காலிறுதி மோதலுக்குள் நுழைந்த ராணுவப்படை மற்றும் ரினௌன் அணிகள்

601
FA Cup 2016/17

2016/17ஆம் ஆண்டுக்கான FA கிண்ண சுற்றுத் தொடரின் காலிறுதிக்கு முன்னைய சுற்றை வெற்றி கொண்டதன் மூலம் இலங்கையின் முன்னணி அணிகளாகத் திகழும் ராணுவப்படை விளையாட்டுக் கழகம் மற்றும் ரினௌன் விளையாட்டுக் கழகம் என்பன காலிறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியுள்ளன.

இறுதி நொடி வரையிலான போராட்டத்தில் யாழ் சென் மேரிசை வீழ்த்தியது சுபர் சன்

வெலிசரை கடற்படை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் மற்றும் ராணுவப்படை விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான விறுவிறுப்பான போட்டியில், ராணுவப்படை அணி 4-1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றியீட்டி காலிறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

பலமிக்க இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் முதல் பாதி நேரம் முழுதும் ராணுவப்படை அணி ஆதிக்கம் செலுத்தியிருந்தது. அந்த வகையில் போட்டியின் 9ஆவது நிமிடம் திவங்க சந்திரசேகர முதலாவது கோலினை ராணுவப்படை அணிக்காக பெற்று ஆட்டத்தை முன்னிலைப்படுத்தினார். அதேநேரம் கோல் அடிக்கும் இலகுவான இரண்டு வாய்ப்புகள் கடற்படை அணிக்கு கிடைக்கபெற்ற போதும் அவை தவறவிடப்பட்டன.

அத்துடன், இராணுவப்படை அணியின் பந்து நகர்த்தல்கள் மிகவும் சிறப்பாகக் காணப்பட்ட நிலையில், கடற்படை அணியின் நகர்த்தல்கள் மோசமான நிலையில் இருந்தது.

முதல் பாதி – கடற்படை விளையாட்டுக் கழகம் 0 – 1 ராணுவப்படை விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதி நேரத்தின் போது கோல் காப்பாளர் அஜித் குமார பந்தினை தவறவிட்டதனால் ரீ பவுண்ட் (Rebound) முறையில் கிடைத்த பந்தை இராணுவப்படை விளையாட்டு கழகத்தின் சஜித் குமார கோலாக மாற்றினார். அதனையடுத்து சில நிமிடங்களில் கடற்படை அணி சார்பாக நாலக ரொஷான் போட்டியின் 76ஆவது நிமிடம் கோல் அடித்து அணிக்கு புத்துணர்வு வழங்கினார்.

எனினும், போட்டியை சமநிலைப்படுத்த இலங்கை கடற்படை அணியால் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இறுதி நிமிடங்களில் சிறந்த பந்து நகர்த்தல்களை கொண்டிருந்த ராணுவப்படை அணிக்கு மேலும் இரண்டு கோல்கள் கிடைக்கப்பெற்றன.

அதில் ஒரு கோலாக சுபாஷ் மதுஷான் மூலம் பெறப்பட்ட ஓவ்ன் கோல் அமைந்தது. தொடர்ந்து, போட்டி நிறைவுற மூன்று நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில் நட்சத்திர வீரர் முஹமத் இஸ்ஸதீன் போட்டியின் 87ஆவது நிமிடம் இறுதி கோலைப் பெற்று ராணுவப்படை விளையாட்டு கழகத்தின் வெற்றியை உறுதி செய்தார்.

முழு நேரம் – கடற்படை விளையாட்டுக் கழகம் 1 – 4 ரராணுவப்படை விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரர் – முஹமத் இஸ்ஸதீன் (ராணுவப்படை விளையாட்டுக் கழகம்)

கோல் பெற்றவர்கள்

கடற்படை விளையாட்டுக் கழகம் – நாலக ரொஷான் 76’

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் – திவங்க சந்திரசேகர 9’, சஜித் குமார  68’, சுபாஷ் மதுஷான் (OG) 84’, முஹமத் இஸ்ஸதீன் 87’

பொலிஸ் அணிக்கு அதிர்ச்சி கொடுத்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள பாடும் மீன் 

ரினௌன் எதிர் பிரில்லியண்ட்

களனிய கால்பந்து மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் இரண்டாவது பாதியில் பிரபல ரினௌன் வீரர்கள் பெற்றுக்கொண்ட தொடர்ச்சியான கோல்களினால் கல்முனை பிரில்லியண்ட் அணியை 8-0 என்ற கோல்கள் கணக்கில் அபாரமாக வெற்றி கொண்டனர்.

போட்டியின் ஆரம்பம் முதலே ரினௌன் வீரர்கள் தம்மிடம் பந்தை வைத்திருந்தாலும், அவர்களுக்கு தமது முதல் கோலைப் பெறுவதற்கு போட்டியின் 17ஆவது நிமிடம் வரை இருக்க வேண்டியிருந்தது.

முதல் கோலை அணித் தலைவர் ரிப்னாஸ் பெற்றுக்கொடுத்தார். அதற்கு இரண்டு நிமிடங்கள் கடந்து மீண்டும் அவர் அடுத்த கோலையும் பெற்றுக் கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து முதல் பாதியின் இறுதி கோலாக தேசிய அணியின் முன்னாள் வீரர் பசால் 29ஆவது நிமிடத்தில் அடுத்த கோலைப் பெற்றார்.

முதல் பாதி: ரினௌன் விளையாட்டுக் கழகம் 3 – 0 பிரில்லியண்ட் விளையாட்டுக் கழகம்

இண்டாவது பாதியின் முதல் 20 நிமிடங்களும் கோல்கள் எதுவும் இன்றி போட்டி சென்றது. எனினும், இறுதி 25 நிமிடங்களுக்குள் ரினௌன் வீரர்களுக்கு அடுத்தடுத்து 5 கோல்கள் காத்திருந்தன.

மொஹமட் ஆசாத் 65ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் பெற்றுக் கொடுத்தார். பின்னர், பின்களத்தில் விளையாடும் வீரர்களான திமுது பிரியதர்ஷன 80ஆவது நிமிடத்திலும், ஹகீம் காமில் 83ஆவது நிமிடத்திலும் தலா ஒரு கோலைப் பெற்றுக் கொடுத்தனர்.

FA கிண்ணத்தின் தமது முதல் போட்டியில் வெற்றியை சுவைத்த ரினௌன்

தொடர்ந்து, முதல் பாதியில் கோல் பெற்றுக்கொடுத்த பசால் 89ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் பெற, அணித் தலைவர் ரிப்னாஸ் அதற்கு அடுத்த நிமிடத்தில் போட்டியின் இறுதி கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

முழு நேரம்: ரினௌன் விளையாட்டுக் கழகம் 8 – 0 பிரில்லியண்ட் விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரர் – முஹமட் ரிப்னாஸ் (ரினௌன் விளையாட்டுக் கழகம்)

கோல் பெற்றவர்கள்

ரினௌன் விளையாட்டுக் கழகம் – மொஹமட் ரிப்னாஸ் 17 ‘, 19’ & 90 ‘, மொஹமட் பசால் 29’ & 89 ‘, மொஹமட் ஆசாத் 65’, திமுது பிரியதர்ஷன 80 ‘, ஹகீம் காமில் 83