ஆசிய ரக்பி செவென்சுக்கு பின்னர், இலங்கையில் இடம்பெறும் குதூகலம் அளிக்கும் வகையிலான மற்றொரு ரக்பி தொடரான 2016/17 பருவகாலத்துக்கான டயலொக் கழக ரக்பி லீக் போட்டிகள் இவ்வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Visit the Dialog Rugby League Hub

2016/17 பருவகாலத்துக்கான இத்தொடரின் முதல் போட்டியாக பொலிஸ் விளையாட்டுக் கழகத்துக்கும், இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகத்துக்கும் இடையிலான போட்டி கொழும்பு பொலிஸ் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.                                 

இந்த லீக் போட்டிகள் அனைத்தும் தொடர்ச்சியாக 14  வாரங்களுக்கு கோலாகலமாக நடைபெறும். முதல் வாரமான இந்த வாரம் நான்கு போட்டிகள் நடைபெறும். அதேவேளை, எதிர்வரும் வருடத்தில் ஆரம்பமாக உள்ள டயலொக் கிளிஃபர்ட் கிண்ண போட்டிகள் வரை இந்தப் போட்டிகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் போட்டி – பொலிஸ் ரக்பி கழகம் எதிர் கடற்படை ரக்பி கழகம்

  • தினம் : 2016 நவம்பர் 4ஆம் திகதி
  • நேரம் : 4.00 மணி
  • இடம் : கொழும்பு பொலிஸ் பார்க் மைதானம்

கடந்த பருவகால போட்டிகளில் நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களுக்கு போட்டியிட்டுக்கொண்ட பொலிஸ் ரக்பி கழகம் மற்றும் இலங்கை கடற்படை ரக்பி கழகம் என்பன எதிர்வரும் வெள்ளிக்கிழமை எதிர் கொள்கிறது. இது தொடரின் முதல் போட்டியாக அமையும்.

இறுதியாக இவ்விரு அணிகளும் கடந்த முறை இரண்டாவது சுற்றின் லீக் போட்டிகளில் மோதிக்கொண்டன. அதில் மது சொந்த மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் பொலிஸ் ரக்பி அணி 16-11 என்ற கணக்கில் வெற்றியை தனதாக்கிக் கொண்டது. அதே சமயத்தில் முதல் சுற்றுப்போட்டியில் கடற்படை ரக்பி அணியினர் 27-24 என்ற கணக்கில் தமது சொந்த மைதானத்தில் வெற்றி கொண்டனர்.

இம்முறை பொலிஸ் ரக்பி அணியை பலப்படுத்தும் முகமாக அனுபவம் வாய்ந்த முஷின் பலீல், அப்சல் முஹம்மத் மற்றும் அசேல ஆகிய வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.  

கடற்படை அணியில் பெரிதாக மாற்றங்கள் செய்யப்படவில்லை. ஆனால், திலின வீரசிங்க, லீ கீகல் மற்றும் ஷானக சந்திமல் ஆகியோர் வழமையான ஸ்தானத்தில் இருப்பதோடு, ஆரம்ப போட்டியில் வெற்றி பெற அவர்கள் பங்களிப்பு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொலிஸ் ரக்பி கழகம் எதிர் கடற்படை ரக்பி கழகம் – நேரடி ஒளிபரப்பு

Watch LIVE : Police SC vs Navy SC|DRL 2016/17


இரண்டாம் போட்டி கண்டி விளையாட்டுக் கழகம் எதிர் CH & FC  

  • தினம் : 2016 நவம்பர் 5ஆம் திகதி
  • நேரம் : 4.00 மணி
  • இடம் : நிட்டவெல

CH & FC தனது முதல் போட்டிக்காக கண்டிக்கு சென்று, நடப்புச் சம்பியன் கண்டி விளையாட்டுக் கழகத்தை அவர்களது சொந்த மைதானத்தில் சந்திக்கிறது. லீக் ம்பியன் பட்டத்தினை மூன்று முறை வென்ற கண்டி விளையாட்டுக் கழகத்தினை ரோஷன் வீரரத்ன வழி நடத்துகிறார். அதேவேளை, அவர்கள் மீண்டும் வெற்றிக் கனியை பறிக்க காத்திருக்கிறார்.

மேலும், தனது அணியினுள் இருக்கும் புதிய வீரர்களை பரீட்சித்து பார்க்கும் அதேவேளை, இதன்மூலம் எதிர்வரும் போட்டிகளுக்கு அவர்களை தயார் படுத்துவதற்கும் அவ்வணி எதிர்பார்த்துள்ளது.

கடந்த முறை முதல் சுற்றில் CH&FC அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக 80 – 3 என்ற புள்ளிகள் கணக்கிலும், இரண்டாம் சுற்றில் 78-13 என்ற கணக்கிலும் கண்டி கழகம் வெற்றியீட்டியது.


முன்றாம் போட்டி – விமானப்படை கழகம் எதிர் ஹவ்லொக் கழகம் 

  • தினம் : 2016 நவம்பர் 5ஆம் திகதி
  • நேரம் : 4.00 மணி
  • இடம் : ரத்மலானை

கடந்த பருவகால போட்டிகளில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட ஹவ்லொக் கழக அணி, 7ஆம் இடத்தை பெற்றுக்கொண்ட விமானப்படை கழக அணியுடன் மோதுகிறது. குறிப்பிட்ட அளவு வெற்றிகளை விமானப்படை அணி கொண்டிருக்காவிட்டாலும் CH & FC அணிக்கு எதிரான போட்டிகளில் இரண்டு வெற்றிகளைப் பதிவு செய்து கொண்டது.

எனினும், தன்னுடைய முழு பலத்துடன் மோதும் ஹவ்லொக் அணி இம்முறை சம்பியன் பட்டதை கைப்பற்றும் நோக்கில், பலம் வாய்ந்த அணிகளான கண்டி மற்றும் CR & FC அணிகளை வெற்றி கொள்ள எதிர்பார்த்துள்ளது.

இவ்வணி கடந்த பருவகால போட்டிகளில் விமானப்படை அணியை இரண்டு சுற்றுக்களிலும் முறையை 36-08 மற்றும் 38-05 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டியது. அதே சமயம் விமானப்படை அணியின் சிறந்த வீரர்களான சரித் செனவிரத்ன மற்றும் நுவான் பெரேரா ஆகியோர், தமது அணி தோல்வியை தவிர்த்து வெற்றிகொள்ள போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 Watch LIVE : Air Force SC vs Havelock SC|DRL 2016/17


நான்காவது போட்டி: CR & FC எதிர் இராணுவப்படை

  • தினம் : 2016 நவம்பர் 6ஆம் திகதி
  • நேரம் : 4.00 மணி
  • இடம் : கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானம்

CR & FC அணி முதல் சுற்றுப் போட்டியில் புதிதாக எழுச்சி பெற்ற ராணுவப்படை அணியை சந்திக்கிறது. கடந்த முறை  அனேக இடர்களுக்கு மத்தியில் முதல் சுற்றில் பல வெற்றிகளை பெற்றிருந்த போதிலும், அவ்வணியால் தொடர்ந்து வெற்றிகளை தக்க வைக்க முடியவில்லை.

கடந்த பருவகால போட்டிகளில் முன்றாவது இடத்தை பெற்றுக்கொண்ட CR & FC தியகமவில் முதல் சுற்றுப்போட்டியில் 35-15 என்ற புள்ளிகள் கணக்கிலும் இரண்டாம் சுற்றில் 19-13 என்ற புள்ளிகள் கணக்கிலும் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

ஓமல்கா குணரத்ன மற்றும் குஷன் இந்துநில் போன்ற வீரர்களால் CR & FC புத்துணர்வை பெற்றிருக்கும்  அதேவேளை, காஞ்சன ராமநாயக்க மற்றும் ஜேசன் திசாநாயக்க ஆகிய வீரர்களை ராணுவப்படை அணி இழந்திருந்தாலும் புதிய வீரர்கள் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளது.

போட்டியின் நேரடி ஒளிபரப்பை பார்வையிட

Watch LIVE : Army SC vs CR & FC|DRL 2016/17

இத்தொடரின் போட்டிகளை நேரடியாகப் பார்வையிடுவதற்கும், போட்டி தொடர்பான உடனடித் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும், போட்டியின் புகைப்படங்களைப் பெற்றுக்கொள்வதற்கு ThePapare.com உடன் இணைந்திருங்கள்.