அவுஸ்திரேலியாவை ஆட்டம் காணச் செய்த மெண்டிஸின் மிஷ்ட்ரி!

289
Sri Lanka vs Australia

அஜந்த மெண்டிஸ்… இலங்கை கிரிக்கெட் அணியில் மறக்கமுடியாத பங்கினை வகிக்கும் ஒரு பந்துவீச்சாளர். இவரது மிஷ்ட்ரி சுழல் உலகின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களை ஒரு கணப்பொழுதில் ஏமாற்றியிருக்கிறது.

“கெரம் போல்“ எனப்படும் கைவிரல்களால் சுண்டிவிடும் ஒருவித நுணுக்கமான பந்துவீச்சு முறைமைய கற்றுக்கொண்டு, எதிர்த்து நிற்கும் துடுப்பாட்ட வீரர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இவரது பந்துவீச்சு மாறியிருந்தது.

கிரிக்கெட் விளையாட்டில் முகம்சுழிக்க வைக்கும் வகையில் இடம்பெற்ற சம்பவங்கள்

மெண்டிஸின் பந்துவீச்சு திறமை ஆளமானதாக இருந்தாலும், அவருக்கு தொடர்ச்சியாக ஏற்பட்டுவந்த உபாதைகள், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக காலம் அவரை நீடித்துநிற்க விடவில்லை. 2008ம் ஆண்டு அறிமுகமாகி 7 வருடங்கள் மாத்திரமே சர்வதேச கிரிக்கெட்டில் பயணித்திருந்தாலும், இலங்கை அணிக்கு மறக்கமுடியாத ஞாபகங்களை கொடுத்தவர்களில் இவரும் ஒருவர்.

Ajantha Mendis Bowling
இலங்கை அணிக்காக பந்துவீசும் அஜந்த மெண்டிஸ்

சமுக வலைத்தளங்களை தட்டிச்செல்லும் ஒவ்வொரு இலங்கை கிரிக்கெட் ரசிகரும், அஜந்த மெண்டிஸின் கடந்த கால பந்துவீச்சு காணொளிகளை திடீரென பார்வையிட்டால், அந்த காணொளியில் இருந்து மனம் வெளிச்செல்ல மறுக்கும். அப்படி தட்டப்பட்ட காணொளிகளில், விட்டுச்சென்ற ஞாபகம் தான் 2011ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T20 தொடர். 

இரண்டு போட்டிகள் கொண்ட T20I தொடரின் முதல் போட்டி திலகரட்ன டில்ஷானின் அபார சதத்தின் உதவியுடன் இலங்கை அணி வசமாகியிருந்தது. ஒரு ஆண்டுக்கு முன், ஆஸி மண்ணில் இழந்த T20 தொடருக்கு கட்டாயமாக பதிலடி கொடுக்க வேண்டிய எண்ணத்தில் வெற்றியை தீர்மானிக்கும் இரண்டாவது போட்டியில் களமிறங்கியது இலங்கை.

இலங்கை அணிக்கான வெற்றி அன்றைய தினத்தில் ஏற்பட்ட மாற்றங்களில் இருந்து ஆரம்பித்தது. முதல் போட்டியில் அணி வெற்றிபெற்றிருந்த போதும், இரண்டு மாற்றங்களை மேற்கொண்ட இலங்கை அணி அஜந்த மெண்டிஸிற்கு வாய்ப்பினை வழங்கியது. 

அணிக்குள் நுழைந்த காலப்பகுதியிலிருந்து ஒவ்வொரு வாய்ப்பையும் எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது என்பதை மெண்டிஸ் நன்கு அறிந்துவைத்திருந்தார். அதன்படி, போட்டி ஆரம்பித்தது. 

Video – IPL எதிர் LPL…! எது கெத்து? |Sports RoundUp – Epi 125

பல்லேகலையில் ஆரம்பமான இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இலங்கை அணிக்கு, மிகப்பெரிய ஏமாற்றம் அணியின் துடுப்பாட்டம். ஒரு அளவில் மஹேல ஜயவர்தன 86 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததால், ஆஸி. அணிக்கு 158 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

T20i போட்டிகளில் இந்த ஓட்ட எண்ணிக்கை சற்று சவாலானதுதான். எனவே, அப்படி என்ன மாற்றம் நடக்கும். எப்போதும் போன்று, ஆரம்பத்தில் சிறப்பாக ஆடினால், அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றி. அல்லது இலங்கை அணி முதலில் விக்கெட்டுகளை கைப்பற்றினால் இலங்கை அணிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற சிந்தனைகள் அநேகமானவர்களின் மனதில் எழுந்துக்கொண்டிருந்தன.

எண்ணம் போல் தான் செயல் என்ற பாணியில், பார்வையிடுவோரின் சிந்தனைக்கு ஏற்ப, அவுஸ்திரேலிய அணி ஷேன் வோட்சன் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோரின் இணைப்பின் ஊடாக 71 ஓட்டங்களை பெற்றது. விக்கெட்டிழப்பின்றி 71 ஓட்டங்கள். அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 87 ஓட்டங்கள் தேவை 86 பந்துகளுக்கு என்பதுடன், 10 விக்கெட்டுகள் கைவசம்…

Shane Watson
Espncricinfo – 2011 இலங்கை அணிக்கு எதிரான அஜந்த மெண்டிஸின் பந்தினை சிக்ஸருக்கு விளாசிய ஷேன் வொட்சன்

சொந்த மண்ணில் ரசிகர்களின் கொண்டாட்டத்துக்கு மத்தியில் இப்படி ஒரு போட்டியா? தொடர் வெற்றி தவறியதா? என்ற கேள்வி ரசிகர்களை மாத்திரமின்றி, வீரர்களையும் வாட்டத்தொடங்கியது. தோற்றாலும் தொடர் தோல்வி அல்ல. ஆனாலும், அன்றைய தினம் இலங்கை அணிக்கு எழுதியிருந்தது வெற்றிதான் என்பதை அஜந்த மெண்டிஸ் உணரவைத்திருந்தார்.

மோசமான சாதனைக்கு சொந்தக்காரர்களாகிய 5 பந்துவீச்சாளர்கள்!

தன்னுடைய முதல் ஓவருக்காக, அணியின் ஆறாவது ஓவரில் அழைக்கப்பட்டார் அஜந்த மெண்டிஸ். தன்னுடைய மூன்றாவது பந்திலேயே வொட்சன் ஸ்லொக் ஸ்வீப் மூலம் சிக்ஸரை விளாச, மைதானம் அமைதி பூங்காவானது. ஆனாலும், தன்னுடைய ஆயுதமாக வைத்திருந்து கெரம் போல் பந்தினை அதே ஓவரின் 5வது பந்தில் பயன்படுத்திய மெண்டிஸ், அதிரடியாக ஆடிய வொட்சனை பெவிலியன் அனுப்பினார். 

அதுவரை மறைந்து போயிருந்த இலங்கை அணியின் வெற்றிக்கனவு மீண்டும் துகல்களாக வெளிவரத் தொடங்கின. பந்துவீச்சாளர்கள் அவுஸ்திரேலிய அணியின் ஓட்ட வேகத்துக்கு தடைப்போட்டனர். எனவே, தன்னுடைய அடுத்த ஓவரில் திரும்பிய அஜந்த மெண்டிஸ், டேவிட் வோர்னர் மற்றும் ஷோர்ன் மார்ஷ் ஆகியோரை வெளியேற்றி புத்துயிர் கொடுத்தார்.

Sri Lanka Team
Espncricinfo – 2011ம் ஆஸி. அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழப்பை கொண்டாடும் இலங்கை வீரர்கள்

போட்டிக்கு பந்துவீச்சால் மெண்டிஸ் புத்துயிர் கொடுத்தார் என்றாலும், இன்றுவரை மறக்கமுடியாத மெதிவ்ஸ் மற்றும் மஹேல இணைந்த பிடியெடுப்பு, ரசிகர்கள் ஆர்வத்தை எழுச்சியாக மாற்றியது. பௌண்டரி எல்லையில் மஹேல-மெதிவ்ஸ் நிகழ்த்திய டேவிட் வோர்னரின் பிடியெடுப்பு, அன்று இருந்த இலங்கை அணியின் களத்தடுப்பு பலத்தை சுவாரஷ்யமாக வெளிப்படுத்தியது.

ரசிகர்களின் ஆதரவுடன் போட்டியை தங்கள் பக்கம் இலங்கை அணி திருப்பியிருந்த போதும், அவுஸ்திரேலிய அணி அமைதியான முறையில் 100 ஓட்டங்களை கடக்க, அந்த அணிக்கு 6 விக்கெட்டுகள் கைவசமிருக்க, 30 பந்துகளுக்கு 45 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்பட்டது. ஆனால், தங்களுக்குள் திட்டமிட்டப்படி, அஜந்த மெண்டிஸின் இரண்டு ஓவர்களை மீதமாக கைவசம் வைத்திருந்தது இலங்கை.

இனியாவது தொடர்ந்து நடக்குமா LPL??

எனவே, மீண்டும் மிஷ்ட்ரி ஆயுதத்தை பயன்படுத்தி, போட்டியை தங்கள் பக்கம் திருப்பும் வேலை தொடக்கமானது. மெண்டிஸின் மீது அணியும், அணித் தலைவரும் வைத்த நம்பிக்கைக்கு எந்தவொரு பங்கமும் இல்லை. மீள்வருகையை ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டுடன் ஆரம்பித்த மெண்டிஸ், அடுத்த பந்தில் ப்ரெட் ஹேடினை வீழ்த்தினார்.

Ajantha Mendis
Espncricinfo – Caption – 2011ம் ஆஸி. அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழப்பை கொண்டாடும் மெண்டிஸ்-டில்ஷான்

ஹேடினின் விக்கெட் வீழ்த்தப்பட்டதுடன், தன்னுடைய T20  கிரிக்கெட்டில் புத்தம் புது சாதனையை பதிவுசெய்தார் மெண்டிஸ். போட்டி வர்ணனையாளர் “அஜந்த மெண்டிஸ் 5 விக்கெட் குவிப்பை பூர்த்திசெய்துள்ளார். T20 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இலங்கை வீரர் என்ற பெருமையையும் பெற்றுக்கொள்கிறார்” என்றார்.

புதிய சாதனைக்கு சொந்தக்காரராகிய அஜந்த மெண்டிஸ் அத்துடன், நிற்கவில்லை. இலங்கை சாதனைக்கு சொந்தக்காராகிய மெண்டிஸ், உலக சாதனைக்கு தயாரானார். தன்னுடைய இறுதி ஓவரில் மிச்சல் ஜோன்சனை போவ்ல்ட் முறையில் வெளியேற்றி, சர்வதேச T20I போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றதோடு, தொடரின் வெற்றியை இலங்கை அணி பக்கம் திரும்புவதற்கும் காரணமாகவும் அமைந்தார்.

இலங்கை கிரிக்கெட் சபையில் தனது பதவியை இராஜினமா செய்த மதிவானன்

அஜந்த மெண்டிஸின் இந்த சாதனை குறைந்த காலத்துக்கு மாத்திரமே இருந்தாலும், அடுத்த ஒரே ஆண்டில் தன்னுடைய சாதனையை மீண்டும் புதுப்பித்தார் மெண்டிஸ். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில், 8 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இவர் கைப்பற்றியிருந்தார். இந்த சாதனையை நீண்டகாலமாக தன்வசப்படுத்தியிருந்த போதும், கடந்த ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் 7 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியாவின் தீபக் சஹார் குறித்த சாதனையை முறியடித்திருந்தார். 

சாதனை முறியடிக்கப்பட்ட போதும், நிலை இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்ட போதும், இரண்டு தடவைகள் T20 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய சாதனையையும், பலம் வாய்ந்த ஆஸியின் முதற்தர துடுப்பாட்ட வீரர்களை அச்சத்தின் உச்சத்துக்கு அழைத்துச்சென்ற பாணியும், அஜந்த மெண்டிஸிற்கு மாத்திரமே சொந்தமானது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க