டி20 போட்டிகளுக்கு அறிமுகமாகும் புதிய சுப்பர் ஓவர் விதிமுறைகள்

120

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிந்தால் சுப்பர் ஓவரில் கடைபிடிக்கப்படும் புதிய விதிமுறையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம் இங்கிலாந்தில்நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டி சமநிலையில் முடிந்தது. இதனால் சுப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது

சுப்பர் ஓவரும் சமநிலையில் முடிந்ததால் அணிகள் பெற்ற பௌண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது

இதனால் .சி.சி மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து சுப்பர்வர் விதிமுறையில் மாற்றங்களை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில்தற்போது சுப்பர் ஓவர் விதிமுறைகளை மாற்றப்பட்டதுடன், நேற்று (12) ஆரம்பமான தென்னாப்பிரிக்காஇங்கிலாந்து அணிகளுடனான டி20 தொடரில் இந்தப் புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது

இந்த புதிய விதிமுறைக்கு அமைய, 

  1. போட்டி சமநிலையில் முடிந்தால் சுப்பர் ஓவர் விளையாடப்படும். சுப்பர் ஓவரும் சமநிலையானால், தொடர்ச்சியாக முடிவு கிடைக்கும் வரை சுப்பர் ஓவர் விளையாடப்படும். ஒரு ஓவருக்கு 6 பந்துகள் வீசப்படும்.
  2. இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தால் ஒரு அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வரும்
  3. ஒவ்வொரு அணிக்கும் தலா ஒரு ‘ரிவியூ’ வாய்ப்பு வழங்கப்படும்.
  4. சுப்பர் ஓவர் மழை போன்ற காரணத்தினால் நீண்ட நேரமாக நடைபெறவில்லை என்றால் போட்டி கைவிடப்படும்.
  5. போட்டியில் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய அணி சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடும்.
  6. முதலில் களத்தடுப்பு செய்யும் அணி பந்தை தேர்வு செய்யலாம். இரண்டாவதாக களத்தடுப்பு செய்யும் அணி அதே பந்தை தேர்வு செய்யலாம். பந்தை மாற்ற வேண்டும் என்று விரும்பினால், போட்டி நடைபெறும் சூழ்நிலை கவனத்தில் கொள்ளப்படும்.
  7. களத்தடுப்பாளர்களின் கட்டுப்பாடு போட்டியின் கடைசி ஓவரில் எப்படி இருந்ததோ, அதே போன்று இருக்கும்.
  8. சுப்பர் ஓவருக்கான இடைவேளை ஐந்து நிமிடங்கள்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க>>