ஒரு நாள் போட்டிகளில் மற்றுமொரு சாதனையை நிலைநாட்டிய ஹசிம் அம்லா

1258

தென்னாபிரிக்க அணியின் ஒட்டக் குவிப்பு இயந்திரம் என்னும் சிறப்பு பெயர் மூலம் அழைக்கப்படும் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ஹசிம் அம்லா, ஒரு நாள் போட்டிகளில் அதி விரைவாக 7,000 ஓட்டங்களைக் கடந்த வீரர்  என்ற சாதனையை பதிவுசெய்துள்ளார்.

குல்னா டைட்டன்ஸ் தலைமை பயிற்றுவிப்பாளராக மஹேல

இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன பங்களாதேஷ்..

இதற்கு முன்னதாக, இந்திய அணியின் தலைவர் விராட் கோலி மூலம் மேற்கொள்ளப்பட்டிருந்த இச்சாதனையை நேற்று (29) கிரிக்கெட்டின் தாயகமான லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெற்றிருந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியில் அம்லா தகர்த்திருந்தார்.

நேற்றைய போட்டியின்போது, தனது 150ஆவது ஒரு நாள் இன்னிங்சினை விளையாடியிருந்த (153 ஆவது போட்டி) அம்லா, அப்போட்டியில் 23 ஓட்டங்களை கடந்திருந்த நிலையில் தனது 7,000ஆவது ஒரு நாள் ஓட்டத்தினைப் பூர்த்தி செய்திருந்தார். இச்சாதனையினை இதற்கு முன்னர் நிலைநாட்டியிருந்த விராட் கோலி அதற்காக 161 இன்னிங்சுகளை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அம்லா இதோடு சேர்த்து ஒரு நாள் போட்டிகளில் அதி குறைந்த இன்னிங்சுகளில் 2,000  ஓட்டங்கள் (40 இன்னிங்ஸ்கள்),  3,000 ஓட்டங்கள் (57 இன்னிங்ஸ்கள்), 4,000 ஓட்டங்கள் (81 இன்னிங்ஸ்கள்), 5,000 ஓட்டங்கள் (101 இன்னிங்கள்) மற்றும் 6,000 ஓட்டங்கள் (123 இன்னிங்ஸ்கள்) பெற்ற வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணிக்கெதிரான நேற்றைய போட்டியில், மொத்தமாக 55 ஓட்டங்களை ஹசிம் அம்லா குவித்திருந்தார். இப்போட்டியில் தென்னாபிரிக்க அணி 7 விக்கெட்டுக்களால் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இலகு வெற்றியினை பெற்றிருந்தது.