இலங்கை வரவிருக்கும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி

2902

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றின் படி, இந்த ஆண்டின் ஜுலை மற்றும் ஒகஸ்ட் மாதங்களில் தென்னாபிரிக்க அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு (இலங்கையுடன்) 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு T-20 போட்டி என்பவற்றை கொண்ட தொடரில் விளையாடவிருப்பதாக அறியக்கிடைக்கின்றது.  

[rev_slider LOLC]

ஜூலை மாதம் 4ஆம் திகதி இலங்கைக்கு வரும் தென்னாபிரிக்க அணி, 8 நாட்களின் பின்னர் காலி சர்வதேச மைதானத்தில் தொடங்கும் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியுடன் மோதுகின்றது. இதனையடுத்து, தென்னாபிரிக்கா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆட கொழும்பு பயணமாகின்றது.  

இங்கிலாந்துடன் மோதும் இலங்கை உள்ளக கிரிக்கெட் அணி

இங்கிலாந்தின் உள்ளக கிரிக்கெட் அணி (Indoor Cricket Team) இலங்கை உள்ளக..

ஜூலை மாதம் 29ஆம் திகதியும், ஒகஸ்ட் முதலாம் திகதியும் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய இரண்டு அணிகளுக்குமிடையிலான ஒரு நாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளும் நடைபெறுகின்றன. இதனை அடுத்து, ஏனைய இரண்டு ஒரு நாள் போட்டிகளுக்காகவும் இரண்டு அணிகளும் கண்டி செல்கின்றன.

அதன் பின்னர் இடம்பெறும் ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டியும், இரண்டு அணிகளுக்குமிடையிலான T-20 போட்டியும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளன.   

கடந்த 2014ஆம் ஆண்டு இலங்கைக்கு இறுதியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த தென்னாபிரிக்க அணியினர் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் இலங்கையுடன் மோதி இரண்டு தொடர்களையும் கைப்பற்றியிருந்தனர்.

ஒரு நாள், டெஸ்ட் ஆகிய இரண்டு தரவரிசைகளிலும் தற்போது இரண்டாம் இடத்தில் இருக்கும் தென்னாபிரிக்க அணி, இளம் வீரர்களினை கொண்ட இலங்கை அணிக்கு இத்தொடரில் பெரும் சவால் தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தொடர் அட்டவணை

முதல் டெஸ்ட் போட்டி – ஜூலை 12 தொடக்கம் 16 வரை – காலி
இரண்டாவது டெஸ்ட் போட்டி – ஜூலை 20 தொடக்கம் 24 வரை – கொழும்பு (SSC மைதானம்)

முதல் ஒரு நாள் போட்டி – ஜூலை 29 – தம்புள்ளை (பகல் போட்டி)
இரண்டாவது ஒரு நாள் போட்டி – ஒகஸ்ட் 1 – தம்புள்ளை (பகலிரவுப் போட்டி)
மூன்றாவது ஒரு நாள் போட்டி – ஒகஸ்ட் 5 – பல்லேகல (பகல் போட்டி)
நான்காவது ஒரு நாள் போட்டி – ஒகஸ்ட் 8 – பல்லேகல (பகலிரவுப் போட்டி)
ஐந்தாவது ஒரு நாள் போட்டி – ஒகஸ்ட் 12 – கொழும்பு (ஆர். பிரேமதாச மைதானம்) (பகலிரவுப் போட்டி)

ஒரேயொரு T-20 போட்டி – ஒகஸ்ட் 14 – கொழும்பு (ஆர். பிரேமதாச மைதானம்) (இரவுப் போட்டி)