மார்ச்சில் ஆரம்பமாகும் கெலக்ஸி கிண்ண கரப்பந்தாட்ட தொடர்

Galaxy Cup Volleyball Championship 2021

82
Photo Courtesy - Sri Lanka Volleyball Federation
 

இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில், எதிர்வரும் மார்ச் மாதம் 25 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கெலக்ஸி கிண்ண (Galaxy Cup) கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கெலக்ஸி கிண்ண கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடருக்கான அனுசரணையாளர்களாக சீன நிறுவனமான, பூஷெங் லங்கா இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங் தனியார் நிறுவனம் கைக்கோர்த்துள்ளதாக, இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

>> புதிய ஜேர்சியுடன் களமிறங்கவுள்ள பங்களாதேஷ் அணி!

கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக சர்வதேசத்தில் மாத்திரமல்லாமல், இலங்கையிலும் விளையாட்டுப்போட்டிகள் பாதிக்கப்பட்டு வந்தன. இந்தநிலையில், தற்போது இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சுகளின் ஆதரவுடன் போட்டிகள் மீண்டும் நடைபெற தொடங்கியுள்ளன.

இவ்வாறு விளையாட்டு போட்டிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து, அனுமதி கிடைத்துவரும் நிலையில், கரப்பந்தாட்ட போட்டிகளை மீண்டும் ஆரம்பிக்க, இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்தவகையில், கெலக்ஸி கிண்ண கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரை மார்ச் மாத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த இந்த தொடருடன், இணையும் முகமாக, பூஷெங் லங்கா இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங் தனியார் நிறுவனம், இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டுள்ளது.  

குறித்த இந்த நிகழ்வில், இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொண்டதுடன், பூஷெங் லங்கா இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங் தனியார் நிறுவனத்தின் தலைவர் பூ ஷங்குயி (FU ZHONGYUE) கலந்து்கொண்டார். 

>> மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க <<