வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் மாதம் 16

339
OTD-Aug-16

1974ஆம் ஆண்டுசிவனாரேன் சந்தர்போல் பிறப்பு

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரான சிவனாரேன் சந்தர்போலின்  பிறந்த தினமாகும்.

பிறப்பு : 1974ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி

பிறந்த இடம் : யூனிட்டி கிராமம், கிழக்கு கடற்கரை, டெமராரா, கயானா

வயது : 42

விளையாடிய காலப்பகுதி : 1994ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை

துடுப்பாட்ட பாணி : இடதுகை துடுப்பாட்டம்

விளையாடிய ஒருநாள் போட்டிகள் : 268

மொத்த  ஒருநாள் ஓட்டங்கள் : 8778 (100/50 – 11/59)

அதிக பட்ச ஒருநாள் ஓட்டம்  :  150

ஒருநாள் துடுப்பாட்ட சராசரி : 41.60

விளையாடிய டெஸ்ட்  போட்டிகள் : 164

மொத்த  டெஸ்ட்  ஓட்டங்கள் : 11867 (100/50 – 30/66)   

அதிக பட்ச டெஸ்ட்  ஓட்டம் :  203*

டெஸ்ட்  துடுப்பாட்ட சராசரி : 51.37

விளையாடிய டி20  போட்டிகள் : 22

மொத்த  டி20  ஓட்டங்கள் : 343

அதிக பட்ச டி20 ஓட்டம் :  41

டி20 துடுப்பாட்ட சராசரி :     20.17  


1983ஆம் ஆண்டுநரசிங் டெனொரென் பிறப்பு

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியின் முன்னாள்  துடுப்பாட்ட வீரரான  நரசிங் டெனொரெனின்  பிறந்த தினமாகும்.

பிறப்பு : 1983ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி

பிறந்த இடம் : ஆல்பியன், கயானா

வயது : 33

விளையாடிய காலப்பகுதி : 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை

துடுப்பாட்ட பாணி : இடதுகை துடுப்பாட்டம்

விளையாடிய ஒருநாள் போட்டிகள் : 31

மொத்த  ஒருநாள் ஓட்டங்கள் : 682 (100/50 – 0/4)

அதிக பட்ச ஒருநாள் ஓட்டம்  : 65*

ஒருநாள் துடுப்பாட்ட சராசரி : 26.23

விளையாடிய டெஸ்ட்  போட்டிகள் : 18

மொத்த  டெஸ்ட்  ஓட்டங்கள் : 725 (100/50 – 0/5)

அதிக பட்ச டெஸ்ட்  ஓட்டம் :  82

டெஸ்ட்  துடுப்பாட்ட சராசரி : 25.89

விளையாடிய டி20 போட்டிகள் : 8

மொத்த டி20 ஓட்டங்கள் : 55

அதிக பட்ச டி20 ஓட்டம் :  36*

டி20 துடுப்பாட்ட சராசரி :     11.00


2009ஆம் ஆண்டுசார்ல்ஸ் கொவென்ட்ரி

2009ஆம் ஆண்டு சிம்பாப்வேயில் புலவாயோ நகரில் அமைந்துள்ள குயின்ஸ் பார்க் மைதானத்தில் ஒருநாள் போட்டி ஒன்றில் சிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் ஆடிய சிம்பாப்வே அணி நிர்ணயம் செய்யப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 312 ஓட்டங்களைப் பெற்றது. இதில் சிம்பாப்வே அணி வீரர் சார்ல்ஸ் கொவென்ட்ரி 156 பந்துகளை முகம் கொடுத்து 16 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கலாக 194 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காமல் இருந்தார். இவர் 194 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் அந்த காலப்பகுதியில் (2009ஆம் ஆண்டு)  ஒருநாள் போட்டிகளில் தனி ஒருவரால் பெறப்பட்ட அதிக ஓட்டங்களை சமன் செய்து இருந்தார். அவருக்கு முன்பதாக பாகிஸ்தான் அணியின் சயீத் அன்வர் 194 ஓட்டங்களைப் பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஆகஸ்ட் மாதம் 15

ஆகஸ்ட்  மாதம் 16ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1934 சாம் டிரிம்பிள் (அவுஸ்திரேலியா)
  • 1944 முபஸ்ஸிர் உல்-ஹக் (பாகிஸ்தான்)
  • 1952 மகேஷ் குணதிலக்க (இலங்கை)
  • 1957 ரந்தீர் சிங் (இந்தியா)
  • 1964 ஹோவர்ட் ஜான்சன் (அமெரிக்கா)
  • 1965 ஜோ ஹாரிஸ் (கனடா)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்