சங்கா, மஹேலவை விசாரணை செய்ய நான் கூறவில்லை – மஹிந்தானந்த அளுத்கமகே

544

2011 உலகக் கிண்ணத்தில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றுள்ளது தொடர்பாக விளையாட்டில் மோசடிகளைத் தவிர்க்கும் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவுக்கு தான் வழங்கிய வாக்குமூலத்தில் எந்தவொரு இலங்கை வீரருக்கும் தொடர்பு இல்லை என தெளிவாகக் கூறியிருந்தும், குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தனவை ஏன் விசாரணைக்கு அழைத்தீர்கள் என முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த விசாரணை முற்றிலும் தவறு என தெரிவித்த அவர், உரிய ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்தால் ஆட்ட நிர்ணயம் தொடர்பிலான விசாரணைகளை முடிவுக்குக் கொண்டு வர முடியாது எனவும், அதுதொடர்பில் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலகக் கிண்ண ஆட்டநிர்ணயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் 2011ம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக்…

2011 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியின் போது இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் முன்வைக்கப்பட்ட கருத்து மிகப் பெரிய சர்ச்சையினை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து, 2011 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் தெரிவுக்குழு தலைவராக செயற்பட்ட அரவிந்த டி சில்வா, கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க மற்றும் டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார ஆகியோரிடம் விளையாட்டில் மோசடிகளைத் தவிர்க்கும் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவு வாக்குமூலம் பதிவு செய்தது.

இதேவேளை, மஹேல ஜயவர்தனவிடம் நேற்று (3) காலை வாக்குமூலம் பதிவு செய்ய திட்டமிடப்பட்டிருந்த போதும், வேறு விடயங்களுக்காக விசாரணை ஒத்திவைக்கப்படுவதாக விளையாட்டுக் குற்றங்களைத் தடுக்கும் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவு தெரிவித்தது.

இந்த நிலையில். முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லாமையினால் விசாரணைகள் நிறுத்தப்படுவதாக நேற்று (3) மாலை பொலிஸ் ஊடகப் பிரிவினால் அறிவிக்கப்பட்டது. 

ஆட்டநிர்ணயம் தொடர்பில் மஹிந்தானந்தவினால் பொலிஸ் முறைப்பாடு

2011 கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றதாக இலங்கையின்…

இதுதொடர்பில் கண்டியில் நேற்று (3) இரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், 

2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தேன். அந்தக் கருத்து தொடர்பில் இதற்கு முன் இரண்டு தடவைகள் பேசியிருந்தேன்.

அதேபோல, நான் வெளியிட்ட கருத்துக்கு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்களாக இருந்தவர்கள், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு இருந்தனர். 

2018 டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷெலினால் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவுக்கு அனுப்பியிருந்த கடிதம் எனக்குக் கிடைத்தது.

குறித்த கடிதத்தில் உலகில் டெஸ்ட் விளையாடுகின்ற நாடுகளில் அதிக ஊழல், மோசடிகள் இடம்பெற்ற நாடாக இலங்கை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அந்தக் கடிதம் மூலம் ஹரீன் பெர்னாண்டோவுக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 2011 உலகக் கிண்ணத்தில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றுள்ளதாக நான் தெரிவித்த கருத்தினை அடுத்து விளையாட்டில் மோசடிகளைத் தவிர்க்கும் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது. 

அதன்போது ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றது தொடர்பில் எனக்கு கிடைத்த தகவல்களையும், அதற்கான ஆதாரங்களையும் பொலிஸாரிடம் கையளித்தேன். அதுமாத்திரமின்றி, வாக்குமூலம் வழங்கிய பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த ஆட்ட நிர்ணயத்துடன் எந்தவொரு இலங்கை வீரருக்கும் தொடர்பு இல்லை என தெளிவாகக் கூறினேன்.

ஆனால், விளையாட்டில் மோசடிகளைத் தவிர்க்கும் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான குமார் சங்கக்காரவையும், மஹேல ஜயவர்தனவையும் எதற்காக விசாரணைகளுக்கு அழைத்தார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. 

உலகக்கிண்ண ஆட்ட நிர்யணம்: அரவிந்த, தரங்கவிடம் விசாரணை

2011 ஆம் ஆண்டில் இந்தியாவுடன் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம்…

எனவே ஆட்ட நிர்ணயத்துடன் எந்தவொரு வீரரும் தொடர்புபடவில்லை என்றால், விளையாட்டில் மோசடிகளைத் தவிர்க்கும் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவு ஏன் அவர்களை விசாரணைக்கு அழைத்தார்கள் என்பதற்கான காரணம் எனக்கு தெரியாது. ‘

இதனிடையே, 2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றமைக்கான போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதனால் விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதனையடுதது உலகக் கிண்ண ஆட்ட நிர்ணயம் தொடர்பில் என்னிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்ட விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவினை தொடர்புகொண்டு இதுதொடர்பில் நான் விளக்கம் கேட்டேன். 

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 121

சர்வதேச போட்டிகள் ஆரம்பமாகும்வரை பயிற்சிகளை தொடங்கிய இலங்கை கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்ட…

எனவே, இந்த சட்டமூலத்தின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்க முடியாது என விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் பொன்சேகா என்னிடம் தெரிவித்தார். 

அதிலும் குறிப்பாக, 2011இல் தான் இந்த சம்பவம் இடம்பெற்றது. அத்துடன், விளையாட்டில் மோசடிகளைத் தவிர்க்கும் சட்டமூலம் 2019 ஆண்டு தான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனால் குறித்த விசாரணைக்கு வாக்குமூலம் அளிக்க முடியாது என குமார் சங்கக்காரவின் சட்டத்தரணிகள் விசாரணைப் பிரிவிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்தே, ஆட்ட நிர்ணயம் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் முற்றிலும் தவறானது என பொலிஸாருக்கும் தெரியவந்துள்ளது. எனவே, பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் தவறு, உரிய ஆதாரங்கள் இல்லை என்று ஆட்ட நிர்ணயம் தொடர்பிலான விசாரணைகளை முடிவுக்குக் கொண்டு வர முடியாது. 

ஆட்ட நிர்ணய சதியின் உண்மை விரைவில் வெளிச்சத்துக்கு வரும் – சங்கக்கார

2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் …

பொலிஸாருக்கு என்ன சொல்வது? அவர்கள் தேர்வுக் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வாவிடம் மாத்திரம் தான் உரிய விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இதில் வீரர்கள் தொடர்பு இல்லை என நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். 

அப்போதைய இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர், செயலாளர், நிறைவேற்று அதிகாரி மற்றும் அந்த போட்டித் தொடருடன் தொடர்புபட்ட முக்கிய நபர்களிடம் இருந்து இன்று வரை வாக்குமூலம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவில்லை. 

எனது வாக்குமூலத்தில் யாரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெளிவாகக் கூறினேன். இரண்டு வீரர்களிடம் மாத்திரம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டு விசாரணைகளை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? 

பொதுவாக பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தால் அதற்கான விசாரணைகளை ஆரம்பிக்கவே இரண்டு வாரங்கள் தேவைப்படும். குறிப்பாக, கடந்த ஆட்சிக் காலங்களிலும் பொலிஸார் இவ்வாறு தான் பல விசாரணைகளை முடக்கிப் போட்டனர்.

2011 உலகக் கிண்ணத்தில் 90% உடற்குதியுடன் இருந்தேன் – முரளிதரன்

கடந்த 2011 கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு தான் 100 சதவீத…

எனவே, பொலிஸார் ஆட்ட நிர்ணயம் தொடர்பில் தவறாக விசாரணைகளை செய்துள்ளனர். அதிலும் குறிப்பாக, இந்த சட்டமூலத்தின் ஊடாக விளையாட்டில் மோசடிகளைத் தவிர்க்கும் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவினால் விசாரணைகளை நடத்த முடியாது. 

உண்மையில் என்னிடம் வாக்குமூலம் பெற வீட்டுக்கு வந்த காரணத்தால் நான் அவர்களுக்கு வாக்குமூலம் அளித்தேன். என்னைப் பொறுத்தமட்டில் இதற்கான விசாரணைகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை தான் மேற்கொண்டிருக்க வேண்டும். இது தொடர்பில் ஐ.சி.சிக்கு நான் தகவல்களை வழங்கியுள்ளேன். 

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷெல் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். அவருக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் மின்னஞ்சல் ஊடாக அனுப்பியுள்ளேன். 

வாக்குமூலம் எதனையும் வழங்காமல் திரும்பிச் சென்ற மஹேல

விளையாட்டு அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவுக்கு இன்று (3) காலை பிரசன்னமாகிய இலங்கை கிரிக்கெட்…

2011 உலகக் கிண்ணத்தில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றுள்ளது என்பதை நான் இன்று சொன்னது போல நாளையும் சொல்வேன். எனது சொல்லில் மாற்றுக் கருத்துக் கிடையாது. 

எனவே, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்த கருத்து தொடர்பில் நான் ஜனாதிபதியிடம் முறையிட்டேன். அத்துடன், இந்த விசாரணைகளை நிறுத்தாமல் பக்கசார்பின்றி அடுத்தகட்ட விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதியிடம் நான் தெரிவித்தேன். 

உண்மையில், பொலிஸார் உரிய முறையில் விசாரணைகளை நடத்தவில்லை. அவர்கள் தவறு செய்துள்ளதை மறைப்பதற்காக என்மீது அதன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்கள். எனவே இரண்டு பேரை மாத்திரம் விசாரணைக்கு அழைத்து விசாரணைகளை முடிவுக்கு கொண்டு வர முடியுமா என பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் கேட்கிறேன். 

உலகக் கிண்ண ஆட்டநிர்ணய விசாரணைகள் நிறைவு

கடந்த 2011ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் பற்றி முன்வைக்கப்பட்டிருந்த ஆட்டநிர்ணயக்…

இரண்டாவது 2019 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மோசடிகளைத் தவிர்க்கும் சட்டமூலத்தின் ஊடாக 2011 இல் நடைபெற்ற ஆட்ட நிர்ணயம் தொடர்பில் விசாரணை நடத்த முடியுமா என நான் கேட்கிறேன். 

எனவே குமார் சங்கக்கார கூறியது போல இதன் விசாரணைகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை தான் முன்னெடுக்க வேண்டும் என்பதை நானும் வலியுறுத்துகிறேன். அதேபோல, தேர்தல் காலத்தில் இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். 

இனிவரும் காலங்களில் நடைபெறுகின்ற உலகக் கிண்ணப் போட்டிகளிலும் ஆட்ட நிர்ணயம் இடம்பெறாமல் இருக்கத் தான் நான் போராடி வருகிறேன். ஆனால் அந்தக் குற்றச்சாட்டிலிருந்து தப்புவதற்கு இதனுடன் தொடர்புடைய பலர் கோடிக்கணக்கான பணத்தை செலவிட்டு வருவதை நான் அறிந்து வைத்துள்ளேன் என அவர் குறிப்பிட்டார்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க