இங்கிலாந்து பிராந்திய கழகத்தில் திமுத் கருணாரத்ன விளையாடுவதில் சிக்கல்

361

இங்கிலாந்தின் உள்ளூர் கழகமான ஹெம்ஷையர் அணியுடன் விளையாடுவதற்கு கடந்த பெப்ரவரி மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்ன, அந்த அணிக்காக விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுடனான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி அடுத்தடுத்து தோல்வியை சந்தித்ததையடுத்து தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் தொடருக்கு தற்காலிகத் தலைவராக 30 வயதான திமுத் கருணாரத்ன நியமிக்கப்பட்டார்.  

கௌண்டி கிரிக்கெட்டில் கால் பதிக்கும் திமுத் கருணாரத்ன

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரும், தென்னாபிரிக்க டெஸ்ட்…

அவரது தலைமையில் இலங்கை அணி தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. அங்கு டெஸ்ட் தொடரை வசப்படுத்திய முதல் ஆசிய அணி என்ற சிறப்பையும் இலங்கை அணி பெற்றுக்கொண்டது.  

இதனால் இம்முறை உலகக் கிண்ணத்தில் திமுத் கருணாரத்னவுக்கு தலைவர் பதவியை வழங்குதற்கும், இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறக்குவதற்கும் தேர்வாளர்கள் தீவிரமாக சிந்தித்து வருகின்றனர்.  

இந்த நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மாகாண அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடரில் கண்டி அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.  

எனவே, இந்தப் போட்டித் தொடரில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்களே உலகக் கிண்ண அணிக்காக தெரிவு செய்யப்படவுள்ளதுடன், இலங்கை அணியின் தலைவர் யார் என்பதை தீர்மானிக்கவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எனவே, குறித்த காலப்பகுதியில் இங்கிலாந்து உள்ளூர் கழக மட்டப் போட்டிகளும் நடைபெறவுள்ளதால், திமுத் கருணாரத்ன பெரும்பாலும் ஹெம்ஷையர் அணிக்காக விளையாமாட்டார் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் அவரது ஒப்பந்தம் இரத்து செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் SSC அணி சம்பியன்

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இலங்கையின் உள்ளூர் முதல்தரக் கழகங்கள் இடையே…

இந்த நிலையில், திமுத் கருணாரத்ன தொடர்பில் ஹெம்ஷையர் அணியின் பயிற்றுவிப்பாளர் கிரைக் வைட் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுத் கருணாரத்ன ஹெம்ஷையர் அணிக்காக விளையாடுவாரா? இல்லையா? என்பது தொடர்பில் இதுவரை எமக்கு அறிவிக்கவில்லை. அவருடைய பதிலை நாம் எதிர்பார்த்துள்ளோம். எதிர்வரும் மே மாதம் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக திமுத் கருணாரத்னவை இணைத்துக் கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், அவர் எமது அணிக்காக விளையாடுவதை உறுதி செய்யும் வரை நாம் காத்துக் கொண்டிருக்கிறோம். இல்லாவிட்டால் அவருக்கு பதிலாக மாற்று வீரர் ஒருவரை அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

டெஸ்ட் வீரர்என்று முத்திரை குத்தப்பட்ட திமுத் கருணாரத்ன 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். 30 வயதான திமுத், இதுவரை 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 190 ஓட்டங்களை மாத்திரமே எடுத்துள்ளார்.

இது குறித்து திமுத் கருணாரத்ன கூறுகையில், ‘உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு நான் தான் தலைவர் என்று எதுவும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் ஒருநாள் போட்டி அணிக்கு தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக என்னிடம் தேர்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். இதனால் இங்கிலாந்தின் ஹெம்ஷையார் அணியுடன் விளையாடுவதை தவிர்க்கும்படி தேர்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

வரலாறு படைத்த டெஸ்ட் வீரர்கள் இலங்கை வருகை

தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறாத இலங்கை டெஸ்ட்…

உலகக் கிண்ண அணிக்கு தேர்வு செய்யப்பட்டால் அதற்கு தயாராவதற்கு பயிற்சி முகாம்களில் பங்கேற்க வேண்டி இருக்கும். அவ்வாறு நிகழ்ந்தால் இங்கிலாந்தின் உள்ளூர் அணியான ஹெம்ஷையர் அணிக்கு நான் விளையாட முடியாமல் போகலாம்என்றார்.

இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற செரசன்ஸ் அணிக்கெதிரான ப்ரீமியர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரின் அரையிறுதிப் போட்டியில், எஸ்.எஸ்.சி அணிக்காக மூன்றாமிடத்தில் களமிறங்கிய திமுத் கருணாரத்ன, 115 பந்துகளில் 109 ஓட்டங்களைப் பெற்றிருந்ததுடன், கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காது 20 ஓட்டங்களைப் பெற்றிருந்ததோடு, எஸ்.எஸ்.சி கழகத்தை வெற்றிப் பாதைக்கும் இட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு திமுத் கருணாரத்ன கருத்திற் கொள்ளப்படலாம் என பெரிதும் நம்பப்டுகின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<