ஆசியக் கிண்ணம், ஆப்கான் தொடருக்கான பாகிஸ்தான் குழாம் வெளியீடு

313

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஆசியக் கிண்ணத் தொடர் என்பவற்றுக்கான பாகிஸ்தானின் 17 பேர் அடங்கிய கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இன்சமாம் உல் ஹக்குக்கு மீண்டும் தலைவர் பதவி

அறிவிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் குழாத்தில் சுமார் இரண்டு வருட இடைவெளிக்குப் பின்னர் வேகப் பந்து சகலதுறை வீரரான பஹீம் அஷ்ரப் உள்வாங்கப்பட்டிருக்கின்றார். இறுதியாக 2021ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியினை பிரதிநிதித்துவம் செய்த அஷ்ரப் அதன் பின்னர் உபாதைகள், மோசமான ஆட்டம் போன்றவற்றினால் பாகிஸ்தான் அணியில் இடம்பிடிக்கவில்லை.

எனினும் பஹீம் அஷ்ரப் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் PSL T20 தொடர் என்பவற்றில் சிறப்பாக விளையாடியமைக்காக அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைத் தேர்வாளர் இன்சமாம் உல் ஹக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த தய்யப் தாஹிருக்கு முதன் முறையாக பாகிஸ்தான் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. தய்யப் தாஹிர் இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் சதம் விளாசி தனது தரப்பு சம்பியன் பட்டம் வெல்வதற்கு பங்களிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் வேகப் பந்துவீச்சாளர் இஹ்சானுல்லா, மத்திய வரிசை வீரர் ஹரிஸ் சொஹைல் மற்றும் முன்வரிசை வீரர் ஷான் மசூத் ஆகியோர் பாகிஸ்தானின் ஒருநாள் குழாத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்க, மத்திய வரிசை வீரரான சௌத் சக்கீல் தொடர்ந்தும் குழாத்தில் இடம்பெற்றிருக்கின்றார்.

இங்கிலாந்து தொடருக்கான நியூசிலாந்து ஒருநாள் குழாம் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் இம்மாதம் 22ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேநேரம் ஒருநாள் ஆசியக் கிண்ணத் தொடர் இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

பாகிஸ்தான் குழாம்

பாபர் அசாம் (தலைவர்), மொஹமட் ரிஸ்வான், மொஹமட் ஹரிஸ், இமாம்உல்ஹக், பகார் சமான், இப்திக்கார் அஹ்மட், அப்துல்லா சபீக், சௌத் சகீல், தய்யப் தாஹிர், சல்மான் அலி, பஹீம் அஷ்ரப், சதாப் கான், மொஹமட் நவாஸ், நஷீம் சாஹ், சஹீன் அப்ரிடி, ஹரிஸ் ரவுப், உசாமா மிர், மொஹமட் வஷீம் ஜூனியர்

>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<