பிரேசிலின் அடுத்த இரு போட்டிகளிலும் நெய்மார் இல்லை

373

வலது கணுக்காலில் தசைநார் காயத்திற்கு உள்ளான பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார் பிரேசில் அணியின் அடுத்த இரு உலகக் கிண்ணப் போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை (24) நடந்த செர்பியாவுக்கு எதிரான போட்டியின் 80 ஆவது நிமிடத்தில் வைத்து நெய்மார் உபாதைக்கு உள்ளானார். செர்பிய வீரர் நிகொலா மிலன்கோவின் அதிக பலத்துடன் அவரை தடுக்க முயன்றபோதே காயம் ஏற்பட்டது.

பெதும் நிஸ்ஸங்கவின் திறமையை புகழும் நவீட் நவாஸ்!

மைதானத்தில் சிகிச்சை அளிக்கப்படும்போது நெய்மார் அதிக வேதனையை வெளிப்படுத்தியதோடு அவரது வலது கணுக்கால் வீங்கி இருந்தது. தனது கால்பந்து வாழ்வில் கடினமான தருணம் என்று அவர் இந்தக் காயம் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

‘எதுவும் எனது வாழ்வில் இலகுவாக வந்ததில்லை. எனது கனவு மற்றும் இலக்குக்காக நான் எப்போதும் கடுமையாகப் போராடுவேன்’ என்று நெய்மார் தனது இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார்.

பாரிஸ் ஜெர்மைன் முன்கள வீரரான நெய்மார் கடந்த சில ஆண்டுகளாக வலது காலில் காயங்களுக்கு உள்ளாகி வருகிறார். 2019இல் காயம் காரணமாக கோபா அமெரிக்கா தொடரில் ஆடாத அவர் 2021 ஆம் ஆண்டும் காயத்தால் பல வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டி ஏற்பட்டது.

கார்த்திக் மெய்யப்பனின் ஹீரோ வனிந்து, நெய்மரை அல்ல

செர்பியாவுடனான போட்டியின்போது நெய்மர் மீது ஒன்பது தடவைகள் இடையூறு இழைக்கப்பட்டிருந்ததோடு இம்முறை உலகக் கிண்ணத்தில் வேறு எந்த வீரரை விடவும் அதிகபட்சமாக நான்கு ப்ரீ கிக் வாய்ப்புகளை பெற்றார்.

பிரேசிலின் மற்றொரு வீரரான டனிலோவும் கணுக்கால் காயத்தால் அடுத்த இரண்டு போட்டிகளிலும் ஆடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கிண்ணத்தின் ஆரம்ப சுற்றில் G குழுவில் ஆடும் பிரேசில் அணி முதல் போட்டியில் செர்பியாவை 2–0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்த அணி எதிர்வரும் திங்கட்கிழமை (28) சுவிட்சர்லாந்தை எதிர்கொள்ளவுள்ளது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<