கொல்கத்தா – பெங்களூர் மோதல் வேறு திகதியில்

172
BCCI

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையில் இன்று (03) நடைபெறவிருந்த இந்திய ப்ரிமீயர் லீக் (ஐ.பி.எல்) தொடரின் போட்டி வேறு திகதி ஒன்றுக்கு மாற்றப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

LPL T20 தொடர் நான்கு மைதானங்களில் நடத்தப்படும்

அந்தவகையில் இந்தப் பருவகாலத்திற்கான ஐ.பி.எல். தொடரினுடைய 30ஆவது குழுநிலை மோதலாக அமைந்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையிலான போட்டி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் வீரர்கள் இடையே உருவான கொவிட்-19 வைரஸ் அச்சம் காரணமாகவே வேறு ஒரு திகதிக்கு மாற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. 

இந்திய செய்திச் சேவையான Cricbuzz வெளியிட்டிருக்கும் தகவல்களுக்கு அமைய, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் வீரர்களான வருண் சக்கரவர்த்தி மற்றும் சன்தீப் வாரியர் ஆகியோர் ஸ்கேன் பரிசோதனைகளுக்கு வெளியில் சென்ற போது அவர்கள் இருவரும் நோய் நிலைமைக்கு ஆளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் திசர பெரேரா

அதேநேரம், இந்த விடயம் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பினை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (BCCI) மிக விரைவில் வெளியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதோடு, இன்று ஒத்திவைக்கப்ட்ட போட்டியின் புதிய திகதி இன்று மாலையளவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…