நியூசிலாந்து தொடருக்கான ஆப்கானிஸ்தான் டெஸ்ட் குழாம் அறிவிப்பு

55

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒரு போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள 16 பேர்கொண்ட ஆப்கானிஸ்தான் குழாத்தில் அனுபவ சகலதுறை வீரர் குல்பதீன் நயீப் இணைக்கப்படவில்லை என்பதுடன், கடைசியாக நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு டெஸ்ட் போட்டியில் விக்கெட்காப்பாளராக செயற்பட்ட ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

>>மீண்டும் பயிற்சியாளராக அவதாரம் எடுக்கும் ரங்கன ஹேரத்

இவர்களுடன் வேகப்பந்துவீச்சாளர் நவீன் ஷர்டான் உபாதை காரணமாக நீக்கப்பட்டுள்ளதுடன், முதன்மை குழாத்திலிருந்த வேகப்பந்துவீச்சாளர்களான பரீட் அஹ்மட் மலீக் மற்றும் 17 வயதான யமா அராப் ஆகியோர் இறுதி குழாத்திலிருந்து வாய்ப்பை இழந்துள்ளனர்.

ஹஷ்மதுல்லாஹ் சஹிடி தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள டெஸ்ட் குழாத்தில் இப்ரஹீம் ஷர்தான், அஸ்மதுல்லாஹ் ஒமர்ஷாய் மற்றும் ரஹ்மத் ஷா போன்ற முன்னணி வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்க இடையிலான ஒரு போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் உள்ள கிரேட்டர் நொரீடா விளையாட்டு அரங்கில் எதிர்வரும் 9ம் திகதி முதல் 13ம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் குழாம்

 

ஹஸ்மதுல்லாஹ் ஷஹிடி (தலைவர்), இப்ரஹீம் ஷர்தான், ரியாஸ் ஹஸன், அப்துல் மலிக், ரஹ்மத் ஷா, பஹீர் ஷா மஹ்பூப், இக்ரம் அலி கில், ஷஹிதுல்லாஹ் கமல், அப்ஷர் ஷசாய், அஸ்மதுல்லாஹ் ஒமர்ஷாய், சியா உர் ரஹ்மான் அக்பர், ஷேம்ஸ் உர் ரஹமான், குவைஸ் அஹ்மட், ஷாஹீர் கான், நிஜாத் மசூட், கஹ்லீல் அஹ்மட்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<