யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் (பரி யோவான் கல்லூரி) மற்றும் யாழ் மத்திய கல்லூரி அணிகளுக்கிடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தொடரான வடக்கின் பெரும் சமர் இம்மாதம் 9ஆம், 10ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பொன்று யாழ்.மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

இவ்வருடம் 111ஆவது முறையாகவும் இடம்பெறும் இந்தப் போட்டிக்கான அனுசரணையாளர்களான மொபிடல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் இரு கல்லூரிகளினதும் அதிபர்கள், உப அதிபர்கள், விளையாட்டுப் பொறுப்பாசிரியர்கள், மொபிடல் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள், வீரர்கள், மாணவ முதல்வர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஊடகவியலாளர் சந்திப்பின் புகைப்படங்கள்

நிகழ்வின் ஆரம்பத்தில், இவ்வருடத்திற்கான போட்டி ஒழுங்கமைப்பாளர்களான சென். ஜோன்ஸ் கல்லூரியின் அதிபர் ஞானப்பொன்ராஜா கருத்துத் தெரிவிக்கையில் போட்டிக்கான அனுசரணையாளர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதோடு, ஊடகங்களும் தமது பங்களிப்பினை வடக்கின் பெரும் சமரிற்கு மட்டுமன்றி, ஏனைய அனைத்து விடயங்களுக்கும் வழங்க வேண்டும். அதேவேளை, வடக்கிலிருந்து பிரபலமான கிரிக்கட் வீரர்களை உருவாக்க வேண்டும்.” என்றார்.

அங்கு கருத்துத் தெரிவித்த யாழ் மத்திய கல்லூரி அதிபர் எழில்வேந்தன்,இரு நூற்றாண்டு வரலாறு மிக்க யாழ். மத்திய கல்லூரி, சென் ஜோன்ஸ் கல்லூரியுடனான 111ஆவது வடக்கின் பெரும் சமரில் இம்முறை மோவுள்ளது. இரு அணிகளுக்கும் போட்டியில் சிறப்பாக விளையாட தனது வாழ்த்துக்கள்எனத்  தெரிவித்தார்.

நேற்றைய நிகழ்வின்போது, குறித்த போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த களத்தடுப்பாளர், போட்டியின் ஆட்ட நாயகன், சிறந்த விக்கெட் காப்பாளர் ஆகியோருக்கான விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் போட்டி இம்மாதம் 18ஆம் திகதி (சனிக்கிழமை) நடைபெறுமெனவும்  அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மொபிடல் நிறுவனத்தின் முகாமையாளர்,இத்தகைய தொடரின் பங்காளராக தாம் இணைந்திருப்பதையிட்டு மகிழ்ச்சி கொள்கின்றோம். தொடர்ந்தும் மொபிடல் விளையாட்டிற்காகப் பங்களிப்பு வழங்கும்” எனத் தெரிவித்தார்.

சென். ஜோன்ஸ் கல்லூரியின் அணித் தலைவர் ஜெனி பிளெமின் கருத்துத் தெரிவிக்கையில்எந்தவொரு போட்டியிலும் எம் தவறுகளே போட்டியின் இறுதி முடிவைத் தீர்மானிக்கும். அந்த வகையில் இப்போட்டியில் தவறுகளைக் குறைத்து போட்டியை வெல்வதே எமது நோக்கம். இம்முறை கிண்ணத்தை கைப்பற்றுவதே தமது இலக்குஎன நம்பிக்கையுடன் தனது நிலையைப் பதிவு செய்தார்.

யாழ். மத்திய கல்லூரியின் அணித் தலைவர் பிரியலக்சன் தெரிவிக்கையில்வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தொடர் என்றும் தொடர வேண்டும். நாம் தொடர்ச்சியாக வெற்றிகளையே பெற்றுக்கொண்டிருக்கின்றோம். இந்நிலையைத் தொடர்வதே எம் நோக்கம்என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இறுதியாக இரு கல்லூரிகளினதும் அதிபர்கள், பயிற்றுவிப்பாளர்கள், வீரர்கள் ஆகியோர் தமது எதிரணி தரப்பினருக்கு தமது கைகளால் தொப்பிகளை அணிவித்தனர். இது நேற்றைய நிகழ்வின் சுவாரஷ்யமான அம்சமாக அமைந்திருந்தது.  

இந்த போட்டியை இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையதளமான ThePapare.com நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.