வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான கால்பந்து லீக் தொடரின் மூன்றாம் வாரப் போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் பிரிவுA மற்றும் B ஆகியவற்றில் முறையே திறமையான ஆட்டத்தினை வெளிக்காண்பித்த எக்ஸ்ப்போ லங்கா மற்றும் ஹட்டன் நஷனல் வங்கி (HNB) அணிகள் முதலிடத்தினைப் பெற்றுள்ளன.

அவுஸ்திரேலிய முன்னணி தொடரில் இலங்கையின் வலைப்பந்து நட்சத்திரம் தர்ஜினி

இலங்கையின் வலைப்பந்தாட்ட நட்சத்திரம் சிவலிங்கம் தர்ஜினி, அவுஸ்திரேலியாவின்…

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான கால்பந்து தொடர் பல ஆண்டுகளாக நடைபெறாது முடங்கிக்கிடந்தது. இந்நிலையில், 2016 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் வர்த்தக நிறுவனங்களின் கால்பந்து சம்மேளனத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்றிருந்த சயீப் யூசுப்பினால் மீளவும் இதற்கு புத்துயிர் அளிக்கப்பட்டது.

1918ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்த பழமை வாய்ந்த இந்த கால்பந்து சம்மேளனம் 2018ஆம் ஆண்டில் நூறாவது ஆண்டு பூர்த்தியினையும் கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இத்தொடரில், பிரிவு A அணிகளுக்கு இடையிலான போட்டிகளின் ஒவ்வொரு பாதியும் 45 நிமிடங்களினை கொண்டிருந்ததோடு> ஏனைய பிரிவுகளுக்குரிய ஒவ்வொரு பாதிநேரமும் 30 நிமிடங்களினைக் கொண்டிருந்தது.

ஒவ்வொரு பிரிவிலும் சம்பியன் ஆக தெரிவு செய்யப்படும் அணி அடுத்த தொடறுக்கு முன்னேறும்.

பிரிவு A

எல்.பி பினான்ஸ் எதிர் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ்

நவீன் ஜுட் மற்றும் சப்ராஸ் கைஸ் ஆகியோர் பிற்பாதியில் காட்டிய அற்புதஆட்டத்தினால் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தினை 4-2 என  எல்.பி பினான்ஸ் வீழ்த்தியது.

பலத்த போராட்டத்திற்கு மத்தியில் போட்டியின் 42ஆவது நிமிடத்தில் கைஸின் உதவியுடன் எல்.பி பினான்ஸ் அணி முதல் கோலினைப் பெற்றுக்கொண்டது.

முதல் பாதி : எல்.பி பினான்ஸ் 1 – 0 ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ்

போட்டியின் இரண்டாம் பாதியின் பிந்திய இடைவெளியில் ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியது.  ஜுட் 70ஆவது நிமிடத்தில் கோலொன்றினைப் பெற்று எல்.பி பினான்ஸ் அணியினை இரண்டு கோல்களுடன் முன்னிலைப்படுத்தியிருந்தார்.

போட்டியின் இறுதிப் பத்து நிமிடங்கள் மிகவும் சுவாரசியமாக அமைந்திருந்தது.  கைஸ் 80ஆவது நிமிடத்தில் கோலொன்றினைப் பெற்றிருந்தார். இந்நிலையில் ஸ்ரீ லங்கா ஏர்லைன்ஸ் சார்பாக D.V.M. வீரசிங்க மற்றும் மொஹமட் றியாஸ் ஆகியோர் ஐந்து நிமிட இடைவெளியில் இரண்டு கோல்களைப் போட்டிருந்தனர்.

ரெட் ஸ்டாரை வீழ்த்தி இறுதி 16 அணிகளுக்குள் நுழைந்த கல்முனை பிரில்லியண்ட்

கல்முனை சந்தாங்கேனி மைதானத்தில் நிறைவுற்ற FA கிண்ணத்திற்கான 32 அணிகள்..

இந்த இரு கோல்களினாலும் ஆட்டம் 3-2 என்ற நிலையை அடைய போட்டியினை ஏர்லைன்ஸ் அணியினர் சமநிலை அடைய வைப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு அனைவர் உள்ளத்திலும் தோன்றத் தொடங்கியது.

எனினும், போட்டி நிறைவடைய சற்று முன்னர் ஜுட் கோலொன்றினைப் போட்டு போட்டியின் வெற்றியாளர்களாக எல்.பி பினான்ஸ் அணியினரை மாற்றினார்.

முழு நேரம் : எல்.பி பினான்ஸ் 4 -2 ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ்

கோல் பெற்றவர்கள்

எல்.பி பினான்ஸ் – சப்ராஸ் கைஸ் 42’,80’ நவீன் ஜூட் 70’, 89

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் – D.V.M. வீரசிங்க 82, மொஹமட் றியாஸ் 86


ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் எதிர் எக்ஸ்போ லங்கா

முதல் பாதியில் பொறி கலங்கும் ஆட்டத்தினை வெளிப்படுத்தி ஐந்து கோல்களை பெற்றுக்கொண்ட எக்ஸ்போ லங்கா அணியினர் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்சினை இப்போட்டியில் 6-2 என வீழ்த்தி பிரிவு A இல் தமது இந்த  இறுதிப் போட்டியுடன் முன்னிலை பெற்றுக்கொண்டனர்.

இலங்கையின் முதல்தர கால்பந்து கழகமான கொழும்பு கால்பந்து கழகத்தின் அனுசரணையாளர்களான எக்ஸ்போ லங்கா அணிக்காக 15ஆவது நிமிடத்தில் முதல் கோலினைப் பெற்ற சர்வான் ஜோகர் தமது தரப்பிற்கான கோல் பெறும் வாயிலை திறந்து வைத்தார்.

ஜோகரின் கோலினை அடுத்து ஐந்து நிமிடங்களில் நிரான் கனிஷ்க தனது முதல் கோலினைப் பெற்று எக்ஸ்போ லங்காவின் மொத்த கோல்களினை அதிகரித்தார்.

மூன்றாம் கோலினை டிலான் கெளசல்ய எக்ஸ்போ லங்காவிற்காக பெற, கனிஷ்க மீண்டும் 38ஆவது நிமிடத்தில் கோலொன்றினைப் பெற்றார். போட்டியின் முதல் பாதி 41ஆவது நிமிடத்தில் கெளசல்ய பெற்ற இரண்டாவது கோலுடன் முற்றுப் பெற்றது.

முதல் பாதி : ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் 0 – 5 எக்ஸ்போ லங்கா

போட்டியின் இடைவேளையின் பின்னர் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் சார்பாக முதலாவது கோல் 52ஆவது நிமிடத்தில் ஹர்ஷ திசரவினால் பெறப்பட்டது. எனினும், மீண்டுமொரு தடவை சிறப்பாக செயற்பட்டிருந்த கனிஷ்க 58ஆவது நிமிடத்தில் தனது ஹட்ரிக் கோலினைப் பூர்த்தி செய்ய, எக்ஸ்ப்போ லங்கா அணி அதிவலுவான நிலைக்கு சென்றது.

அந்த கோலுடன் கோல்கள் பெறுவதனை எக்ஸ்ப்போ லங்கா நிறுத்திக்கொண்டது. போட்டி நிறைவடைய 18 நிமிடங்களின் முன்னர் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் அணி கோல் ஒன்றினைப் பெற்றிருந்தது.

முழு நேரம் : ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் 2 – 6 எக்ஸ்ப்போ லங்கா

கோல் பெற்றவர்கள்

ஸ்ரீ லங்கா ஏர்லைன்ஸ் – ஹர்ஷ திசர 52’, R.M. குமார 72

எக்ஸ்போ லங்கா – சர்வான் ஜோஹர் 15, நிரான் கனிஷ்க 20’,38’,58’, திலான் கெளசல்ய 24’,41

Team P W D L GF GA GD Pts
Expo Lanka 1 1 0 0 6 2 4 3
LB Finance 1 1 0 0 4 2 2 3
Sri Lankan Airlines 2 0 0 2 4 10 -6 0

காலிறுதிக்கு முன்னைய சுற்றில் சௌண்டர்ஸ், ராணுவப்படை மற்றும் கிறிஸ்டல் பெலஸ் அணிகள்

தற்பொழுது நடைபெற்று வரும் 2016/17ஆம் பருவகாலத்திற்கான FA கிண்ண கால்பந்து சுற்றுத் தொடரில் 32 அணிகள்..

பிரிவு B

கொமர்ஷல் வங்கி எதிர் செலிங்கோ காப்புறுதி

முதற்பாதியில் 2-0 என முன்னிலை பெற்ற செலிங்கோ காப்புறுதி அணியினர், ஆட்டத்தின் முழு நேரத்தின்போது 3-0 என இலகு வெற்றியினை பெற்றுக்கொண்டனர்.

கோல் பெற்றவர்கள்

செலிங்கோ காப்புறுதி – B.H. நிஷாந்த 10’, மதுசங்க சம்பத் 15’, 58’


லேக் ஹவுஸ் எதிர் ஹட்டன் நஷனல் வங்கி

இந்த ஆட்டத்தில் அதி சிறப்பாக செயற்பட்ட ஹட்டன் நஷனல வங்கியானது 40 என லேக் ஹவுஸ் அணியினரை வீழ்த்தியது. போட்டியின் முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்றிருந்த ஹட்டன் நஷனல் வங்கி, தேசிய அணியினதும், ரட்னம் விளையாட்டுக் கழகத்தினதும் முன்னாள் வீரரும் சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தற்போதைய முன்கள வீரருமான  கிறிஷாந்த அபேசேகர பெற்றுக்கொண்ட ஹட்ரிக் கோலுடன் போட்டியின்வெற்றியாளர்களாக மாறியது.

கோல் பெற்றவர்கள்

 

ஹட்டன் நஷனல் வங்கி – கிறிஷாந்த அபேசேகர 19’, 48’, 56’ ஷமான் அஸ்மி 24’ 

செலிங்கோ காப்புறுதி எதிர் லேக் ஹவுஸ்

பார்வையாளர்களை பல தடவைகள் நகம் கடிக்க வைத்த இந்தவிறுவிறுப்பான ஆட்டத்தில், 4-3 என லேக் ஹவுஸ் அணியினரை வீழ்த்தியசெலிங்கோ காப்புறுதி அணி தமது பிரிவில் இரண்டாம் இடத்தினைப்பெற்றுக்கொண்டது.

 

கோல் பெற்றவர்கள்

செலிங்கோ காப்புறுதி – மதுசங்க சம்பத் 8’, 40’, அன்டொன் ரெய்மோன்ட் 10’, மொஹமட் ரமீஸ் 12

லேக் ஹவுஸ் – துமிது ஹெட்டியராச்சி 20’, 50’, M.B. சுரேந்திரன் 45

ஹட்டன் நஷனல் வங்கி எதிர் கொமர்ஷல் வங்கி

முதல் பாதியில்  பெற்றுக்கொண்ட இரண்டு கோல்களுடன் 2-0 என ஹட்டன் நஷனல் வங்கி கொமர்ஷல் வங்கியினை வீழ்த்தி மூன்றாம் வாரத்தில் தமது பிரிவிற்கான அட்டவணையில் முதல் இடத்தினைப் பெற்றுக்கொண்டது.

 

கோல் பெற்றவர்கள்

ஹட்டன் நஷனல் வங்கி- கிறிசாந்த அபேசேகர 25’, L. செனவிரத்ன 27’

ஏனைய போட்டி முடிவுகள்

ஹட்டன் நஷனல் வங்கி 0 – 0 ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங் 0 – 0 கொமர்ஷல் வங்கி

Team P W D L GF GA GD Pts
HNB 3 2 1 0 6 0 6 7
Ceylinco Insurance 2 2 0 0 7 3 4 6
JKH 2 0 2 0 0 0 0 2
Commercial Bank 3 0 1 2 0 5 -5 1
Lake House 2 0 0 2 3 8 -5 0