இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஹைலென்டர்ஸ் கோல்ப் போட்டிகள்

74
©Sri Lanka Army

இலங்கை இராணுவ கோல்ப் சங்கத்தினால் மூன்றாவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட 2019ஆம் ஆண்டிற்கான ஹைலன்டர்ஸ் கோல்ப் போட்டிள் கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி மீள்நிர்மானம் செய்யப்பட்ட தியதலாவையிலுள்ள இராணுவ கோல்ப் மைதானத்தில் இடம்பெற்றது. 

இலங்கையின் கோல்ப் விளையாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இப் போட்டித் தொடரில் இலங்கை இராணுவம் உள்ளிட்ட முப்படையைச் சேர்ந்த வீரர்கள் உள்ளடங்கலாக 79 தேசிய மட்ட கோல்ப் விளையாட்டு வீரர்களும் பங்கேற்றிருந்தனர்

இலங்கை இளையோர் வலைப்பந்து அணிக்கு முதல் 2 போட்டிகளிலும் அபார வெற்றி

மெலனி விஜேசிங்கவின் அபார ஆட்டத்தினால் …….

இம்முறை போட்டிகளில் கொழும்பு றோயல் கோல்ப் கழகம், காலி, நுவரெலியா கோல்ப் கழகம், விமானப்படைபைச் சேர்ந்த கோல்ப் வீரர்கள் மற்றும் விமானப்படைத் தளபதி, விமானப்படையின் பதவி நிலை பிரதானி, கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஸ்ரீநாத் ராஜபக்ஷ, முன்னணி கோல்ப் வீராங்கனைகள் என பல தரப்பினரும் கலந்து சிறப்பித்ததுடன், வீரர்கள் தமது திறமைகளை வெளிக்காட்டி வெற்றிகளைப் பதிவு செய்தனர்.   

அத்துடன், இம்முறை போட்டிகளில் புதிய முயற்சியாக கோல்ப் விளையாட்டை ரசிகர்கள் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இலங்கை இராணுவ கோல்ப் சங்கத்தினால் ஹைலென்டர்ஸ் கிண்ணமும், இராணுவத் தளபதி கிண்ணமும் வழங்கிவைக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்

இதில் இலங்கையின் அனுபவமிக்க கோல்ப் வீரரும், கொழும்பு கோல்ப் கழகத்தைச் சேர்ந்தவருமான அமில அமரசூரிய இவ்வருடத்துக்கான ஹைலெண்டர்ஸ் கிண்ணத்தை வெற்றி கொண்டார்

அதேநேரம், புதிதாக சேர்க்கப்பட்ட இராணுவத் தளபதி கிண்ணத்தை விமானப்படையைச் சேர்ந்த குரூப் கெப்டன் எச். தர்மதாஸ வெற்றி கொண்டார். அத்துடம், ஓய்வுபெற்ற முன்னாள் மேஜர் ஜெனரல் ஸ்ரீநாத் ராஜபக்ஷ உள்ளிட்ட அதிகாரிகளுக்கு விசேட விருதுகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன

இதேவேளை, இலங்கை இராணுவ கோல்ப் சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் நன்த குருசிங்கவின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க அன்றைய தினம் மாலை நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இலங்கை இளையோர் தேசிய கால்பந்து அணிக்கான வீரர்கள் தேர்வு இம்மாதம்

இலங்கை 18 வயதின்கீழ் மற்றும் 19 வயதின்கீழ் ………

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இன்று முப்படையினர் மற்றும் கழகங்களைச் சேர்ந்த ஏராளமான கோல்ப் வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியதை இந்த போட்டிகளில் நாம் கண்டோம். இந்த கோல்ப் போட்டியில் ஆர்வத்துடன் இணைந்தவர்களை மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன். நீங்கள் இந்த கோல்ப் விளையாட்டை எவ்வளவு நன்றாக நேசிக்கின்றீர்கள் என்று எனக்கு தெரியும். விளையாட்டிற்கு பொறுமையும் ஒழுக்கமும் தேவை” என்று இராணுவ தளபதி கூறினார்.   

இலங்கை இராணுவ விளையாட்டுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் அநுர சுதசிங்க, மத்திய பாதுகாப்பு படைப்பிரிவின் கட்டளை அதிகாரி லக்சிறி வடுகே உள்ளிட்டோரும் இதன்போது வருகை தந்திருந்ததுடன், வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களையும் வழங்கிவைத்தனர்.  

மேலும், இம்முறை போட்டிகளின் பிரதான அனுசரணையாளர்காளாக டயலொக் ஆசியாட்டா நிறுவனமும், ஸ்ரீலங்கன்ஸ் விமான நிலையமும் செயற்பட்டிருந்ததுடன், வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்களுடன், விமானப் பயணச்சீட்களும் வழங்கி வைக்கப்பட்டமை இதன் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<