கிரிக்கெட் இயக்குனராக மொஹமட் ஹபீஸின் பதவிக்காலம் நிறைவு

94

பாகிஸ்தான் ஆடவர் கிரிக்கெட் அணி இயக்குனராக (Pakistan Men’s Team Director) செயற்பட்டு வந்த மொஹமட் ஹபீஸின் பதவிக்காலம் நிறைவுக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவூப்பின் ஒப்பந்தம் இரத்து

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சகலதுறைவீரரான மொஹமட் ஹபீஸ் ஒருநாள் உலகக் கிண்ணத்தை அடுத்து பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் அணியின் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

மொஹமட் ஹபீஸின் நியமனத்தினை தொடர்ந்து பாகிஸ்தான் அணி புதிய தலைவர்களையும் பெற்றது. அதன்படி பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவராக ஷான் மசூத், T20I அணியின் தலைவராக சஹீன் அப்ரிடி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

விடயங்கள் இவ்வாறு காணப்பட்ட நிலையிலையே நேற்று X இணையதளம் வாயிலாக மொஹமட் ஹபீஸின் இயக்குனர் பதவிக்காலம் நிறைவடைந்திருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) குறிப்பிட்டுள்ளதோடு, அவரது சேவைக்கு நன்றிகளையும் தெரிவித்திருக்கின்றது.

இதற்கு முன்னர் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அகடமியில் முக்கிய பொறுப்புக்களில் காணப்பட்ட மிக்கி ஆத்தர், கிரான்ட் பிரட்பன் மற்றும் அன்ட்ரூ புட்டிக் ஆகியோரும் தங்களது பதவிகளில் இருந்து விலகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை மொஹமட் ஹபீஸின் நியமனத்தினை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடியிருந்த அவுஸ்திரேலிய அணிக்கு டெஸ்ட் தொடர் (3-0) மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான T20I தொடர் (4-1) என்பவற்றில் மோசமான தோல்விகளை சந்தித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<