அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2017/2018 பருவகாலத்திற்கான ஆஷஸ் தொடரின் 4 ஆவது போட்டியின் போது ஹோலிவூட் உலகின் முன்னணி நடிகரும் x-men மற்றும் wolverine திரைப்படங்களின் கதாநாயகனுமான ஹியுக் ஜக்மன் நேரடி வர்ணனை செய்து அசத்தியுள்ளார். அவுஸ்திரேலிய அணி துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்திலேயே அவர் இவ்வர்ணனையினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலிய நாட்டவரான ஹியுக் ஜெக்மன் கிரிக்கெட் மீது அதிக ஈர்ப்புக் கொண்ட வீரர் என்பது உலகறிந்த உண்மை. அவுஸ்திரேலிய அணி பங்கு கொள்ளும் பல போட்டிகளில் அவ்வப்போது பார்வையாளராக ஹியுக் ஜக்மன் கலந்து கொள்வது வழமையான விடயமாகும். ஏற்கனவே ஒரு தடவை அவுஸ்திரேலிய சுழல் பந்து ஜாம்பவான் சேன் வோர்னின் பந்துக்கு ஹியுக் ஜக்மன் துடுப்பெடுத்தாடும் வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவியமை குறிப்பிடத்தக்கது.
அலஸ்டையர் குக் இரட்டைச் சதம்; போட்டி சமநிலையில் முடிவு
2017/2018 பருவ காலத்திற்கான ஆஷஸ் தொடரின் 4 ஆவது டெஸ்ட் போட்டி நேற்று (30) சமநிலையில் முடிவுற்றது. கடந்த 26 ……..
அவ்வப்போது கிரிக்கெட் சம்பந்தமாக twitter இல் கருத்துப் பகிரும் ஹியுக் ஜக்மன் கிரிக்கெட் தொடர்பில் மிகச்சிறந்த அறிவைக் கொண்டவர். கிரிக்கெட் மைதானத்தின் வெவ்வேறு பகுதிகளையும் அதே நேரம் துடுப்பாட்ட வீரர்களின் துடுப்பாட்ட வகையினையும் துல்லியமாக தெரிந்து வைத்துள்ள ஹியுக் ஜக்மன் ஆஷஸ் தொடரின் போது அளித்த நேரடி வர்ணனை நேர்த்தியாக தொழில்சார் கிரிக்கெட் வர்ணனையாளர்களுக்கு நிகராக இருந்தமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஏற்கனவே ஒரு சில ஹோலிவூட் நட்சத்திரங்கள் கிரிக்கெட் விளையாடுவது போன்ற புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகிய போதும் ஹியுக் ஜக்மன் ஒரு படி மேலே சென்று கிரிக்கெட் வர்ணனை அளித்துள்ளமை கிரிக்கெட் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
ஹோலிவூட் உலகின் பிரபல நட்சத்திரங்கள் இவ்வாறு கிரிக்கெட் விளையாட்டின் மீது காட்டும் ஆர்வம் கிரிக்கெட் விளையாட்டு இல்லாத நாடுகளில் அதனை அபிவிருத்தி செய்ய ஒரு சிறந்த வாய்ப்பினை வழங்கும் என அவ்வப்போது கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் பாணியிலான கிரிக்கெட் மிக விரைவில் – ஹதுருசிங்க
மேற்கிந்திய தீவுகள் அணி அவர்களது பாணியிலான கிரிக்கெட்டை 1980ஆம் ஆண்டுகளில் அப்போதைய ……………….