மேஜர் T20 லீக்கில் பொலிஸ் கழகத்துக்கு அமர்க்கள வெற்றி

136
Major Club T20 2021

உள்ளூர் கழக மட்டத்தில் உள்ள திறமையான வீரர்களை இனங்காணும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்துள்ள முதல்தர கழகங்களுக்கிடையிலான இருபதுக்கு 20 தொடரின் முதல் வாரத்தின் மூன்றாவது நாளான இன்று (06) எட்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. 

இலங்கை T20 அணியின் தலைவர் தசுன் ஷானக்க தலைவராக உள்ள இலங்கையின் முன்னணி முதல்தர கழகங்களில் ஒன்றான SSC கழகம், பொலிஸ் விளையாட்டுக் கழகத்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது.

மேற்கிந்திய தீவுகள் தொடரில் பங்கேற்க தசுன் ஷானக்க கரீபியன் தீவுகள் நோக்கி பயணமாகவுள்ளதால் குறித்த போட்டியில் SSC கழகத்தை சரித் அசலங்க வழிநடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> தசுன் ஷானக்க மேற்கிந்திய தீவுகள் செல்வது உறுதி

இதனிடையே, லங்கன் கிரிக்கெட் கழகத்துக்காக ஹர்ஷ குரே, ப்ளூம்பீல்ட் கழகத்துக்காக கசுன் ஏக்கநாயக்க ஆகிய இருவரும் அரைச்சதங்களைக் குவிக்க, முவர்ஸ் கழகத்துக்கு எதிரான போட்டியில் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழக வீரர் ரன்தீர ரணசிங்க ஐந்து விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார். 

இதுஇவ்வாறிருக்க, இன்று மாலை நடைபெற்ற நான்கு போட்டிகள் சீரற்ற காலநிலையால் தடைப்பட்டதுடன், முன்னணி கழகங்ளான ப்ளூம்பீல்ட், முவர்ஸ் மற்றும் தமிழ் யூனியன் ஆகிய கழகங்கள் தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

SSC எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

கோல்ட்ஸ் கழக மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தியிருந்த பொலிஸ் விளையாட்டுக் கழகம், SSC கழகத்தை 3 விக்கெட்டுகளால் வீழ்த்தி இலகு வெற்றியினைப் பெற்றுக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

SSC கழகம் – 122/10 (19.3)ஷம்மு ஷான் 44, தரிந்து ரத்னாயக்க 20, தனால் ஹேமானந்த 3/21, அசேல சிகார 2/29, சுஜான் மயுர 2/24, லஹிரு தியன்த 2/15

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 123/7 (20)மதுரங்க சொய்ஸா 37, ஷெஹான் பெர்னாண்டோ 34, ஹிமேஷ் ராமநாயக்க 2/25

முடிவுபொலிஸ் விளையாட்டுக் கழகம் 3 விக்கெட்டுக்களால் வெற்றி

கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் இராணுவ கிரிக்கெட் கழகம்

(கட்டுநாயக்க விளையாட்டு மைதானம்)

கடற்படை விளையாட்டுக் கழகம் – 85/10 (19.5)சானக ருவன்சிறி 30, ஜனித் சில்வா 4/10,  மஹீஷ்  தீக் 2/09

இராணுவ கிரிக்கெட் கழகம் – 87/1 (11.4) – ஷான் ரன்திக 44, பெதும் டில்ஷான் 30*

முடிவுஇராணுவ விளையாட்டுக் கழகம் 9 விக்கெட்டுக்களால் வெற்றி 

>> மேஜர் T-20 லீக்கில் லஹிரு உதார அரைச்சதம்: 5 விக்கெட்டுக்களை எடுத்த ரொஸ்கோ

லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

(பி. சரா ஓவல் மைதானம்

லங்கன் கிரிக்கெட் கழகம் – 164/4 (20)ஹர்ஷ குரே 65*, சாலிய சமன் 32, விஷ் சதுரங்க 30, கீத் குமார 26, ரொஹான் சன்ஜய 2/14

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 162/10 (20) – ப்ரியமால் பெரேரா 41, கவிஷ் அன்ஜுல 36, ஜெஹான் டேனியல் 25, சங்கீத் குரே 24, கேஷான் விஜேரட்ன 2/11, ரொஷான் ஜயதிஸ்ஸ 3/27, கேஷான் விஜேரட்ன 3/30

முடிவுலங்கன் கிரிக்கெட் கழகம் 2 ஓட்டங்களால் வெற்றி

கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் நுகேகொட விளையாட்டுக் கழகம்

(SSC மைதானம்)

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 160/9 (20)மினோத் பானுக்க 34, ஷான் ப்ரியன்ஞன் 39, பவன்த வீரசிங்க 25*, லசித் அபேரட்ன 22, மின்ஹாஜ் ஜலீல் 2/17

நுகேகொட விளையாட்டுக் கழகம் – 152/4 (20)ப்ரமோத் ஹெட்டிவத்த 41*, உமேஷ் கருணாரத்ன 38, மின்ஹாஜ் ஜலீல் 22, நுதித லக்ஷான் 24*, லஹிரு கமகே 2/36

முடிவுகொழும்பு கிரிக்கெட் கழகம் 8 ஓட்டங்களால் வெற்றி 

விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம்

(பி. சரா ஓவல் மைதானம்)

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 167/5 (20) – கசுன் ஏக்கநாயக்க 81*, டில்ஹான் குரே 20, நிமேஷ் மெண்டிஸ் 2/23

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 85/2 (11) – உதயவன்ச பராக்ரம 35, சாமர பெர்னாண்டோ 25

முடிவு – விமானப்படை விளையாட்டுக் கழகம் டக்வர்த் லூவிஸ் முறைப்படி 4 ஓட்டங்களால் வெற்றி 

>> ப்ரீமியர் லீக் T20 தொடரின் முதல் நாளில் அசத்திய சதீர, ப்ரியமால் மற்றும் தனஞ்சய லக்ஷான்

முவ்ர்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்

(கோல்ட்ஸ் கழக மைதானம்)

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 159/8 (20) – மஹேல உடவத்த 32, பசிந்து சூரியபண்டார 33, அதீஷ திலன்சன 21, பபசர வடுகே 20, சச்சித்ர சேரசிங்க 20, ரன்தீர ரணசிங்க 5/26

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 114/1 (14) – கயான் மனீஷன் 45, தனுஷ்க தர்மசிறி 43*, சச்சித்ர சேரசிங்க 1/26

முடிவு – குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் டக்வர்த் லூவிஸ் முறைப்படி 3 ஓட்டங்களால் வெற்றி

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

(கட்டுநாயக்க மைதானம்)

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் 137/5 (20) – தவீஷ கஹடுவாரச்சி 46, ஹஷான் துமிந்து 31, அயன சிறிவர்தன 30*

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 88/4 (14) – சதீர சமரவிக்ரம 40*, ப்ரமோத் மதுவன்த 2/18

முடிவு – சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் டக்வர்த் லூவிஸ் முறைப்படி 3 ஓட்டங்களால் வெற்றி

BRC கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

(SSC மைதானம்) 

BRC கழகம் – 162/10 (20) – துஷான் ஹேமன்த 48, லஹிரு சமரகோன் 33, ரமிந்த விஜேசூரிய 27, சனுக துலாஜ் 24, டில்ஷான் கான்ஷன 2/23

காலி கிரிககெட் கழகம் – 46/5 (11) – இமேஷ் உதயங்க 16*, மொஹமட் சிராஸ் 2/07 

முடிவு – BRC கழகம் டக்வர்த் லூவிஸ் முறைப்படி 47 ஓட்டங்களால் வெற்றி

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<