பிறந்த நாட்டுக்கு எதிராக கோல் பெற்று சுவிஸை வெல்லச் செய்தார் எம்போலோ

FIFA World cup 2022

66

ப்ரீல் எம்போலோ தான் பிறந்த கெமரூன் நாட்டுக்கு எதிராக கோல் புகுத்தி உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் சுவிட்சர்லாந்தை வெற்றிபெறச் செய்தார்.

கட்டாரின் அல் ஜனூப் அரங்கில் G குழுவுக்காக வியாழக்கிழமை (24) நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் கோல்கள் பெற கடுமையாக போராடின. முதல் பாதியில் கோல் பெறப்படாத நிலையில் இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே எம்போலோ செயற்பட ஆரம்பித்தார்.

ஜெர்மனுக்கு ஜப்பானின் அதிர்ச்சி; கொஸ்டாரிகாவை துவம்சம் செய்த ஸ்பெயின்

48 ஆவது நிமிடத்தில் ஷெர்டான் ஷகிரி பரிமாற்றிய பந்தை பெற்ற எம்போலோ அதனை அதிரடியாக வலைக்குள் செலுத்தினார். எனினும் கோல் பெற்ற பின் அவர் தனது தாய்நாட்டுக்கு எதிரான அந்த கோலுக்காக கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை.

ஆறு வயதில் கெமரூனில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு குடும்பத்துடன் குடியெர்ந்த எம்போலோவுக்கு 2014 ஆம் ஆண்டு அந்நாட்டு பிரஜா உரிமை கிடைத்தது.

பிரேசில் இருக்கும் G குழுவில் 1-0 என சுவிட்சர்லாந்து பெற்ற வெற்றி ஆரம்ப சுற்றில் தீர்க்கமானதாக உள்ளது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<