இரு அறிமுக வீரர்களுடன் முத்தரப்பு தொடருக்காக பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ள முத்தரப்பு டி20 சர்வதேச தொடரில் பங்கேற்பதற்கான பங்களாதேஷ் அணியின் முதலிரண்டு போட்டிகளுக்குமான 13 பேர் கொண்ட குழாம் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையினால் நேற்று (09) வெளியிடப்பட்டது.

பங்களாதேஷ் அணியுடன் வரலாற்று டெஸ்ட் வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இடைக்கால தடைக்கு உள்ளான ஜிம்பாப்வே ஆகிய அணிகள்  குறித்த முத்தரப்பு டி20 சர்வதேச தொடரில் விளையாடவுள்ளன

முக்கோண டி20 தொடருக்காக பங்களாதேஷ் செல்லும் ஜிம்பாப்வே

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு ………..

வெளியிடப்பட்டுள்ள குழாமின் அடிப்படையில் பங்களாதேஷ் அணியில் இறுதியாக விளையாடிய அணியிலிருந்து ஆறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி சகலதுறை வீரரான மெஹ்தி ஹஸன் மிராஸ், அபூ ஹைதர், ஆரிபுல் ஹக், மொஹமட் மிதுன், நஸ்முல் இஸ்லாம் மற்றும் ரூபல் ஹொஸைன் ஆகியோர் இவ்வாறு குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.  

இதேவேளை, அண்மையில் நடைபெற்ற இலங்கை அணியுடனான தொடரின்போது முதல் முறையாக அணித்தலைவராக செயற்பட்டு தொடரின் பின்னர் வேண்டுகோளின் அடிப்படையில் விடுமுறையில் சென்ற தமீம் இக்பால் தொடர்ந்தும் விடுமுறையில் உள்ளதன் அடிப்படையில் முத்தரப்பு டி20 சர்வதேச தொடருக்கான குழாமில் இடம்பெறவில்லை.

வெளியிடப்பட்டுள்ள குழாமில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையானது டி20 சர்வதேச போட்டிகளுக்கு அறிமுகமாகும் அடிப்படையில் இரண்டு வீரர்களுக்கு அறிமுகம் வழங்கியுள்ளது. 20 வயதுடைய இளம் வேகப் பந்துவீச்சாளரான யாஸின் அறபாத் முதல் முறையாக சர்வதேச குழாமிற்கு அழைக்கப்பட்டுள்ளார். இவர் அண்மையில் நிறைவுக்குவந்த இலங்கை வளர்ந்துவரும் அணிடனான தொடரில் பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணிக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது

பங்களாதேஷ் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அண்மைக்காலமாக பிரகாசித்துவரும் இடது கை சுழற் பந்துவீச்சாளர் தைஜூல் இஸ்லாம் 2014ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் அறிமுகம் பெற்றதன் பின்னர், 5 வருடங்கள் கழிந்து தற்போது மற்றுமொரு அறிமுக வீரராக டி20 குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளார்

மேற்கிந்திய தீவுகள் ஒருநாள், டி20 அணித்தலைவராக கிரோன் பொல்லார்ட்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் ஒருநாள் ……..

கடந்த வருடம் (2018) இலங்கை அணி பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் டி20 சர்வதேச அறிமுகம் பெற்ற துடுப்பாட்ட வீரர் மெஹதி ஹசன் தற்போது இரண்டாவது முறையாக ஒரு வருடத்தின் பின்னர் டி20 சர்வதேச குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளார். மேலும், அதே தொடரில் டி20 சர்வதேச அறிமுகம் பெற்ற 19 வயதுடைய சகலதுறை வீரர் அபிப் ஹொஸைன் மீண்டும் டி20 சர்வதேச குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளார். இவர் இலங்கை வளர்ந்துவரும் அணியுடன் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது

இறுதியாக, ஆப்கானிஸ்தான் அணியுடன் டெஸ்டில் விளையாடிய துடுப்பாட்ட சகலதுறை வீரர் மொசாதிக் ஹொஸைன் ஒன்றரை வருடத்தின் பின்னர் டி20 குழாமில் இடம்பெற்றுள்ளார். அத்துடன் 41 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அனுபவ வீரரான சபீர் ரஹ்மானும் ஒன்றரை வருடத்தின் பின்னர் டி20 குழாமில் இடம்பெற்றுள்ளார். மேலும், ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருந்த முஸ்தபீசூர் ரஹ்மான் மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் டி20 அணியின் தலைவராக தொடர்ந்து செயற்படும் வகையில் அனுபவ சகலதுறை வீரர் சகீப் அல் ஹசன் பெயரிடப்பட்டுள்ளார். குறித்த முத்தரப்பு டி20 சர்வதேச தொடரானது வரும் வெள்ளிக்கிழமை (13) ஆரம்பமாகவுள்ளது. முதல் போட்டியில் பங்களாதேஷ்ஜிம்பாப்வே அணிகள் மோதவுள்ளன.  

13 பேர் கொண்ட பங்களாதேஷ் குழாம்   

சகீப் அல் ஹசன் (அணித் தலைவர்), லிட்டன் தாஸ், சௌமியா சர்கார், முஸ்பிகுர் றஹீம், மஹ்மதுல்லாஹ் ரியாத், அபிப் ஹொஸைன், மொசாதிக் ஹொஸைன், சபீர் ரஹ்மான், தைஜூல் இஸ்லாம், மெஹதி ஹசன், மொஹமட் சைபுதீன், முஸ்தபீசூர் ரஹ்மான், யாஸின் அறபாத் 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<