தற்பொழுது நடைபெற்று வரும் 2016/17ஆம் பருவகாலத்திற்கான FA கிண்ண கால்பந்து சுற்றுத் தொடரில் 32 அணிகள் பங்கு கொள்ளும் சுற்றான நான்காம் சுற்றுப் போட்டிகளில் இலங்கை ராணுவப்படை விளையாட்டுக் கழகம், சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் கிறிஸ்டல் பெலஸ் விளையாட்டுக் கழகம் என்பன வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியுள்ளன.

சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் அப் கன்ட்ரி லயன்ஸ்

களனிய கால்பந்து மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் அப் கன்ட்ரி லயன்ஸ் அணியை சுலபமாக வீழ்த்திய சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் 6-1 என அபார வெற்றியை பெற்றுக்கொண்டது.

கடந்த சுற்றில் இரத்தினபுரி நகர சபை அணியுடனான போட்டியில் கோல் மழை (9-0) பொழிந்த சௌண்டர்ஸ் அணி, இப்போட்டியில் சில வீரர்களுக்கு ஒய்வு வழங்கியிருந்த போதிலும் எதிரணியை இலகுவாக வீழ்த்தியது.

கடும் முயற்சியின் பின்னர் புளு ஸ்டார் வெற்றி : மீண்டும் நடுவரின் தீர்ப்புக்கள் தொடர்பில் அதிருப்தி

இந்த பருவகால FA கிண்ணத்திற்கான நான்காம் சுற்றுக்கான போட்டியொன்றில் லியோ விளையாட்டுக்..

போட்டியின் ஆரம்பம் முதலே சௌண்டர்ஸ் வீரர்கள் பந்தினை  தமது ஆதிக்கத்தில் வைத்திருந்ததுடன் எதிரணியின் பாதிக்குள் முகாமிட்டிருந்தனர். கிரிஷாந்த அபேசேகரவிற்கு சில கோல் வாய்ப்புக்கள் கிடைத்த போதிலும் அப் கன்ட்ரி லயன்ஸ் அணியின் கோல் காப்பாளர் மொஹமட் லுத்பி அவற்றை சிறப்பாக தடுத்தார்.

எனினும் போட்டியின் 18ஆவது நிமிடத்தில் சௌண்டர்ஸ் அணி கிரிஷாந்த அபேசேகர மூலமாக தமது முதல் கோலினை பெற்றுக் கொண்டது.

வெறும் மூன்று நிமிடங்களே கடந்த நிலையில் கிரிஷாந்த அபேசேகரவிடம் இருந்து பந்தினை பெற்றுக் கொண்ட சுந்தரராஜ் நிரேஷ் அணியின் இரண்டாவது கோலினை பெற்றுக் கொடுத்தார்.

போட்டியின் 43ஆவது நிமிடத்தில் தமக்கு கிடைத்த கோர்ணர் கிக் வாய்ப்பின் முழுப் பலனையும் பெற்றுக்கொண்ட சௌண்டர்ஸ் அணி, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ரோஹன ருவந்திலக்க ஊடாக மற்றுமொரு கோலினை பெற்று கோல் வித்தியாசத்தை மூன்றாக அதிகரித்தது.

முதல் பாதி: சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் 3 – 0 அப் கன்ட்ரி லயன்ஸ் விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதியில் 55ஆவது நிமிடத்தின்போது அப் கன்ட்ரி லயன்ஸ் அணியின் N. ராஜபக்ஷ எதிரணியின் கோல் காப்பாளரை கடந்து கோல் வாய்ப்பொன்றை உருவாக்கிக் கொண்ட போதிலும், அவரது இறுதி உதையின்போது பந்து கோல் கம்பத்தில் மோதி வெளியேறியது. எனினும் அவ்வணியின் தொடர் முயற்சிகள் காரணமாக சில நிமிடங்களில் H.D. சந்திரரத்ன கோல் ஒன்றினை வெற்றிகரமாக பெற்றுக்கொடுத்தார்.

அதன் பின்னர் போட்டியில் தமது முழு ஆதிக்கத்தையும் நிலை நாட்டிய சௌண்டர்ஸ் வீரர்கள் 67ஆவது நிமிடத்தில் நிரேஷ் ஊடாகவும், 76ஆவது நிமிடத்தில் அணித் தலைவர் ஷானக எரங்க மூலமாகவும் கோல்களை பெற்றுக் கொண்டனர்.

பலத்த போராட்டத்தின் பின் செரண்டிப் அணியை தோற்கடித்த சுபர் சன்

களுத்துறை வெர்னன் பெர்னாண்டோ மைதானத்தில் நடைபெற்ற FA கிண்ணத்தின் இறுதி 32 சுற்றில் மாவனல்லை செரண்டிப் விளையாட்டுக்…

அப் கன்ட்ரி லயன்ஸ் வீரர்கள் முற்றிலும் சோர்வடைந்த நிலையில் எதிரணியின் அபாரமான தாக்குதல் ஆட்டத்தை எதிர்கொள்ள இயலாமல் திணறினர். இறுதியாக மொஹமட் இஸ்மத் பெற்றுக் கொண்ட கோலுடன் போட்டி 6-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் நிறைவடைந்தது.

முழுநேரம்: சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் 6 – 1 அப் கன்ட்ரி லயன்ஸ் விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்

சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம்கிரிஷாந்த அபேசேகர 18′, சுந்தரராஜ் நிரேஷ் 21′ & 67′, ரோஹன ருவந்திலக்க 43′, சானுக எரங்க 74′, மொஹமட் இஸ்மத் 86′

அப் கன்ட்ரி லயன்ஸ் விளையாட்டுக் கழகம் – H.D. சந்திரரத்ன 56′

மஞ்சள் அட்டை

சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம்ரோஹன ருவந்திலக்க 69′


ராணுவப்படை விளையாட்டுக் கழகம் எதிர் ஈஸ்வரன் விளையாட்டுக் கழகம்

தொடரின் 32 அணிகளைக் கொண்ட சுற்றின் மற்றுமொரு போட்டியில் வவுனியா ஈஸ்வரன் விளையாட்டுக் கழகத்தை பந்தாடிய FA கிண்ணத்தின் நடப்புச் சம்பியன் இலங்கை ராணுவப்படை விளையாட்டுக் கழகம் 20-0 என்ற பாரிய கோல்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்து, தொடரின் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியுள்ளது.

முழுநேரம்: ராணுவப்படை விளையாட்டுக் கழகம் 20 – 00 ஈஸ்வரன் விளையாட்டுக் கழகம் 

கோல் பெற்றவர்கள்

ராணுவப்படை விளையாட்டுக் கழகம் – சஜித் குமார (8 கோல்கள்), மொஹமட் இஸ்ஸதீன் (5 கோல்கள்), பன்டார வரகாகொட, அசிகுர் ரஹ்மான், சுராஜ் பேர்னார்ட், சுஷிர அனுருந்த, மொஹமட் ரிம்சான், புன்சர திருன, ஒவ்ன் கோல்


கிறிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகம் எதிர் நிவ் யங்ஸ் கால்பந்து கழகம்

சம்பியன்ஸ் லீக்கில் மோதும் பிரபல அணிகளான கிறிஸ்டல் பெலஸ் மற்றும் நிவ் யங்ஸ் அணிகள் மோதிக்கொண்ட நான்காம் சுற்றிற்கான இப்போட்டி ஏற்கனவே 65 நிமிடங்கள் விளையாடப்பட்ட நிலையில் மழையின் குறுக்கீடு காரணமாக பிறிதொரு தினத்திற்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 65 நிமிடங்கள் நிறைவில் 1-1 என்ற கோல் அடிப்படையில் சமநிலையில் காணப்பட்ட இப்போட்டியின் எஞ்சிய 25 நிமிடங்களுக்கான ஆட்டம், ஏற்கனவே முதல் பகுதி இடம்பெற்ற நாவலபிடிய ஜயதிலக்க விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

ரெட் ஸ்டாரை வீழ்த்தி இறுதி 16 அணிகளுக்குள் நுழைந்த கல்முனை பிரில்லியண்ட்

கல்முனை சந்தாங்கேனி மைதானத்தில் நிறைவுற்ற FA கிண்ணத்திற்கான 32 அணிகள் மோதும் சுற்றுக்குரிய…

எவ்வாறாயினும் இறுதி 25 நிமிடங்களில் இரண்டு அணிகளினாலும் கோல் பெற்றுக் கொள்ள இயலாத காரணத்தினால் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. எனவே, வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக பெனால்டி உதை வழங்கப்பட்டது.

பெனால்டி உதைகளின் நிறைவில் 3-2 என வெற்றியை பெற்றுக்கொண்ட கிறிஸ்டல் பெலஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இதில், கிறிஸ்டெல் பெலசின் கோல் காப்பாளர் உபாதைக்கு உள்ளாகியமையினால் பெனால்டியின் இடை நடுவே, பின்கள வீரரும் அணியின் தலைவருமான ஷரித ரத்னாயக கோல் காப்பாளராக செயற்பட்டு மூன்று தடுப்புக்களை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முழுநேரம்: கிரிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகம் 1(4) – நிவ் யங்ஸ் கால்பந்து கழகம் 1(3)

கோல் பெற்றவர்கள்

நிவ் யங்ஸ் கால்பந்து கழகம்ஹசித பிரியன்கர 33’

கிறிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகம்ஷரித ரத்னாயக 45’

மஞ்சள் அட்டை

கிறிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகம் –  மொஹமட் சிபான் 54’