எதிர்கால கிரிக்கெட் தொடர்கள் நிகழ்ச்சித்திட்டத்தை வெளியிட்டுள்ள ஐ.சி.சி

696

சர்வதேச கிரிக்கெட் வாரியமானது (ஐ.சி.சி.) 2018 தொடக்கம் 2023 வரையிலான காலப்பகுதியில் அதன் அங்கத்தவர்களாக இருக்கும் ஆடவர் கிரிக்கெட் அணிகள் விளையாடவுள்ள கிரிக்கெட் போட்டிகளை உள்ளடக்கிய எதிர்கால கிரிக்கெட் தொடர்கள் நிகழ்ச்சித் திட்டத்தினை (FTP) வெளியிட்டுள்ளது.

.சி.சி. வெளியிட்டிருக்கும் இந்த எதிர்கால கிரிக்கெட் தொடர் நிகழ்ச்சித் திட்டத்தின்படி, அதன் உறுப்புரிமையில் இருக்கும் நாடுகள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் விளையாடப்போகும் கிரிக்கெட் தொடர்கள் பற்றிய முழுமையான தெளிவு கிடைத்திருக்கின்றது.

MCC அணியின் தலைவராக மஹேல ஜயவர்தன

கிரிக்கெட்டின் தாயகம்…

இந்த தொடர் நிகழ்ச்சித் திட்டத்தில் இருதரப்பு தொடர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் புதிதாக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரும், 13 அணிகளை உள்ளடக்கிய ஒரு நாள் லீக் தொடரும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த ஒரு நாள் லீக் தொடர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான அணிகளை தெரிவு செய்ய ஒரு சந்தர்ப்பத்தினை உருவாக்கி கொடுக்கவுள்ளது.

டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் முதல் ஒன்பது இடங்களுக்குள் காணப்படும் அணிகள் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க முடியும். இந்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் போட்டிகள் யாவும் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் திகதி தொடக்கம், 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்கும் அணிகள் இரண்டு வருட காலப்பகுதிக்குள் ஆறு இருதரப்பு டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டும். இந்த இருதரப்பு டெஸ்ட் தொடர்களில் விளையாடும் அணியொன்று தமது எதிரணியினை பொதுவான விருப்பின் அடிப்படையில் தெரிவு செய்ய முடியும். இந்த டெஸ்ட் தொடர்களின் முடிவுகளுக்கு கொடுக்கப்படும் புள்ளிகளின்படி, புள்ளிகள் அட்டவணையில் முதலிடத்தினை பெறும் இரண்டு அணிகள் 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடாத்தும்.

2020 ஆம் ஆண்டின் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து 2022 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள ஒரு நாள் லீக் தொடர், டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 12 நாடுகளும் நெதர்லாந்து அணியும் மேலதிகமாக இணைக்கப்பட்டு விளையாடப்படவிருக்கின்றது. இதில் பங்கேற்கவுள்ள அணிகள் பொதுவான விருப்பின் அடிப்படையில் தமது எதிரணியினை தீர்மானித்து எட்டு இருதரப்பு தொடர்களில் விளையாட வேண்டும்.

இலங்கை அணியினர் .சி.சி. இன் புதிய கிரிக்கெட் தொடர்களுக்கான எதிர்கால நிகழ்ச்சித் திட்டத்தில், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் தமது முதல் மோதலினை நியூசிலாந்து அணியுடன் சொந்த மண்ணில் இடம்பெறும் இருதரப்பு டெஸ்ட் தொடருடன் ஆரம்பிக்கின்றனர். இந்த இருதரப்பு டெஸ்ட் தொடர்   2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்குகின்றது. இதேவேளை, 2020 ஆம் ஆண்டின் ஜூனில் தென்னாபிரிக்க அணியுடன் சொந்த மண்ணில் இடம்பெறவுள்ள இருதரப்பு ஒரு நாள் தொடருடன் இலங்கை அணி ஒரு நாள் லீக் போட்டிகளை ஆரம்பிக்கின்றது.  

இந்த ஒரு நாள் லீக்கின் மூலம் 2023 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்திற்கு நேரடித் தகுதி பெறும் எட்டு அணிகள் தெரிவு செய்யப்படவிருக்கின்றன. அதாவது இந்த ஒரு நாள் லீக்கில் நடைபெறும் போட்டிகளின் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதியில் இந்தியாவோடு (இந்தியாவிலேயே உலகக் கிண்ணம் நடைபெறவுள்ளதால்) சேர்த்து .சி.சி. இன் ஒரு நாள் தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் இருக்கும் அணிகள் 2023ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்திற்கான நேரடியான தகுதியினைப் பெறும். ஒரு நாள் தரவரிசையில் பின்தங்கும் ஏனைய அணிகளுக்கு உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் மூலம் 2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தில் விளையாட முடியும்.

.சி.சி. இன் பிரதான நிறைவேற்று அதிகாரியான டேவிட் ரிச்சட்சன் இந்த எதிர்கால கிரிக்கெட் தொடர் நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்கும் நாடுகளுக்கு எதிர்கால கிரிக்கெட் போட்டிகளை ஏற்பாடு செய்வதற்காக தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றார்.  

எதிர்கால கிரிக்கெட் தொடர் நிகழ்ச்சிகளுக்கான  ஒப்பந்தம் மூலம், நாம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருதரப்பு தொடர்கள் அதிகம் கொண்ட கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்படபோவதினை உறுதி செய்கின்றோம். அடுத்த ஆண்டில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் ஆரம்பமாகவுள்ளதோடு, உலகக் கிண்ணத்துக்கான அணிகளை தெரிவு செய்யும் அங்கங்களில் ஒன்றான ஒரு நாள் லீக் தொடர் 2020 ஆம் ஆண்டில் நடைபெறுகின்றது. “

அதோடு, இந்த தொடர்கள் மூலம் உலகெங்கிலும் இருக்கும் கிரிக்கெட் இரசிகர்களுக்கு சீரான இடைவெளிகளில சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றிணைவதற்கான வாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளதாக ரிச்சட்சன் மேலும் குறிப்பிட்டிருந்தார்.  

இரட்டைச்சதம் விளாசிய யாழ் மத்தியின் 15 வயதுடைய சன்சயன்

.சி.சி. இன் இந்த புதிய கிரிக்கெட் தொடர்கள் பற்றி பேசிய இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா, அனைத்து வகைப் போட்டிகளும் அடங்கும் விதத்தில்,  .சி.சி ஆனது நல்ல முறையிலேயே அதன் அங்கத்துவர்களுக்கு போட்டிகளை பிரித்து வழங்கியிருப்பதாக கூறியிருந்தார்.

எதிர்கால கிரிக்கெட் தொடர் நிகழ்ச்சித் திட்டத்தில் மேலதிகமான T20 உலக சம்பியன்ஷிப் தொடர் ஒன்று, சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளுக்கு பதிலாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.  

.சி.சி. ஆனது அதன் உறுப்புரிமையினைப் பெற்றிருக்கும் 104 நாடுகளுக்கும் அண்மையில் T20 சர்வதேச போட்டிகளுக்கான அந்தஸ்தினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆடவர் கிரிக்கெட் அணிகளுக்கான எதிர்கால கிரிக்கெட் போட்டிகள் நிகழ்ச்சித் திட்டம்  

  1. .சி.சி. உலகக் கிண்ணம் – 2019 & 2023
  2. .சி.சி. T20 உலக சம்பியன்ஷிப் தொடர் – 2020 & 2021
  3. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர்
  • முதல் பருவகாலம் – 2019 – 2021 (இறுதிப் போட்டி 2021)
  • இரண்டாவது பருவகாலம் – 2021 – 2023 (இறுதிப் போட்டி 2023)
  1. இவை தவிர்ந்த ஏனைய இருதரப்பு டெஸ்ட், ஒரு நாள், T20 போட்டித் தொடர்கள்  

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க