இலங்கை கிரிக்கெட் பயிற்சிகளுக்கான ‘Coach Education App’

88

கொரோனா வைரஸ் காரணமாக வீடுகளுக்குள் முடங்கிப்போயுள்ள கிரிக்கெட் பயிற்றுனர்களின் அறிவினை அதிகரிக்கும் நோக்கில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ‘Coach Education App’ என்ற புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்வதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பயிற்சியாளர்களுக்கான கல்வி மையம் நடவடிக்கை எடுத்துள்ளது.   

இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் வீட்டில் இருந்தவாறே கைத்தொலைபேசி அல்லது கணினி மூலம் பயிற்றுனர்களுக்கு கிரிக்கெட் தொடர்பான அறிவினைப் பெற்றுக்கொள்ள முடியும். 

IPL தொடர் இலங்கையில் நடத்தப்படுமா?

கொவிட்-19 வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரினை……….

Google Play Store அல்லது Apple App Store   ஊடாக இலவசமாக இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதனால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் உயர் செயற்றிறன் மத்திய நிலையம், மாகாணம் மற்றும் மாவட்டம், விளையாட்டு கழங்கள், பாடசாலை என அனைத்து பயிற்றுனர்களும் பயன்பெற முடியும்.   

அதுமாத்திரமின்றி, தனியார் கிரிக்கெட் அகடமிகளை நடாத்திச் செல்கின்ற பயிற்றுனர்கள் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொண்ட பயிற்றுனர்கள் இந்த டிஜிட்டல் பயிற்சி செயலியை பயன்படுத்த முடியும்.

எனவே, கிரிக்கெட் பயிற்றுனர்களுக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலி தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாட்டு பிரதானி ஜெரொம் ஜயரத்ன கருத்து தெரிவிக்கையில், 

“இந்தப் புதிய செயலியின் மூலம் பயிற்றுனர்களுக்கு தமது வேலைகளை இன்னும் இலகுவாக மேற்கொள்ள முடியும். இவ்வாறான தொரு செயலியை கிரிக்கெட் பயிற்றுனர்களுக்கு அறிமுகம் செய்ய கிடைத்தமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என தெரிவித்தார். 

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பயிற்சி நிறுவனத்தின் பிரதானி ஹேஷான் டி மெல் இந்த செயலி குறித்து தெரிவிக்கையில், “டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கிரிக்கெட் பயிற்றுனர்களின் அறிவினை மேம்படுத்தும் நோக்கில் இந்த செயலிஅறிமுகப்படுத்தப்படுள்ளது” என குறிப்பிட்டார்.

இதனிடையே, கிரிக்கெட் பயிற்றுனர் செயலியின் ஊடாக கிரிக்கெட் பயிற்றுனர்களுக்கும், ஆலோசகர்களுக்கும் தேவையான அறிவினைப் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களது தனிப்பட்ட தகவல்கள் தன்னிச்சையாக செயலியின் சேமிப்பகத்தில் உள்ளடக்கப்படும்.

 >> மேலும் பலகிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<