ஆசியக்கிண்ணத் தொடருக்கு தகுதிப்பெற்ற ஹொங் கொங்!

149

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஆசியக்கிண்ணத் தொடருக்கான குழு Aயில் ஹொங் கொங் அணி இடம்பிடித்துள்ளதுடன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை எதிர்த்தாடவுள்ளது.

ஆசியக்கிண்ணத் தொடருக்கான தகுதிச்சுற்றுப்போட்டிகள் ஓமானில் நடைபெற்றுவந்த நிலையில், நேற்றைய தினம் (24) நிறைவுக்கு வந்தது.

குறித்த இந்தப்போட்டித்தொடரில் ஹொங் கொங், குவைத், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் சிங்கபூர் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.

அபு தாபி T10 தொடரில் விளையாடவுள்ள மதீஷ பதிரண

இந்த தொடரில் ஒவ்வொரு அணிகளும் எதிரணிகளை தலா ஒவ்வொருமுறை எதிர்கொள்ளும் என்பதுடன், அதிக புள்ளிகளை பெறும் அணி ஆசியக்கிண்ணத்துக்கு தகுதிபெறும் என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதன்படி ஹொங் கொங் மற்றும் குவைத் அணிகள் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளை பெற்றிருந்ததுடன், ஐக்கிய அரபு இராச்சிய அணி 2 புள்ளிகளுடன் இறுதிப்போட்டியில் களமிறங்கியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஹொங் கொங் அணி, ஐக்கிய அரபு இராச்சியத்தை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. அதன்படி களமிறங்கிய ஐக்கிய அரபு இராச்சிய அணி 19.3 ஓவர்கள் நிறைவில் 147 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

ஐக்கிய அரபு இராச்சிய அணி சார்பாக அணித்தலைவர் சுண்டாங்கபொயில் ரிஸ்வான் 49 ஓட்டங்களையும், ஷவார் பரீட் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, பந்துவீச்சில் ஏஷான் கான் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், ஆயுஷ் சுக்லா 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி 19 ஓவர்கள் நிறைவில் வெறும் 2 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களை பெற்று வெற்றியை தக்கவைத்துக்கொண்டதுடன், 6 புள்ளிகளுடன் ஆசியக்கிண்ணத்துக்கான தகுதியையும் பெற்றுக்கொண்டது.

ஹொங் கொங் அணிசார்பாக யசீம் முர்டஷா 58 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, அணித்தலைவர் நிஷகட் கான் 39 ஓட்டங்களையும், பாபர் ஹயாட் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தப்போட்டியில் வெற்றிபெற்று ஆசியக்கிண்ணத்துக்கு தகுதிபெற்றுள்ள ஹொங் கொங் அணி தங்களுடைய முதல் போட்டியில் இந்திய அணியை எதிர்வரும் 31ம் திகதி எதிர்கொள்ளவுள்ளதுடன், செப்டம்பர் 2ம் திகதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

ஆசியக்கிண்ணத் தொடர் இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், முதல் போட்டியில் இலங்கை அணியானது, ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசியக்கிண்ண குழு விபரம்

குழு A – இந்தியா, பாகிஸ்தான், ஹொங் கொங்

குழு B – இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<