இன்னிங்ஸ்கள் எடுத்து துடுப்பாட்ட ஜாம்பவான் டொன் பிரட்மனின் சாதனையினையும் சமப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<