இலங்கைக்கு சவால் கொடுக்குமா ஓமான்?

844

உலகக் கிண்ணத் தகுதிகாண் சுற்றுத் தொடர் ஆரம்பித்து இரண்டாவது நாளிலேயே முதல் அதிர்ச்சி போட்டி இடம்பெற்றிருக்கின்றது. அதாவது உலகக் கிண்ணத் தகுதிகாண் சுற்றுத் தொடரின் நான்காவது போட்டியில் ஐ.சி.சி. இன் முழு அங்கத்துவம் கொண்டிருக்கும் அயர்லாந்து அணியினை ஐ.சி.சி. இன் முழு அங்கத்துவம் பெறாத ஓமான் அணி  வீழ்த்தி சாதனை செய்திருந்தது.

கவுன்டி கிரிக்கெட்டில் களமிறங்கும் அஜிங்கியா ரஹானே

ஓமான் அணி அயர்லாந்து அணியுடனான போட்டியில் வெற்றி பெற்றதனை அடுத்து அவ்வணி அடுத்ததாக வெள்ளிக்கிழமை (23) இலங்கையுடன் ஆடவிருக்கும் போட்டி அதிக எதிர்பார்ப்புமிக்கதாக மாறியிருக்கின்றது. எனவே நாம் இந்த கட்டுரையில் இலங்கை – ஓமான் அணிகள் இடையிலான உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டி முன்னோட்டத்தினை பார்ப்போம்.

இலங்கை அணி

மேற்கிந்திய தீவுகளின் பிரபல வர்னணையாளர் இயன் பிஷொப் குறிப்பிட்டது போன்று உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரில் அதிக எதிர்பார்ப்புடன் காணப்படும் அணிகளில் ஒன்றாக இலங்கை இருக்கின்றது. எனினும் முன்னாள் உலகக் கிண்ண சம்பியன்களான இலங்கை வீரர்கள் தகுதிகாண் தொடர் என்பதற்காக எதிரணிகளை குறைவாக மதிப்பிட்டு விடக் கூடாது என்பது திண்மமாகும்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான கிறிஸ் சில்வர்வூட், இலங்கை வீரர்கள் உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரில் விளையாடும் எந்த அணிகளையும் குறைவாக மதிப்பிடக் கூடாது என தகுதிகாண் போட்டித் தொடருக்கு முன்னதாக குறிப்பிட்டிருந்தார். இதற்கு சான்றாகவும் வகையில் ஓமான் தமது முதல் போட்டியில் விளையாடியிருக்கும் நிலையில் இலங்கை வீரர்கள் தமது அடுத்த மோதலில் ஓமானை இலகுவாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை வீரர்களை நோக்கும் போது ஒரு சமநிலையான வீரர்கள் குழாத்துடன் காணப்படுகின்றனர். இலங்கை அணி ஜிம்பாப்வேயில் விளையாடிய பயிற்சிப் போட்டியிலும் சரி அதன் பின்னர் ஐக்கிய அரபு இராச்சியத்துடன் ஆடிய போட்டியிலும் சரி சிறப்பான வீரர்கள் இணைப்புடன் இருந்ததனை அவதானிக்க முடியுமாக இருந்தது.

தென்னாபிரிக்க A அணிக்காக சதம் விளாசிய டிரிஸ்டன் ஸ்டப்ஷ்!

ஆனால் இலங்கை அணியின் முதல் போட்டியில் உடல் நலக் குறைவினால் வேகப் பந்துவீச்சாளரான துஷ்மன்த சமீர களமிறங்கத் தவறியிருந்தார். துஷ்மன்த சமீர களமிறங்கும் போது இலங்கை அணி அதிக சமநிலைத் தன்மை கொண்ட அணியாக மாறும் என்பதில் சந்தேகம் கிடையாது. எனவே ஓமான் அணியுடனான போட்டியின் போது இலங்கை வீரர்கள் ஒரு மாற்றத்துடன் களமிறங்க எதிர்பார்க்கலாம்.

இருக்கும் வீரர்களில் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தினை பலப்படுத்தும் வீரர்களாக முன்வரிசையில் ஆடும் பெதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரட்ன மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் இருக்க, அணியின் மத்திய வரிசைக்கு சதீர சமரவிக்ரம, தனன்ஞய டி சில்வா, சரித் அசலன்க, அணித்தலைவர் தசுன் ஷானக்க மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் பலம் வழங்குகின்றனர்.

இந்த வீரர்களில் இலங்கை ஒருநாள் அணியில் அண்மையில் இணைந்த திமுத் கருணாரட்ன மற்றும் சதீர சமரவிக்ரம ஆகிய இருவரும் தொடர்ச்சியாக அசத்தல் ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் திமுத் கருணாரட்ன கடைசியாக தான் விளையாடிய மூன்று ஒருநாள் போட்டிகளிலும் அரைச்சதம் விளாசியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜிம்பாப்வேயில் இலங்கை அணியுடன் இணையும் இளம் வீரர்கள்

இலங்கை அணியின் பந்துவீச்சினைப் பொறுத்தவரை வேகப் பந்துவீச்சாளர்களான லஹிரு குமார, கசுன் ராஜித மற்றும் சுழல்வீரர்களான வனிந்து ஹஸரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோரின் சேவை இலங்கை அணிக்கு காணப்படுகின்றது. இதில் வனிந்து ஹஸரங்க தனது இறுதி ஒருநாள் போட்டியில் தன்னுடைய சிறந்த ஒருநாள் பந்துவீச்சுப் பிரதியினை பதிவு செய்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். ஷ

எனினும், இலங்கை அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளராக உள்ள துஷ்மன்த சமீர பூரண உடற்தகுதி பெறாமையினால் அடுத்த போட்டியிலும் விளையாட மாட்டார் என்ற சந்தேகம் உள்ளது. எனினும், இறுதி நேரத்தில் அவர் அணியில் இணைவதென்பது இலங்கைக்கு மிகப் பெரிய பலமாகவே அமையவுள்ளது.

மெண்டிஸ், திமுத் சதங்களோடு இலங்கை அபார வெற்றி

இதேநேரம், இலங்கை அணி மேலதிக வீரர்களாக தென்னாபிரிக்க A அணிக்கு எதிரான தொடரில் பிரகாசித்த டில்ஷான் மதுசங்க, துனித் வெல்லாலகே மற்றும் அறிமுக சுழல்சகலதுறை வீரர் சஹான் ஆராச்சிகே ஆகியோரை ஜிம்பாப்வேயிற்கு அழைத்திருக்கின்றது.

எதிர்பார்ப்பு இலங்கை பதினொருவர்

பெதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தசுன் ஷானக்க (தலைவர்), தனன்ஞய டி சில்வா, வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஷன, துஷ்மன்த சமீர/ கசுன் ராஜித, லஹிரு குமார

ஓமான் அணி

இலங்கை அணியுடன் இதற்கு முன்னர் ஒருநாள் போட்டிகளில் ஆடாது போயினும் ஓமான் T20 போட்டிகளில் ஆடியிருந்தது. அவ்வாறு விளையாடிய T20 போட்டிகளில் இலங்கைக்கு அதிக போட்டித் தன்மையினை ஓமான் வழங்கியிருந்தது. ஓமான் அணியின் பயிற்றுவிப்பாளராக இருக்கும் துலீப் மெண்டிஸ் இலங்கை அணியினை டெஸ்ட் போட்டியொன்றில் வழிநடாத்திய முதல் தலைவராக காணப்படுகின்றார். இந்த விடயம் மற்றும் ஓமான் அணி தமது முதல் போட்டியில் அயர்லாந்துடன் அடைந்த வெற்றி என்பன அவ்வணியின் ஆற்றலுக்கு சான்றாக அமைகின்றது.

ஓமான் அணியினைப் பொறுத்தவரை அதன் ஆரம்பவீரரான கஷியாப் ப்ராஜபாட்டி, ஜடின்தர் சிங், ஆகிப் இல்யாஸ் மற்றும் அணித்தலைவர் சீசான் மக்சூத் அணியின் நம்பிக்கைகுரிய துடுப்பாட்டவீரர்களாக காணப்பட, பந்துவீச்சில் பிலால் கான், பய்யாஸ் பட் மற்றும் அயான் கான் ஆகிய வீரர்கள் நம்பிக்கை வழங்குகின்றனர்.

ஓமான் அணி இலங்கை வீரர்களுடனான போட்டியில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை. அவ்வணி முதல் போட்டியில் ஆடிய அதே குழாத்தினை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்பார்க்கை ஓமான் குழாம்

கஷியாப் ப்ராஜபாதி, ஜடின்தர் சிங், ஆகில் இல்யாஸ், சீசன் மக்சூத் (தலைவர்), மொஹமட் நதீம், அயான் கான், சொஹைப் கான், நஷீம் குஷி, ஜேய் ஓடேட்ரா, பய்யாஸ் பட், பிலால் கான்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<