‘சகோதரர்களின் சமர்’ எனும் பெயர் மூலம் வர்ணிக்கப்படும் இசிபதன கல்லூரி மற்றும் தர்ஸ்டன் கல்லூரி அணிகளுக்கு இடையிலான 54ஆவது மாபெரும் வருடாந்த கிரிக்கெட் தொடர் ப்லாக்ஹெம் விஜயவர்தன நினைவுச் சின்ன கேடயத்திற்காக DFCC வங்கியின் அனுசரணையுடன் இன்று கோலாகலமாக ஆரம்பமாகியிருந்தது.  

றோயல் – தோமியர் கல்லூரிகளுக்கிடையிலான வருடாந்த சமர் தயார் நிலையில்

மார்ச் முழுவதும் இடம்பெறவுள்ள பெரும் சமர் கிரிக்கெட் தொடர்களின் ஆரம்ப கட்டமான இடம்பெற்ற இரண்டு நாட்கள் கொண்ட இப்போட்டி, முன்னதாக கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது. போட்டியின் நாணய சுழற்சியினை தனதாக்கிக் கொண்ட இசிபதன கல்லூரி அணியின் தலைவர் சஞ்சுல அபயவிக்ரம முதலில் தர்ஸ்டன் கல்லூரி அணியினரை துடுப்பாடுமாறு பணித்தார்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டியினை, தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் மூலம் ஆரம்பித்த தர்ஸ்டன் கல்லூரி அணி போட்டியின் முதல் ஓவரிலேயே தமது ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான யெஷான் விக்கிரமசிங்கவின் விக்கெட்டை ஓட்டம் எதுவுமின்றி நிரஞ்சன் வன்னியாராச்சியின் பந்து வீச்சில் பறிகொடுத்தது.

இதன் மூலம் சிறப்பான ஆரம்பத்தினை பெற்றுக்கொண்ட இசிபதன, தமது முன்னணி பந்து வீச்சாளர்களின் துணையுடன் போட்டியினை முன்னெடுத்தது.

இதன் காரணமாக, சீரான ஓட்ட இடைவெளிகளில் தமது விக்கெட்டுகளைப் பறிகொடுத்த தர்ஸ்டன் கல்லூரி அணியில், ஏனைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய அணித் தலைவர் கசுன் அபயரத்ன 6 பவுண்டரிகள் உள்ளடங்களாக 43 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டார்.

மறுமுனையில், மத்திய வரிசையில் இலங்கை கனிஷ்ட அணியின் வலது கை துடுப்பாட்ட  வீரர் சரண நாணயக்கார அரைச் சதம் விளாசி தர்ஸ்டனின் ஓட்ட எண்ணிக்கையினை 150ஐ தாண்ட வைத்தார். அவரின் விக்கெட்டினைத் தொடர்ந்து பின்வரிசையில் வந்த நவோத் சமரக்கோண்(34)  மற்றும் நிமேஷ் லக்ஷன்(34) ஆகியோர் இசிபதனவின் பந்து வீச்சிற்கு ஓரளவு சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.

போட்டியின் முதல் நாள் புகைப்படங்கள்

முடிவில் 56.1 ஓவர்களுக்கு தமது சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த தர்ஸ்டன் கல்லூரி, தமது முதல் இன்னிங்சுக்காக 228 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்டிருந்த, சரண நாயக்கார 9 பவுண்டரிகளுடன் 58 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

பந்து வீச்சில், லஹிரு தில்ஷான் மற்றும் நெரஞ்சன் வன்னியாராச்சி ஆகியோர் தமது திறமையினை வெளிக்காட்டி தலா மூன்று விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர். பின்வரிசையில் வீரர்களை வீழ்த்திய ஹெஷான் பெர்னாந்துவும் இரண்டு விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

பின்னர், தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த இசிபதான அணி, நேர்த்தியான ஆரம்பத்தினை தந்திருப்பினும் முதலாம் நாளின் ஆட்ட நேர நிறைவின் போது, துரித கதியில் தமது முதல் துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்டுகளையும் இழந்து 78 ஓட்டங்களினைப் பெற்றுள்ளது.  

இப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தை நேரடியாகப் பார்வையிட

இதில், ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கலான பெரேரா 20 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றிருந்தார். இன்று பறிபோன விக்கெட்டுகளில் ஆளுக்கு ஒவ்வொன்றாக சரண நாணயக்கார மற்றும் நவீன் குணவர்தன ஆகியோர் கைப்பற்றிக்கொண்டனர்.

களத்தில் பத்தும் நிசங்க(17), சஞ்சுல அபயவிக்ரம (4) ஆகியோர் ஆட்டமிழக்காமல் நிற்கின்றனர்.

போட்டியின் சுருக்கம்

தர்ஸ்டன் கல்லூரி: 228 (56.2) சரண நாயக்கார 58, கசுன் அபயரத்ன 43, நவோத் சமரக்கோன் 34, நிமேஷ் லக்ஷான் 34, நிப்புன் லக்ஷான் 26, நெரஞ்சன் வன்னியாராச்சி 3/66, லஹிரு தில்ஷான் 3/53, ஹெஷான் பெர்னாந்து 2/19

இசிபதன கல்லூரி: 78/3 (23) கலன பெரேரா 20, பத்தும் நிசங்க  17*, நவீன் குணவர்தன 13/1

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்  

WATCH REPLAY